‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ நூலை முன் வைத்து…

[ பதிவுகள் ஜூன் 2004 இதழ் 54 இதழில் வெளியான கட்டுரை.-] இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது.  அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.  இந்த நிலையில் மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ என்ற நு¡ல் வெளிவந்திருக்கிறது.  சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி’ மற்றும் குட்டிரேவதியின் ‘முலைகள்’ தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் ‘ஒப்பந்தம்’ என்ற கவிதையில் கூட

‘எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி’

என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில்  எடுத்துப் போட்டிருந்தார்கள்.  அதனு¡டாக சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது.  ‘காமத்துப்பால் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. ‘முலைகள்’ போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணு¡றுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.

Continue Reading →