தமிழ் இலெமுரியா- தமிழர் திருநாள் சிறப்பிதழ்

தமிழ் இலெமுரியா- தமிழர் திருநாள் சிறப்பிதழ்அன்புடையீர், வணக்கம். தமிழர் திருநாள்-புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் இலெமுரியா தை 2045 ( 14 சனவரி  2014) தமிழர் திருநாள் சிறப்பிதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com   மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளை மட்டுமே  தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். ஈழம் குறித்து ரவி நாயரின் கட்டுரை, சண்.தவராசா,தோழர் நல்லகண்ணு, சஞ்சீவ்குமார், ம.இலெ.தங்கப்பா, குமணராசன், சுப.கரிகால் வளவன், சீர்வ்ரிசை சண்முகராசன், ’விழிகள்’ நடராசன் ஆகியோரின் கருத்தோவியங்கள், மகராட்டிரா மாநிலத்தில் ஆட்சியர்களாகத் தமிழர்கள் – நேர்முகம், வளமான கவிதைகள் என தித்திக்கும் பொங்கலாய் தமிழர் திருநாள் சிறப்பிதழ் மிளிர்கின்றது.

Continue Reading →

மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களின் நேர்காணல்கள் வெளியீட்டுவிழா!

12.01.2014 ஞாயிறு மாலை 5 மணி. ஹோட்டல் பெனின்சுலா, ஜிஎன் செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை. அனைவரும் வருக! I.IshaqThamiz Alai Media Worldhttp://www.thamizalai.blogspot.comtamilalai@gmail.com

Continue Reading →

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 – நிகழ்வரங்கம் 19.01.2014!

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வரங்கம் 19.01.2014!வணக்கம், தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. இதுவரையில் இந்நாள்; வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருந்தபோதிலும், இது தற்போது தமிழர் நாளாக- தமிழரின் அடையாள நாளாக – ‘தமிழர் திருநாளாக’ – தற்போது புதிய வாழ்வியல் சூழலுக்கு அமைவாக பரிணாமடைந்து வருகிறது. இதற்கமைவாக எம்மாலான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். 

Continue Reading →