ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிசிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவரின் பிரபந்தங்கள் அடங்கிய “உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானிடபாகமும் எனும் பெருந் தொகுதி வெளியீட்டு விழா. 2014ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் திகதி அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூhயில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் நகரபிதா வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகப் புலவர் இல்லத்திற்கு முன்னால் உள்ள யோகர் சுவாமிகள் போற்றிய துவாளிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ப10ஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் அவ்வாலயத்திலிருந்து பிரபந்தப் பெருந்திரட்டு மதகுருமார்கள், சமயப் பெரியார்கள், அறிஞர்கள் இலக்கியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் புடை சூழ மங்கள வாத்தியங்கள் சகிதம் புலவர் ஊஞ்சல் பாடிய வல்லைவாளிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டது.