வணக்கம் ,தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது.
தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாற்றையும் இருத்தலையும் இலக்கிய இயங்கியலையும் கொண்ட மொழி எனும் கருத்தியலுக்குச் சான்றாகத்திகழ்வனவற்றுள் ஒன்றாக விளங்குவது முச்சங்க வரலாறும் ஆகும். இச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருளுரை சில கருத்தியல்களை முன்வைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியம் சங்கங்கள் குறித்துச் சிலகருத்தியல்களை முன்வைக்கும் பொழுதும் இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் கருத்தியல்களே ஆய்வாளர் பலராலும் விவாதப்படுத்தப் பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் சங்கங்கள் குறித்த கால எல்லை வரையரையும் வீற்றிருந்த மன்னர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை, முதலானவற்றின் மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளே இவ்விவாதங்களுக்கான காரணிகளாகின்றன. சங்கங்கள் குறித்த பதிவுகள் உண்மை என நிறுவுவோர் தங்களுக்கு ஆதாரமாக விளங்கும் சான்றுகளைக் கொண்டும் அவை உண்மையான நடப்பிலுக்குப் புறம்பானவை எனக் கருதுவோர் தங்களுக்குரிய ஐயப்பாடுகளைக் கொண்டும் விவாதித்து வருகின்றனர்.