நூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புதான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார். இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.

Continue Reading →

தமிழ் மொழியின் சால்பை ஜேர்மன் நாட்டிற்கு அறிமுகப்படுத்திய புரட்டஸ்தாந்து மதபோதகர் பத்தலோமயுஸ் சீகன்பால்க் Bartholomaus Ziegenbalg

சீகன்பால்க் Bartholomaus - த.சிவபாலு -யூன் மாதம் 20ம் நாள் 1682ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்தவர் பத்தலோமயுஸ் சீகன்பால்க் என்னும் புரட்டஸ்தாந்த மத போதகர். துந்தை உணவுத்தானிய வியாபாரியாக விளங்கியவர். சீகன்பால்க் நான்கு மூத்த சகோதரிகளுக்கு இளையவராகப் பிறந்தார். நலிந்த உடலும் பலவீனமானவராகவும் இளமைக்காலத்தில் காணப்பட்டார். இளமையில் தாயையும் பின்னர் தந்தையையும் இழந்தார்.  புல்ஸனிட்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர் 12வது வயதில் யோர்லிட்ஸ் என்னும் இடத்திலுள்ள இடைநிலைப் பள்ளியில் சேர்ந்து உயர்கல்வியைப் பெற்றார். பாடசாலைப் பதிவேட்டில் அவரது பெயருக்குக் கீழே உடலிலும், உள்ளத்தாலும் வளர்ச்சியடையாத மாணவன் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது அவரது இளமைக்காலத்தில் அவர் எத்தககைய நிலையல் இருந்துள்ளார் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. வாலிபப்பருவத்தை அடைந்தும் ஜேர்மனியல் பிரபலமாக விளங்கிய ஜேக்கப் பௌஃமி இன் அறிந்துகொள்ளமுடியாத பரவச மனநிலையில் ஆன்மீக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் கொள்ளையின் பால் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து விடுபடமுடியாதவராக பெரும் உளப்போராட்டத்திற்கு உள்ளானார். பின்பு அதிலிருந்து விடுபட்டு 1702ல் உயர்கல்விக்காக பெர்லின் நகருக்குச் சென்றார். சுகவீனமுற்றிருந்தமையால் அவரால் கல்வியைத் தொடர்வதில் தடங்கல்கள் காணப்பட்டன. 1703ல் இறையியில் கல்வி கற்பதற்காக ஹலே என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமுற்றிருந்தார். “நான் எங்குசென்றாலும் சிலுவை என்னைப் பின்தொடரகின்றது” என அவர் தனது துன்பத்தை வெளியிட்டுள்ளார். அங்கு எரேபிய மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.

Continue Reading →