பயனுள்ள மீள்பிரசுரம்: எனதருமை டால்ஸ்டாய்

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும்ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும். அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே, ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள்.  நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள். அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்,  பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,

Continue Reading →

மீள்பிரசுரம் (காலச்சுவடு): நேர்காணல்: அலிஸ் மன்றோ காத்திராப்பிரகாரம்

மீள்பிரசுரம் (காலச்சுவடு): நேர்காணல்: அலிஸ் மன்றோ காத்திராப்பிரகாரம்[ கனடிய எழுத்தாளரான அலிஸ் மன்றோ 2013 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். அதனையொட்டி காலச்சுவடு இதழில் வெளியான இந்நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. அலிஸ் மன்றோவுடனான இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். – பதிவுகள் ] டொரன்டோவில் ஒரு நாள் மாலை ‘பென் கனடா’ என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது. கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர் வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ் மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத் தேடித்தேடிக் களைத்துப்போயிருந்தேன். அந்த நேரம், அந்தக் கணம் என் மனத்தில் ஒரு வார்த்தை வந்து விழுந்தது. காத்திராப்பிரகாரம். ஐம்பது வருடங்களாக அழிந்துபோன அந்த வார்த்தைதான் என்னுடைய அந்த நேரத்து உணர்வைப் படம் பிடிப்பதாக இருந்தது. அலிஸ் மன்றோவின் பேச்சு நிதானமாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் அமைந்தது. ஒரு புத்தகம் அச்சில் இருப்பதாகவும் அது வெளிவந்ததும் தான் எழுதுவதை நிறுத்திவிடப் போவதாகவும் அறிவித்தார். அரசியல்வாதிகள் இப்படி அறிவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒய்வு பெறப்போவதாக அறிவித்ததை நேரிலே கண்டது எனக்கு அன்று தான் முதல் தடவை.

Continue Reading →