எதிர்வினை: மனித நேயம்

- குரு அரவிந்தன்வாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் ‘அன்புக்கு அஸ்வினி’ என்ற பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அத்தகைய உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கூட அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வு பெற்ற ஒருவர் தெரு நாய்களுக்குத் தினமும் உணவு ஊட்டுவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வைக்கும் அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.

Continue Reading →

இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

 – *இது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள குறுநூல் வரிசையில் பிரசுரமாகியுள்ளது. 100க்கும் மேற்பட்ட குறுநூல்கள் 10 ரூபாய், இருபது ரூபாய் அதற்குட்பட்ட விலைகளில் பலதரப்பட்ட சமூக இலக்கிய கருப்பொருள்களில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் இத்தகைய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. நூல்கள் வேண்டுவோர் ungalnoolagam@gmail.com ஐ தொடர்புகொள்ளவும். –

இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு

latha ramakrishnanஇலக்கியம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம் என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறோம். எழுத்தின் வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில் சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.

உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில், காலங்காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில், அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப் படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர் இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

Continue Reading →

சிறுகதை: அடைக்கலம்

எழுத்தாளர் சுதாராஜ்நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, ப+ச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள்.

“இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன்.

அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ஏதாவது குறைதானே…? சரி, சரி! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்ந்தது போதும்!” எனத் தனது மகிழ்ச்சியை மனக்குறை போல வெளிப்படுத்தினாள்.

 “நான் அதைச் சொல்லயில்லை..!”

“குருவிப்பிள்ளையள் கூடு கட்டுகினம்!”

“உண்மையாவா?” ஆச்சரியம் அவள் முகத்தில் மலர்ந்தது.

Continue Reading →

சிறுகதை: மெல்லுணர்வு

நோயல் நடேசன்குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி  மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானதால் அவசரத்தில் உள்ளே இருந்து வெளிவர துடிக்கும் சிறுவன் கதவைத் தட்டுவது போல் நெஞ்சாங் கூடு அதிர்ந்தது. சேரா குளிருக்காக போரத்தியிருந்த மண்ணிற கம்பிளி போர்வையின் ஊடாக அவளது கைகளின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்தபோது  கழுத்தை திருப்பி மெதுவாக என்ன என்பது போல் சிரித்தாள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 33 : புஷ்பராணியின் ‘அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’

a_pushparanee.jpg - 4.87 Kbbook_akaalam.jpg - 10.53 Kbஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது ‘அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)’ என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடாக வெளிவந்த நூல்.  

Continue Reading →