செல்வி சஸ்கியா யோகராஜாவின் அரங்கேற்றம் சென்னையில்

செல்வி சஸ்கியா யோகராஜாஇங்கிலாந்து சலங்கை நர்த்தனாலய நுண்கலைக்கூடத்தின இயபக்குனர் நாட்டிய விஷாரத் ஜெயந்தி யோகராஜாவின் மகளும்,  மாணவியுமான  செல்வி சஸ்கியா யோகராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆவணிமாதம் 24ம் திகதி இந்தியாவில் சென்னை மியூசிக் அக்கடமியில் கலைமாமணி நரசிமமாச்சாரிää கலாஷேத்திரா அதிபர் ஜனார்த்தனன் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. செல்வி சஸ்கியாவிற்கு ‘நாட்டிய ரூபினி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டமை சிறப்பாம்சமாகும். அரங்கேற்ற நிகழ்வின்போது ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் ‘ராஜேஸ்வரி நர்த்தனம்’ என்னும் பாடல்இறுவெட்டினை வேதம் புதிது மியூசிக் இயக்குநர் தேய்வேந்திரன்,  ‘கலைமாமணி ஷோபனா ரமேஷ்,  ‘கலைமாமணி’ லலா ஆறுமுகஐயா,  ‘கலாரத்தினா’  உமா சங்கர்ää இந்திய ரயில்த் திணைக்கள கவன்சிலர் ஆர். பத்மநாபன்,  ஆண்டான் கோவில் சுந்தரராஜன் ஆகியோரினால் வெளியிடப்பட்டு ஜெயந்தி யோசராஜாவிற்கு ‘ராஜேஸ்வர நர்த்தகி’ என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. ராஜேஸ்வர நர்த்தனம் என்னும் இறுவெட்டு நாட்டிய மார்க்கம் அடங்கிய புதிய பாடல்களைக்கொண்டது. இதன் பாடல்வரி,  இயக்கம் அனைத்தும் ஜெயந்தி யோகராஜாவினால் ஆக்கப்பட்டது. இவர் கடந்த வருடம்  காலம் சென்ற தன் தயார் ராஜேஸ்வரி அன்ரனிரட்னம் அவர்களின்  நினைவாக வெளியிட்டிருந்தார். 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 29 : வெ.சா.வின் ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும்.

வாசிப்பும், யோசிப்பும் - 29 : வெ.சா.வின்  'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும்.வெ.சா.அவர்கள் தனது  ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையில் “வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.” என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம்.  தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.  தோலாமொழித்தேவர் இயற்றிய ‘சூளாமணி’யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.

Continue Reading →

தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்!

- வெங்கட் சாமிநாதன் -வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. மறைந்த கலைஞனின் ஆளுமையையும் நேர்மையையும் பிரதிபலிப்பதே போல, மிக எளிமையான மிகுந்த தன்னடக்கம் கொண்ட, எவ்வித பகட்டும் அற்ற அவருடன் கொண்ட தங்கள் பாசத்தையும் அவரது ஆளுமையும் செயலும் தங்களுக்குத் தந்த வியப்பையும் பதிவு செய்துள்ள அஞ்சலி இது. வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்.  தன்னடக்கம், எளிமை என்றேன். ஆளுமையும் செயல் திறனும்  தந்த  வியப்பு என்றேன். இவையே அவரை அந்த சோக முடிவுக்கு இழுத்துச் சென்றதோ என்னவோ.

Continue Reading →