ஆஸ்திரேலியா: மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு

ஆஸ்திரேலியா: மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்குஅவுஸ்திரேலியாவில்   இயங்கும்   இலங்கை   சமூகங்களின்   கழகத்தின் ஏற்பாட்டில்    எழுத்தாளரும்   மிருக   மருத்துவருமான   டொக்டர்  நடேசனின் மூன்று   நூல்களின்  விமர்சன  அரங்கு   எதிர்வரும்  04 – 05 – 2014  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை  மெல்பனில்  பிற்பகல்  2  மணியிலிருந்து  மாலை  5  மணிவரையில்   GLENWAVERLEY   R S L    மண்டபத்தில்  (161, COLEMAN PARADE,   GLENWAVERLEY – VICTORIA – 3150)               (  GLENWAVERLEY    ரயில்   நிலையத்திற்கு  முன்பாகவுள்ள   மண்டபம்)       நடைபெறும். ஏற்கனவே   தமிழிலும்    ஆங்கிலத்திலும்   வெளியான   வண்ணாத்திக்குளம்   நாவலின்   சிங்கள    மொழிபெயர்ப்பு – சமணலவெவ – தமிழில்   வெளியான   உனையே  மயல் கொண்டு   நாவலின்   ஆங்கில மொழிபெயர்ப்பு   Lost in you         மற்றும்   இந்த   ஆண்டு   வெளியான   புதிய நாவல்    அசோகனின்   வைத்தியசாலை   ஆகிய    மூன்று   நூல்கள்  இந்த விமர்சன    அரங்கில்   திறனாய்வு    செய்யப்படும்.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—2 & 3

என்னோடு வந்த கவிதைகள்- 2 

- பிச்சினிக்காடு இளங்கோ “இட்டதோர் தாமரைப்பூ
 இதழ்விரிந் திருத்தல் போலே
 வட்டமாய்ப் புறாக்கள் கூடி
 இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
 வெட்டில்லை; குத்து மில்லை;
 வேறுவே றிருந்த ருந்தும்
 கட்டில்லை;கீழ்மேல் என்னும்
 கண்மூடி வழக்க மில்ல.”    பாரதிதாசன்

அந்த இளமைப்பரவத்தில் பாடிய இன்னொரு பாடல் உலகநாதர் இயற்றிய, உலக நீதியில் இடம்பெற்ற

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
 வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
 போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்” என்ற பாடல்.

இதுபோன்ற பாடல்களைச் சின்னவயதில் எந்தச்சிந்தனையுமில்லாமல் படித்தகாலம் நினைவுக்குவருகிறது. நீதியை; அறத்தை;வாழ்வியல் உண்மைகளைச் செய்யுளாகப் பாடிய நினைவுகளன்றி கவிதைபற்றிய எந்த ஈர்ப்பும்; நினைப்பும் இல்லாமலிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

Continue Reading →