அவுஸ்திரேலியா: இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் – அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியா: இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் - அனுபவப்பகிர்வுஅன்புள்ள கலை, இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு  பொங்கல்  வாழ்த்துக்கள். எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் – மெல்பனில் இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ்      என்ற தலைப்பில் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளோம்.

நடைபெறும் இடம்: Darebin Intercultural Centre ( 59 A, Roseberry Avenue, Preston, Victoria – 3072)
காலம்: 23-02- 2014  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 1  மணிவரை

Continue Reading →

சிறுகதை: இயற்கைக்காட்சி

சிறுகதை: இயற்கைக்காட்சி - கடல்புத்திரன் -என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான சாத்தியமும் இருக்கிறது தான். அதன் ஆசிரியர் ஜேம்ஸ், சில அலம்பல்களை வெட்டி எடிட் பண்ணி, சனிக்கிழமை வாரமலரில் போட்டு விடுவார்.அவருடைய  முதல் கதை பிரசுரமான போது அவரிமிருந்து சிறு கடிதமும் வந்திருந்தது.”இளம் எழுத்தாளரே (உச்சி குளிர்ந்து விட்டது) தொடர்ந்து எழுதும். உம்முடைய எழுத்தில் ஒரு கதை ஒளிந்து கிடக்கிறது”என்று எழுதியிருந்தார். ‘கதை’ கிடையாவிட்டால் மெளனம்! இவர் புரிந்து கொள்வார். இவர் அதை மீள வாசித்து திருத்தம் செய்து செப்பனிட்டு மீள ஒரு தடவை எழுதுவார்.அதை 2 நாள் விட்டு எடுத்து வாசிக்கிற போது சிலவேளை அவருக்கு திருப்தி இல்லாமலும் இருக்கும்.அதை திருத்தி, செருக..அது புதிய பாதையில் பயணிக்கும்.அப்படி அவர் ஒரு கதையை 5 தடவைகள் கூட எழுதியிருக்கிறார்.அதற்குப் பிறகு யோசியாது பலகணிக்கு அனுப்பி விடுவார். ஜேம்ஸுற்கு தான்  சித்திரவதை. அப்படி இருந்த 3 கதைகளை சேர்த்து ஒரு நாவல் போல அனுப்பினார். பலகணியில் தொடராக வந்து விட்டது.

Continue Reading →

சிறுகதை -”-சுடுதண்ணிப் பாசா ”

கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்)தண்ணீர், தண்ணீர், தண்ணீர், என கண்களைச் சுழற்றிய எல்லா திசைகளிலிருந்தும்,தண்ணீரே  உலக நாயகியாய் ஓங்கரிக்க, காற்று ஊழியாய்  வீசியடித்தது. தண்ணென்ற ஜல சமுத்திரத்தில் விர்ரென்று போய்க்கொண்டிருந்தது கப்பல். சுருண்டு கிடந்தாள் நாணிக்குட்டி. கப்பல் பயணத்தில் இவளைப் போலவே பலருக்கும் தலைசுற்றலும் வாந்தியும் படுத்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தது.
என்றாலும் ஆண்களில் சிலர் அனுமதி வாங்கி  கப்பலின் மேல்பரப்பில் போய் நின்று கொண்டு ஒருநோக்கு  ஜலசமுத்திரத்தை பார்த்துவிட்டே வந்தார்கள். குஞ்ஞு குட்டன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான்..அப்படி உற்சாகமாக இருந்தது.பின்  என்ன ? பச்சை நரம்பு புடைத்த வீர்யம் மிக்க தரவாட்டு நாயராக்கும். இல்லையென்றால் வேறொருவனுக்கு மணம் நிச்சயிக்கப்பட்ட நாணிக்குட்டியை, ராவோடு ராவாக இழுத்துக்கொண்டு ஓடிவரும்  துணிச்சல் எவனுக்கு வரும் ?  என்னமாய்  பெண் இவள்.? குடும்பப் பகை காரணமாக , சிங்கப்பூர் மாப்பிள்ளை  என்று தெரிந்தும்கூட ,பெண் கொடுக்க மறுத்த” பூவில’ தரவாட்டுக்கே மூக்கறுபட்ட அவமானத்தை கொடுக்கவும் நடு முதுகு நிமிர்வு வேண்டாமா ? இத்தனைக்கும் ”என்னோடு சிங்கப்பூரிக்கு வரியா,” என்று கேட்டது கூட ஒரு முரட்டு வேகத்தில் தான். மறுபேச்சில்லாமல் வெட்கப்பட்டுச் சிவந்தவள்  அவன் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டாள். ஆச்சரியம் தான்! இவளுக்கும் என் மீது இவ்வளவு ஆசையிருந்ததா ?

Continue Reading →