ரிஷி கவிதைகள்: கவிதைக்கோலோச்சிக்கு….

Latha Ramakrishnan

(1)
கால்காசு கிடைக்க வழியில்லாதபோதிலும்
கவிதைமேல் காதலாகிக் கசிந்துருகி
காயங்களுக்கு வடிகாலும்,
மாயவுலகத் திறவுகோலுமாய்
காலங்காலமாய் எழுதப்பட்டவைகளிலெல்லாம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்
கால தேச வர்த்தமானங்கள்;
தேடப் பொருதியின்றி திட்டித் தீர்க்கிறீர்கள்.
பொருட்படுத்திப் படிக்கும் பெருந்தன்மையின்றி
உங்களுக்கு முன்னே எழுதிய கவிஞர்களை பிரச்னையற்றவர்களாக்கி
பெருந்தனக்காரர்களாக்கி
கவிதையைப் பொழுதுபோக்காக பாவிக்கும் பித்தலாட்டக்காரர்களாக்கி
பேட்டை தாதாக்களாக்கி
சோதாக்களும் பீடைகளும் பீத்தைகளுமாக்கி
சேறு பூசி, செம்புள்ளி கரும்புள்ளி குத்தி,
சிலுவையிலறைந்து முடித்து
குண்டாந்தடியை செங்கோலெனச் சுழற்றியபடி
பரிவாரங்களோடு பவனி வந்து
உங்களுக்கு நீங்களே விசுவரூப சிலைவடித்துக்கொள்கிறீர்கள்
உலக அரங்குகளில்.
உண்மையான கலகம் இதுவல்ல என்று
உணர்வீர்களோ என்றேனும்?

Continue Reading →

சிறுகதை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

சிறுகதைகீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற தோழிகளிற்கு,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறிது கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால் வேருடன் பிடுங்கி,இடுப்பில்  செருகியுள்ள சொப்பிங் பையில் போட்டுக் கொண்டுமிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை தொங்கிறது .
  
அவளைப் போன்ற சோகம் அவர்களுக்கில்லை.இருந்தாலும்,அவளுடன் அனுதாபத்துடனே பழகிறார்கள்.அவளால் தான் ‘தனித்த’ நிலையிலிருந்து விடுபட முடியவிலை. வீடும்,அவளைப் போலவே கிடக்கிறது.’உற்சாகமாகவிருக்க வேண்டும்,நம்பிக்கைகளுடன் இருக்க வேண்டும்,இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதிக்கவிதை வரியை எடுத்து அலம்பிற அப்பாவிற்குக் கூட நாடி விழுந்து விட்டது.

Continue Reading →

சிறுகதை: உறுத்தல்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -‘நைட் ஸிஃப்ட்” வேலை முடிந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர எட்டு மணியாகிவிட்டது. நித்தியும் கோபாலும் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்பதை பூட்டியிருந்த கதவு காட்டியது. இப்படி சில நாட்களில் அவர்களுக்கு பொறுப்புணர்வு மிகுதியானதுபோல் நேரத்துடன் வேலைக்குப் போய்விடும் அற்புதம் நடப்பதுண்டு. கதவைத் திறந்து வீட்டுக்குள் போனதும் தனிமையை மறக்க ரேடியோவை ‘ஓன்” பண்ணினேன். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…” என அது பாடியது. இரவு வேலைக்குப் போகிறவர்களெல்லாம் தூக்கம் கெட்டு கடமையே கண்ணாக இருப்பார்களாக்கும் என அது அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது உறங்க முடியாது. சமையல் வேலை காத்துக்கொண்டிருக்கிறது. உத்தியோக நிமித்தம் இந்த நகரத்துக்கு வந்து தங்குமிட வசதி கருதி ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள். நகரத்தையண்டிய பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறியிருந்தோம். நித்தியானந்தன் கிராம அபிவிருத்தி அலுவலராக வேலை பார்க்கிறவன். கோபாலச்சந்திரன் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. தொழிற்சாலை ஒன்றில் ‘ஸிஃப்ட் என்ஜினியரா”கக் கடமையாற்றுகிறவன் நான். அன்றாடம் வேலைக்குப் போவது, வருவது, சாப்பாட்டுக் கடைகளில் போய் எதையாவது வயிற்றுப்பாட்டுக்குப் போட்டுவிட்டு வந்து அறைகளில் ஒதுங்குவது என்று எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உப்புச் சப்பில்லாத இந்த வாழ்க்கைக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாமே எனக் கருதி ‘நாங்களே சமைக்கிற” திட்டத்தை ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. மூவருமே திருமண வயதில் (திருமணத்தை எதிர்பார்த்து) காத்திருக்கும் இளைஞர்கள். வந்து வாய்க்கப்போகிற மனைவிக்குச் செய்யவேண்டிய பணிவிடைகள் பற்றிய பயம் (அல்லது ஆர்வம்) உள்@ர எங்களுக்கு இருந்தது. விளையாட்டாகவேனும் சமையற் கலையைக் கற்றுத் தேர்ந்துவிடலாமே என்ற ஆசைதான்.

Continue Reading →

சிறுகதை: கொம்புத்தேன்

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா கைபேசி ஒலிக்கிறது!

எடுத்துப் பார்க்கிறேன். அறிமுகமான எண்தான்!

பள்ளி முதல்வர் நாஷான் பேசுகிறார்.

நான் குழப்பமடைகிறேன்.

மன உளைச்சல். நேரத்திலேயே  வீடு திரும்புகிறேன்.

“என்னங்க….சீக்கிரமா திரும்பிட்டிங்க?”

“வதனி……சந்துரு எங்கே…..?”

Continue Reading →

நினைவேற்றம்: முனை 1

முனை 1

 -தேவகாந்தன்-   நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில்  தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம். மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு  காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத  அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன.  யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பதற்கான அச்சொட்டான காலமாகவிருந்தது அது. அதை அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளின் ஆரம்பகாலம் என்கலாம்.  கிடுகு வேலிக் கலாசாரமென்பது மாற்றங்களை உட்புக விடாததும், மரபின் இறுக்கங்களைத் தளர விடாததுமான வாழ்நிலைமையை முப்புற வேலிகளைக்கொண்டு உறுதியாக்கி அங்கே கட்டப்பட்டிருந்தது.

Continue Reading →