12.01.2014 ஞாயிறு மாலை 5 மணி. ஹோட்டல் பெனின்சுலா, ஜிஎன் செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை. அனைவரும் வருக! I.IshaqThamiz Alai Media Worldhttp://www.thamizalai.blogspot.comtamilalai@gmail.com
வணக்கம், தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. இதுவரையில் இந்நாள்; வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருந்தபோதிலும், இது தற்போது தமிழர் நாளாக- தமிழரின் அடையாள நாளாக – ‘தமிழர் திருநாளாக’ – தற்போது புதிய வாழ்வியல் சூழலுக்கு அமைவாக பரிணாமடைந்து வருகிறது. இதற்கமைவாக எம்மாலான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவை, பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி. பேசிய வெளி – சென்னையிலுள்ள பெண்கள் சந்திப்பும் சென்னை பல்கலைக் கழக தமிழிலக்கிய துறையும் இணைந்து நடத்திய 2 நாள் (ஜனவரி 3, 4, 2014) கருத்தரங்கம். சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம். இதை மும்பையை சேர்ந்த புதிய மாதவி சாத்தியப்படுத்தினார். பேசுவதற்கான பின்னணி – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றிய உரையாடல். இந்த கருத்தரங்கு நடந்த இரண்டு நாட்களிலும் பொது அமர்வுகள் இருந்தன, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பெண்கள் சந்திப்பும் இவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தன.
வணக்கம் ,தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது.
தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாற்றையும் இருத்தலையும் இலக்கிய இயங்கியலையும் கொண்ட மொழி எனும் கருத்தியலுக்குச் சான்றாகத்திகழ்வனவற்றுள் ஒன்றாக விளங்குவது முச்சங்க வரலாறும் ஆகும். இச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருளுரை சில கருத்தியல்களை முன்வைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியம் சங்கங்கள் குறித்துச் சிலகருத்தியல்களை முன்வைக்கும் பொழுதும் இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் கருத்தியல்களே ஆய்வாளர் பலராலும் விவாதப்படுத்தப் பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் சங்கங்கள் குறித்த கால எல்லை வரையரையும் வீற்றிருந்த மன்னர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை, முதலானவற்றின் மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளே இவ்விவாதங்களுக்கான காரணிகளாகின்றன. சங்கங்கள் குறித்த பதிவுகள் உண்மை என நிறுவுவோர் தங்களுக்கு ஆதாரமாக விளங்கும் சான்றுகளைக் கொண்டும் அவை உண்மையான நடப்பிலுக்குப் புறம்பானவை எனக் கருதுவோர் தங்களுக்குரிய ஐயப்பாடுகளைக் கொண்டும் விவாதித்து வருகின்றனர்.

– ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். – பதிவுகள் –
“வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்….உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்…..”
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும். அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுது அந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.
மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். ‘அம்மாவின் ரகசியம்’ எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள ‘உடவளவ’ எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான ‘ஜனதா விமுக்தி பெரமுன’விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.
அஸ்வினி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிநின்றார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றார் பாரதியார். தெருநாய்களையும் பூனைகளையும் புரந்து காக்க அயராது பாடுபட்டுவருகிறார் அஸ்வினி. இளம்பெண். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இருந்தும் தெருநாய்களையும் பூனைகளையும் பாதுகாத்து அவற்றின் பசியாற்றி பிணிதீர்க்கும் பரிவும் பிரியமும் கரிசனமும் அஸ்வினியிடம் கடலெனப் பரந்துகிடக்கின்றன! மெல்லிய குரலில் நிதானமாக பிராணிகள் மீதான தன் பிரியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தி இந்த உலகம் அவற்றிற்குமானதுதான் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனத்தின் சார்பில் சென்னை மயிலையிலுள்ள மாநகராட்சி மழலையர் பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியையாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அஸ்வினியின் வீட்டில் எப்பொழுதுமே தெருநாய்களுக்கும், பூனைகளுக்கும் தாற்காலிகத் தங்குமிடங்களுண்டு! நாயும் பூனையும் அங்கே தோழர்களாக நட்புறவாடிக் கொண்டிருக்கும். தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாய்கள், வருவோர் போவோரின் கல்லடிக்காளாகின்றவை, நோய்வாய்ப்பட்டிருப்பவை, கருத்தரித்திருப்பவை, பிரசவித்திருப்பவை என உதவியும் சிகிச்சையும், ‘’ஸ்ட்ரெரிலைஸேஷனு’ம் தேவைப்படும் தெருநாய்களுக்கு உணவளிப்பதோடு அவற்றைத் தன் செலவில் உரிய மருத்துவமனைகளுக்குக் கூட்டிச்சென்றுவருவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். செல்லப்பிராணிகள், குறிப்பாக தெருநாய்கள் பூனைகளின் பாதுகாப்புக்கு நம்மிடையே போதுமான அமைப்புகளோ விழிப்புணர்வோ இல்லை. அப்படியிருக்கும் அமைப்புகளும் இந்த வாயில்லா உயிர்களை அலட்சியமாக நடத்தும் அவலநிலையையே பரவலாகக் காணமுடிகிறது என்று வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிறார் அஸ்வினி. மழலையர்களின் ஆசிரியையாக அவருடைய சிறந்த பணியைப் பாராட்டி சமீபத்தில் அவருக்கு ‘இன்னர் வீல்’ என்ற அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.