ஏழாயிரம் அடி உயரத்தில் ஆகாயவெளியில் ஆறு இருக்கைகளைக் கொண்ட செஸ்னா விமானம் பறந்தபோது எதிரே புகைபோல் வந்த ஓவ்வொரு மேகக்கூட்டமும் அந்த விமானத்தை தூக்கித் தூக்கி எறிந்தது. சிறுகுழந்தை, விளையாட்டு விமானத்தை விளையாடுவதுபோல் அந்த மேகக்கூட்டங்கள் விளையாடியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மேககூட்டங்களை பயத்துடன், மவுனமாக சபித்துக் கொண்டேன்.வனவாத்து வருவதற்கு முதல்நாள் மண்டைக்கயிறுக்கு (மனைவியின் தம்பி) கொடுக்க வேண்டிய பணத்தை வங்கியில் போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. ஏதாவது காரணத்தால் அந்த ஒற்றை எஞ்சின் விமானத்தில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் கடன்காரனாக மரணமடைய வேண்டிஇருக்காது என்பது ஒரு ஆறுதலான நினைப்பு. எனக்குப் பக்கத்தில் இருந்த மனைவிக்கு அது ஒற்றை இயந்திர விமானம் என்பது தெரியாது. எனக்குப் பக்கத்தில் மேலும் சுமார் இருபது வயதுள்ள இரண்டு அவுஸ்திரேலிய இளைஞர்ளைப் பார்த்ததும் மனதில் தைரியம் வந்தது. கமராவை எடுத்து படங்கள் எடுக்கத் தயாரானேன்.
“கவிதையைப் புதிதாக்குவது பற்றி
என்னிடம் பேசாதீர்கள்
நான் உண்மையைக்
கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்” – டாக்டர் பாலா
அண்ணா பற்றிய கவிதை கிடைக்காத சோகம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அண்ணாவைப்பற்றி எழுதுவதற்குமுன்பு கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி இருந்தது. திடீரென்று எழுதிவிட்டேனா?. தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அதன் அறிகுறிகள் ஏதாவது தெரிந்ததா? என்று என் நினவுச்சுருளை அவிழ்க்கும்போது ஏதேதோ நினவுக்கு வருகின்றன. ஒரு மழைமாதத்தில் பிச்சினிக்காட்டைப் பார்த்தவாறு நண்பர்களோடு அமர்ந்து கற்பனையாகப்பேசிக்கொண்டிருந்ததும், நானே ஒரு கற்பனைக்கதையை உருவாக்கி புதிரின் சூடுகுறையாமல் ,தொய்வின்றி கதைச்சொல்லிக்கொண்டிருந்ததும் முகம் காட்டுகின்றன. சிலிநாட்டுக்கவிஞர் நோபெல் பரிசுபெற்ற பாப்லோ நெரூடா பதின்மூன்றாவது வயதில் முதலில் எழுதியது கட்டுரைதான். அதுதான் முதலில் வெளிவந்தது. அதுபோல, கவிதை எழுதுவதற்குமுன்பு அதற்குரிய அடிப்படைகளான: கற்பனை,சொல்லாற்றல், சொல்லும் ஆற்றல், புனைதிறன் , சிந்தனை, கலைப்பார்வை, இப்படியும் இன்னபிறவுமென சில அறிகுறிகள் என்னோடு கலந்து பிறந்ததை உணர்கிறேன். எங்கள் ஊர் மொளைக்கொட்டு மாரியம்மனுக்கு மொளைப்பாரிபோட்டு இரவில் கும்மிகொட்டும்போது சித்தப்பா வைரப்பவிசுவராயர், அண்ணன் பெ..சந்திரன் அவர்கள் பாடிய கும்மிப்பாடல்கள்தான், தாலாட்டுக்குப்பிறகு நான் கேட்ட முதல் இசைப்பாடல்கள். கேட்பதோடல்லாமல் பெரியவர்களோடு சேர்ந்து கும்மிகொட்டியவன் நான். இரவிலேதான் கும்மிகொட்டுவோம். நிலவுதரும் வெளிச்சம்தான் துணை. நள்ளிரவுவரை அது தொடரும். பெரியவர்களோடு களைப்பின்றி கும்மிகொட்டியதால் அவர்களுடைய பாராட்டு எனக்குக் கிடைத்தது. இன்றைக்கும் கிராமத்தில் நடக்கிற கும்மிவிளையாட்டில் நான் கலந்துகொள்கிறேன். அது தரும் உடல்நலம் மன நலம் எதற்கும் இணையற்றது.