“லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள், கடந்தகாலம் மற்றும் தேசியம்தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்.” -பாப்லே நெருடா.
மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்இறப்பெய்தினார். யதார்த்தை கூறும் முறையில் இலக்கியத்தின் உறவை அங்கீகரித்துச்சென்ற மார்க்வைஸ் இறந்ததும் மாயத்தன்மை கொண்டதுமான நினைவுகளையும் தன் பாட்டியிடம் கேட்டறிந்த புதிர்களையும் தனக்குரிய வாலயப்பட்ட ஸ்பானிய மொழியிலே கதை சொல்லி வந்தார். இந்தக் கதை சொல்லி ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். என்பத்தி ஏழுவயதில் இன்று அவர் உடல் இவ்வுலகினை விட்டுப் பிரிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே அவர் நினைவாற்றலை இழக்கும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். என்ற உண்மையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருந்தோம். இன்று அவரது உடலும் எம்மிடமிருந்து இல்லாமல் போய்விட்டது.