வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனங்களின் யாழ் வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி தாக்குதலையும், மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் பத்திரிகையின் ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு விடுக்கப்பட்ட உயிர்க்கொலை அச்சுறுத்தலையும் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: ‘ஊடகத்துறையை உலகத்தின் “மூன்றாவது கண்” என்றும், ஊடகவியலாளர்களை “ஜனநாயகத்தின் காவல் நாய்கள்” என்றும் உலக கனவான்கள் விளிக்கின்றனர். ஜனநாயக மறுப்பு சம்பவங்களின் போதும், ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களின் போதும், அதை எதிர்த்து நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியின் சிறப்பு கருதி இத்தகைய கௌரவத்தை வழங்கி உலகம் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கின்றது. சிறீலங்கா போன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத ஆபத்தான நாடுகளில் ஊடகவியலாளர்கள் ஆட்சியாளர்களோடும், அதிகாரத்தோடும் போராடிக்கொண்டு மிகவும் நெருக்கடியான சூழலிலும் செய்தியறிக்கைகளை இடுவதால் தான், ஜனநாயகம் என்ற சொல்லை இன்றும் கூட நம்மால் உச்சரிக்க முடிந்திருக்கின்றது.
அன்புடையீர், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான மூன்றாவது அனுபவப்பகிர்வு எதிர்வரும் 24 -5-2014 Darebin Intercultural Centre மண்டபத்தில் ( 59 A, Roseberry Avenue, Preston -3072) நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பு மற்றும் கவிதை இலக்கிய அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கவிஞர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
“தமிழில் கவிதை இலக்கியம்” என்ற தலைப்பிலான இந்த அமர்வில் பின்வரும் விடயங்களை உள்ளடக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளில் ஏதேனும் ஒன்றை வாசித்தல் (5 நிமிடங்களுக்கு மேற்படாமல்) “என்மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை” என்ற தலைப்பில் ஒரு தமிழ்க் கவிதையைப் படித்துக்காட்டுதலும், அதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளலும். (10 நிமிடங்களுக்கு மேற்படாமல்) சங்க காலம் முதல் இன்றுவரை கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.