புகழை நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள்

புகழை நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள்நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)(குறிப்பு:- நாங்கள் இலண்டனில் ஒரு மாடி வீட்டில் வசிக்கிறோம். அந்த வீட்டின் கூரை நாலு பக்க மேற்சுவரில் அமைந்து, இரண்டு அடிகள் நீளத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. மேற் சுவருக்கும் கூரைக்குமிடையில் உள்ள சிறு இடைவெளியால் பறக்கும் உயிரினங்கள் அறைக்குள் புகாதவாறு அந்த இடைவெளியைச் சுற்றிவரப் பலகையால் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பின் சுவர்ப்பக்கத்தில் தோட்டமும், பூந் தோட்டமும் உள்ளன. அன்றொருநாள் தோட்டத்தில் உலா வருகையில் பல தேனீக்கள் பறப்பதைக் கண்டு, மேலே அண்ணாந்து பார்த்த பொழுது கூரைப் பலகையில் இரண்டு துளைகள் இருப்பதையும் அதனூடாகத் தேனீக்கள் உட்புகுவதும், வெளியில் வருவதுமாய் இருப்பதை அவதானித்தேன். இதை வீட்டாரும் வந்து பார்த்தனர். இதை ஒரு கிழமைவரையில் பார்த்து வந்தோம். ஒரு கிழமை சென்றதும் தேனீக்கள் அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டன. தேனீக்கள் எங்களில் ஐயுறவு கொண்டு வேறொரு இடத்துக்குச் சென்று விட்டதை உணர்ந்து வருந்தினோம். இது என்னை மிகவும் தாக்கி விட்டது. அதனால் எழுந்தது இக் கட்டுரையாகும்.  – நுணாவிலூர் கா. விசயரத்தினம்.)

Continue Reading →

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்!

- வெங்கட் சாமிநாதன் -(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present  என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிஸம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜீ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அடுத்தது வாஸந்தியின் காதல் பொம்மைகள் பற்றி எம். விஜயலக்ஷ்மி எழுதிய Indian Feminism – Vaasanti style என்ற கட்டுரையும் தான் இப்போது என் கட்டுரையின் மற்ற பக்கங்களிலிருந்து நான் இப்போது பெறக்கூடியவை. இந்த இதழுக்கு பின் வரும் கட்டுரை தவிர, அ.க. பெருமாளின்  தோல் பாவைக் கூத்து பற்றிய புத்தகம் ஒன்றுக்கும் மதிப்புரை ஒன்றை நான் எழுதித்தந்திருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அது இப்போது கிடைப்பதாயில்லை.  கிடைப்பது பின் வரும் கட்டுரை ஒன்றுதான்.)

Continue Reading →

கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் தெரிவானோர் விபரம்

கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் தெரிவானோர் விபரம்

திருகோணமலை-  கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களின் விபரம் வருமாறு :

1.-சிறந்த சிறுகதை நூலுக்கு முஸ்டீன் (ஹராங்குட்டி),

2. சிறந்த கவிதை நூல்
மு.சடாட்சரன் (பாதை புதிது),
 எஸ். பாயிஸா அலி (பாயிஸா அலி கவிதைகள்),

Continue Reading →

அக்டோபர் 2013 கவிதைகள்!

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

– எம்.ரிஷான் ஷெரீப்

அக்டோபர் 2013 கவிதைகள்!

மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

Continue Reading →