நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது.   1989 – 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் ‘பொப்’ என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

Continue Reading →

சிறுகதை: முகவரி தொலைத்த முகம் ..!

- இணுவை சக்திதாசன்,  டென்மார்க் -தூக்கத்திலிருந்து விழித்த … மீனா அதிர்ந்துபோனாள். ! கலைந்து  போய்கிடந்த … அவளது சேலைத்தலைப்பினூடாக … தன்   மார்பகங்களை ரசித்தபடி மேயும். காமக்கண்களை கண்டவுடனேயே அவளது நித்திரை பாதியிலேயே பறந்து போனது. பக்கத்தில் கிடந்த தன் மகன் செவ்வேளைப் பார்த்தாள். அவனையும் காணவில்லை என்றவுடன், ‘திக்’ கென்றது அவளது நெஞ்சு. காயங்களுடன் … முனகிக்கொண்டிருக்கும் ஒரு சிலரைத் தவிர, மிகுதிப்பேர் நல்ல நித்திரை என்பதற்கு அந்த மண்டபத்தில் போட்டிபோட்டு கேட்கும். குறட்டைச்சத்தங்கள் … சாட்சியாக இருந்தது. மீனா படுக்கையை விட்டெழுந்து . . தன் மகனைத் தேடி வெளியே ஓடினாள். வழமையாகவே … அடிக்கடி அவன் போயிருக்கும் இடம்தான் இப்பவும் அவன் போயிருந்தது.  அந்த அகதிமுகாமின் பின்பக்கத்தின் முட்கம்பி வேலியருகில் ஏதோ .. பறிகொடுத்தவன் போல குந்தியிருந்ததை கண்ட மீனா துடித்தே போனாள். முட்கம்பி வேலியையே .. வெறித்து பார்த்துக்கொண்டிருந்த, செவ்வேளின் கன்னம் இரண்டிலும் அடிக்கடி வழிந்தோடி துடைப்பாரின்றி .. காய்ந்துவிட்ட கண்ணீர் சுவடுகள்.அவனின் சோகத்தை புடம்போட்டு காட்டியது.!

Continue Reading →

சிறுகதை : ரூபாய் நோட்டு

சிறுகதைசந்திரனுக்கு அன்று ஜாதகத்தில் ‘புது மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும்’ என எழுதியிருக்க வேண்டும்.சில கிரகங்கள் உச்சத்தில் …இருந்திருக்கலாம். “கோட்டை கட்டி விடாதே தம்பி,அவை அனுபவங்கள் மட்டும் தான்,அனுபவிக்கிறது இல்லை !”அவனுடைய ராசி அவனுக்கு தெரியாதா, என்ன நக்கலாக ஒரு ‘உட்குரல்’?சிரித்துக் கொண்டான். விடிந்தும் விடியாத பனிக்காலைப் பொழுதில் (சிறிது இருட்டாக இருந்தது), காலை 7.00 மணி போல ரேடியோ ஓடரைப் பெற்றவன், காரின் டிக்கி திறந்திருப்பது போல தோன்ற, இறங்கிப் போனான். அந்த இருட்டில் நிலத்தில்  ஒரு ‘10 டொலர் பிளாஸ்டிக் தாள்’ கிடக்கிறது தெரிந்தது. அந்த ‘கெண்டக்கி சிக்கின் ஃபாஸ்ட்பூட்’ கடையின் பார்க்கிங் பகுதியிலே காலையிலே எல்லா டாக்சிகளும் அடையிறது வழக்கம். அதிக பனி பொழிந்து கொண்டு இருந்தாலும் ‘7.00 மணிக்குப் பிறகு பார்க் பண்ணக் கூடாது’என்ற நகரசபையின் வீதிப் பலகையைக் காட்டி காவலர்கள் அபராத டிக்கற்றுக்களைத் தந்து அரியண்டம் தருவார்கள்.இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதால் நகர அரசுக்கு நிறைய செலவுகள் ஏற்படுகின்றன. அந்த துண்டு விழுகைகளை சீராக்குவதற்காக இரக்கமற்ற முறையில் காவலர்களைக்  கடமையைச் செய்ய வைக்கிறார்கள். அதற்காக, அம்புகளாக, ரொபோவாகவா நடக்க வேண்டும்! நடக்கிறார்களே.

Continue Reading →