அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827  HIGH STREET, EPPING, VIC 3076 – Melway :-  182 B10 ) இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு, ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் & ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய ஒரு கலந்துரையாடல், ‘பாரதம் தந்த பரிசு’,  ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’, ’ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ நூல்கள் அறிமுகம். ’பாலகாத்தான்’ (காத்தவராயன்)கூத்து மற்றும் கானமழை (இன்னிசை நிகழ்ச்சி) என்பவை இடம்பெறும்.

அன்று நடைபெறும் ’அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியில்’ உங்கள் புத்தகங்களும் இடம்பெறவேண்டுமாயின் – நீங்கள் புலம்பெயர்ந்த்தன் பிற்பாடு எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் பிரதி ஒன்றை அனுப்பி வைக்கலாம். இந்தப்புத்தகங்கள் மீள உங்களுக்கு கையளிக்கப்படமாட்டாது. அவ்வப்போது நடைபெறும் புத்தகக்கண்காட்சிகளில் அவை காட்சிப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு

Continue Reading →

லண்டனில் ‘குவர்னிகா’ நூல் அறிமுகவிழா!

லண்டனில் ‘குவர்னிகா’ நூல் அறிமுகவிழா! “ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது ஜேர்மனிய நாசிப் படைகள் குண்டுவீசி ஐயாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று ஒழித்த சற்றூரான ‘குவர்னிகா’, குண்டுகளுக்கு இரையான எல்லாத் தேசங்களுக்குமே பொருந்துகின்ற குறியீடாகும். ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு மிகப் பொருத்தமான முகப்புத் தலைப்பாக ‘குவர்னிகா’ என்ற தலைப்பைத் தாங்கி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்பு மலராக இந்த மலர் வெளிவந்திருப்பது ஒரு காலத்தின் தேவையை நிறைவு செய்யும் இலக்கிய முயற்சியாக நோக்கத்தக்கதாகும்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை(6.10.2013) வால்த்தம்ஸ்ரோவில் நடைபெற்ற ‘குவர்னிகா’ மலர் வெளியீட்டின்போது தலைமையுரை  ஆற்றுகையில் தெரிவித்திருந்தார்: “பன்னிரெண்டு நாடுகளில் இருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான ஆக்கங்களைத் தாங்கி எண்ணூறு பக்கங்களில் மிகப் பாரிய தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘குவர்னிகா’ ஷோபாசக்தி, கருணாகரன, தமயந்தி போன்றோரின் மிகப்பெரும் உழைப்பில் உருவாகி உள்ளது. யுத்த மறுப்பையும், ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பு நிகழ்வுகளையும், சாதிய எதிர்ப்பையும், பெண்விடுதலையையும், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் பேசும் பெரும் தொகுப்பாக ‘குவர்னிகா’ மலர்  அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் புகலிட நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்புக்களின்போது வெளியான சுகனின் ‘இருள்வெளி’, கலைச் செல்வனின் ‘இனியும் சூல்கொள்’ ஆகிய மலர்களை அடுத்து மிகப்பெரும் உழைப்பில் உருவாகியுள்ள ‘குவர்னிகா’ என்ற இந்த மலர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பின் மகுடமாக அமைகிறது” என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

Continue Reading →

ஏ.ஜே.கனகரத்னா: பல்துறை இணைவுப் பார்வையை நோக்கி

[ அமரர் ஏ.ஜே.கனகரத்னாவின் நினைவு தினம் அக்டோபர் 11. அதனையொட்டி ‘பதிவுகள்’  இதழ் 38இல் (பெப்ருவரி 2003) வெளியான யமுனா ராஜேந்திரனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் – ]

(1). மத்து : மித்ர: சென்னை: மறுபிரசுரம் : டிசம்பர் 2000.  (2). மார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்குகள் : அலை வெளியீடு : யாழ்ப்பாணம் 1981.  (3). செங்காவலர் தலைவர் யேசுநாதர் : மித்ர : சென்னை : டிசம்பர் 2000 

ஏ.ஜே.கனகரத்னாஅக்டோபர் புரட்சி தொடங்கி இரண்டாயிரமாண்டு இறுதிவரையிலான ஆண்டுகள் , உலகின் மிகப்பெரிய வரலாற்று உற்பவங்களுக்குச் சாட்சியமாக இருக்கிறது. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சியும், அதைத் தொடர்ந்து சமவேளையில் முதலாளித்துவத்துக்கும், அதிகாரவர்க்க சோசலிசத்திற்கும் எதிரான கலாச்சார விமர்சகர்களும் படைப்பாளிகளும் தோன்றினர் இலக்கியவாதியான ஸார்த்தர், கோட்பாட்டாளரான மார்க்யூஸ், உளவியல் ஆய்வாளரான எரிக் பிராம், பொருளியலாளரான கென்னத் கால்பிரெய்த் போன்றவர்கள் அக்கால கட்டத்தில் முக்கியமான சிந்தனையாளர்களாக இருந்தனர். எண்பதுகள் அதிகார வர்க்க சோசலிசத்தின் வீழ்ச்சியும், தேசிய இன எழுச்சிகளின் உச்சபட்ச வீச்சும் நிகழ்ந்த ஆண்டுகளாகின. இருபதாம் நு¡ற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், உலக முதலாளித்துவம், ‘உலகமயமாதல்’ எனும் புதிய பெயராகியிருக்கிறது. சோசலிசத்தினதும் இடதுசாரிக் கோட்பாட்டினதும் கோஷங்களை இன்று மதவழிப்பெருந்தேசியம் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டது. இனக்குழுக்களுக்கிடையிலான போர்களும், விளிம்பு நிலை மக்களுடைய வேட்கைகளும், பெண்விடுதலை குறித்த பிரக்ஞையும் எமது நாடுகளில் புதிய வீறுடன் எழுந்திருக்கிறது. ஏ.ஜேயின் எழுத்துக்கள் இந்தக் கால இடைவெளியில் நிகழ்ந்த அறிவுத்துறை நடவடிக்கைகளைத் தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறது. வரலாற்று உற்பவங்களுக்கு ஆதாரமாகவிருந்த, உலகைக் குலுக்கிய முக்கியமான புத்தகங்கள், தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மார்க்சீய அழகியல் தொடர்பான விவாதங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.  இந்த நு¡ற்றாண்டு அறிவுப் பரப்பின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தில் அறிமுகம் கொள்ள நினைக்கிறவர்களுக்கு நிச்சயமாகவே நாம் ஏ.ஜே.யின் எழுத்துக்களைப் பரிந்துரைக்கமுடியும்.

Continue Reading →