இன முரண்பாடுகளின் அறுவடையாக மக்கள் புலபெயர்நாடுகளில் வாழும் நிலை ஏற்பட தங்களின் இலக்கியம் மீதான தாகத்தை படைப்பிலக்கியம் மூலம் வெளிபடுத்தினர்.அவ் விலக்கியத்தை பத்திரிகை,வானொலி,இணையம் என பல்வகை ஊடகங்களின் மூலம் வாசகர் பார்வைக்கு வைக்கையில் பலரின் கவனிப்புக்கும் உள்ளாகினர்.அவர்கள் பின்னர் தனித்தும்,கூட்டாகவும் நூல்களை வெளியிட்டு இன்னும் பலம் பெற்றனர்.நண்பர்களின் தொடர்பு,பிற இலக்கியங்களில் தேர்ச்சி என்பன அவர்களை இன்னும் இலக்கியத்தினை ஆழமாக சிந்திக்கவும் உதவின.. இந் நிலையில் நவீன தொழில்நுட்ப சாதன பயில்முறை இலகுவாகவே கைகளுக்குள் வர எழுத்து திருத்தங்களுடன் வரவும்,பதிப்பின் இலகுத்தன்மையும் சாத்தியமாகின. பலர் படைப்பாளர்களாக அடையாளப்படுத்தி நின்றார்கள். ஒரு புறம் எழுத்தில் ஆழமாக சிந்தித்து எழுதியவர்களிடையேயும் சிலர் வசதி வாய்ப்பு கிடைத்த மாத்திரத்தில் எழுத்தாளர்களாயினர்.அதிலும் சிலர் ஒரு நூலை வெளியிட்டதுமே உலக இலக்கியம் தன் கைகளுக்குள் என்கிற தொனியில் பேசவும் செய்கின்றையும் காணக்கிடைக்கின்றன. இவர்களின் பலம் அதிகமானால் ஆபத்தும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இங்கு புலம் பெயர் சூழலில் ஆங்காங்கே இலக்கிய அமைப்புக்கள், ஒன்றியங்கள், சங்கங்கள் தோன்றியும் உள்ளன. சில தொடர்ச்சியான செயல்பாட்டிலும் உள்ளன.. அவ் அமைப்புக்களுடாக பலரின் படைப்புக்களை உள்ளடக்கி நூலாகவும் கொண்டுவருகின்றமை பாராட்டக்கூடியதாகும். கனடாவில் இருந்து எனக்குக் கிடைத்த ‘கூர்,யாதும், லண்டனிலிருந்து திரு.பத்மநாப ஐயர் தொகுத்த உகம் மாறும்,கண்ணில் தெரியுது வானம் போன்ற தொகுப்புக்களும் அடங்கும்.இன்னும் வந்திருக்கலாம்.
[ அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ தயாரிப்பாளரும் , பிரபல எழுத்தாளருமான காவலூர் ராசதுரையின் நாடகம் பற்றிய குறிப்பிது. ஒரு பதிவுக்காக இங்கே மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்]
இலங்கை வானொலியின் ‘கலைக்கோலம்’ என்னும் நிகழ்ச்சிக்காக, தமிழ் நாடக்மொன்றினை விமரிசிக்கும்படி திரு.சீ.வி.ராஹசுந்தரம் ஒரு முறை என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கமைய அந்த நாடகத்தை விமரிசித்தபொழுது, இலங்கையில் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் மூலதனம் போட்டு ஸ்தாபனரீதியாகக் கட்டி வளர்த்தல் சாத்தியம் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தேன். நண்பர் அ.ந.கந்தசாமியுடன் தமிழ் நாடத்துறை பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபொழுது மேற்சொன்ன என் கருத்தை அவரிடம் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். “வர்த்தக ஆற்றலுடையவர்களுக்குக் கலையார்வம் இல்லை; கலையார்வமுள்ளவர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது’ என்று சொன்ன அவர் , ‘என்னுடைய ‘மதமாற்றத்தை’ உமக்குத்த்தருகிறேன்; பணம் எதுவும் வேண்டாம்; உம்முடைய கருத்துச் சரியானதுதானவென்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அதை மேடையேற்றும்” என்றார். அவ்வளவுடன் நில்லாது குறிப்பிட்ட ஒரு தொலையை என்னால் புரட்ட முடியுமானால், நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தம்மால் இயன்ற சகல் உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னார்.
இதுவரையில் நான் எழுதிய திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்பத்தியில் பெரும்பாலும் மறைந்தவர்களைப் பற்றித்தான் எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரிலும் மறைந்த 12 ஆளுமைகளை பதிவுசெய்துள்ளேன். இந்தத் தொடர் பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது ஒரு இலக்கிய சகோதரி என்னிடம் ஒரு வினாவைத் தொடுத்தார். குறிப்பிட்ட தொடரில் நான் மறைந்த ஆண் படைப்பாளிகளைப்பற்றி மாத்திரம் எழுதியதாகவும் பெண்களைப்பற்றி எழுதவில்லை என்றும் புகார் எழுப்பியிருந்தார். பெண்களுக்கு ஆயுள் அதிகம் என்று மாத்திரம் பதில் சொன்னேன். அந்தத்தொடரில் இடம்பெற்றவர்கள் அனைவரும் மறைந்துவிட்ட ஆண் படைப்பாளிகள்தான். அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து 27 வருடங்களாகின்றன. கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்பகுதியில் நான் நேசித்த – என்னை நேசித்த பலரும் விடைபெற்றுவிட்ட சோகம் தனிப்பட்ட ரீதியில் என்னை தொடர்ந்து வந்துகொண்டுதானிருக்கிறது. திரும்பிப்பார்க்கின்றேன் தொடரில் தற்சமயம் எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களைப்பற்றியும் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாக எனது மனதில் உருவாகிவருகிறது. காரணம் சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா – குவின்ஸ்லாந்து மாநிலத்தில் எமது தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய கலை இலக்கிய கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மெல்பனுக்கு திரும்பும் வழியில் சிட்னியிலும் சில நிகழ்ச்சிகள் சந்திப்புகளில் கலந்துகொண்டேன். எனது பயணத்தில் நான் சிட்னியில் சந்திப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்த ஒருவர் நண்பர் எழுத்தாளர் வானொலி – திரைப்படக் கலைஞர் காவலூர் ராசதுரை. சிட்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவரைப்பார்க்காமல் திரும்புவதும் இல்லை. இந்தப்பயணத்தில் ஒருநாள் அவரை சந்திக்கச்செல்வதற்கு முன்னர் அவரது வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.