Statement — Minister Kenney issues statement to mark Thai Pongal Ottawa, January 14, 2014 — The Honourable Jason Kenney, Minister…
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய்
உங்கள் மனமும் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!
இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவரும், சிறந்த சஞ்சிகையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி நின்றவருமான அன்புமணி (இராசையா நாகலிங்கம்) அவர்கள் இயற்கை எய்திய செய்தி மனதை உலுக்கி நின்றது. இப்போது தான் பேசினோம். அதற்குள்… மனம் கவலை கொள்கிறது. சிறுகதையாளனாக, நாவலாசிரியனாக, கட்டுரையாளனாக, விமர்சகராக, நாடக ஆசிரியராக, நடிகனாக, நாடக இயக்குனராக, இதழாசிரியனாக, நல்ல நேர்காணலாளராக, நண்பனாக வலம் வந்தவர். 06/03/1935இல் ராசையா/தங்கமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். தமிழின் மீதான அளப்பரிய ஈடுபாடே அவரின் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களாக வைத்து அழகு பார்த்தார். மட்டக்களப்பு ஆரையம்பதி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆரையம்பதி சிறி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியை முடித்தபின் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பயின்றார்.அந்த நாளைய கல்வித் தராதரக்(எஸ்.எஸ்.சி) கல்வியை கற்று முடித்தவர் லிகிதராக,உதவி அரசாங்க அதிபராக,உள்துறை உதவி செயலாளராகவும், சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அவர்களின் செயலாளராகவும் பணி புரிந்தார். இவரின் படைப்புக்களை மலர், தினகரன், கல்கி, செங்கதிர், ஞானம், தாரகை, வீரகேசரி, சாளரம், வெளிச்சம், தொண்டன், எனப் பல அச்சு ஊடகங்களும், ஒலி/ஒளி ஊடகங்களும் தாங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செங்கதிரின் வளர்ச்சியிலும் ஊக்குசக்தியாக இருந்திருக்கிறார். மனித நேயம் மிக்கவர்.எப்போது நான் தொலைபேசியில் அழைத்தாலும் அன்பாக பேசி என்னைக் கவர்வார்.ஆரம்பத்தில் ‘மலர்’ எனும் இலக்கிய சஞ்சிகையை நடத்தினார்.பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.இலக்கிய அனுபவம்,ஆளுமை மிக்கவர்.செ.யோகநாதனின் ‘தோழமை என்றொரு சொல்’ மலர் வெளியீடாகவே வெளிவந்தது.