என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே. தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு , பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான். இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல. அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்தமானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல. ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே, கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல. வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம் எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.
முன்னுரை
இன்றைய வாழ்வியல் கூறுகளில் கனிப்பொறி என்பது அத்தியாவசியமான ஊடகமாகிவிட்டது. ஒவ்வொரு அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனுக்கு ஆக்கம் விளைவிக்கவே தோற்றுவிக்கப்பட்டன என்றும், மொழி என்பது அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகிறது. கணிப்பொறி என்றவுடன் ஆங்கிலத்தாலே இயங்கக்கூடிய ஓர் ஊடகம் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்நிலையை மாற்றி கணிப்பொறியில் தமிழ்ப் பயன்பாடுகளை ஏற்படுத்த தமிழ் எழுத்துருக்கள் அவசியமாகின்றன. அத்தகைய தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தலும், வடிவமைத்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.
குறியீட்டு முறையும் எழுத்துருவும்
கணிப்பொறியானது நமக்குத் தேவையான கட்டளைகளைக் கணக்கிட்டு தரவேண்டுமெனில் நாம் சொல்வதைப் பொறியானது புரிதல் அவசியம். எந்தமொழியைப் பயன்படுத்திக் கட்டளைகளைப் பிறப்பித்தாலும் கணிப்பொறியானது. பொறி மொழியிலே செயல்படுகிறது. அதாவது 0,1 போன்ற பைனாp எண்களே கணிப்பொறியினை இயக்குகின்றது. ஆகவே கணிப்பொறி என்பது கணிப்பான மட்டுமே பயன்படும் போது எவ்விதச் சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களாகச் சேமிக்கும் பொழுது, ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும். மேலும் சேகரித்த தகவல்களைத் திரையில் பார்க்க எண்களை எழுத்துக்களாக மாற்ற வேண்டும். இதற்கு எழுத்துருக்கள் அவசியமாகின்றன. இத்தகைய எழுத்துருக்களே ஒவ்வொரு எண்ணிற்கும் என்ன வடிவம் என தீர்மானிக்கிறது. ஆனால் ஒரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி பெற்ற தகவல்களை மற்றொரு குறியீட்டு முறை கொண்டு அறிய முடியாது. எனவே ஆங்கிலம் போல தமிழிலும் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.
சபிப்பு
– நவஜோதி ஜோகரட்னம், லண்டன் –
சமரின் ஆயுதங்கள்
நித்தம்
எழுப்பும் ஒலி
ஒரு புறமாய்
இதயத்துள் வலிக்கிறது…
ரகசியமாக
அன்பை எடுக்கவும்
கொடுக்கவும்
உரிமை பறிபோகாமல்
உலகம்
காதலும் புரிகிறது…
புன்னகை மலர்ந்து
கவிதை படைக்க
மனது துணியும்போது…
இரு குருவிகளின் காட்சி
கனத்து
களைக்கிறது நரம்பு
வார்த்தைகளை மீறுகின்றது
துயரம்..
போர்வாளை தனது கொடியின் சின்னமாக கொண்டு, புலியெனப்பாய்ந்து, முல்லைத்தீவில் ஆங்கிலேயர்கள் அமைத்திருந்த பிரமாண்டமான கோட்டையை நிர்மூலமாக்கி, வரலாற்று வெற்றியை பதிவுசெய்து, இறக்கும் வரை வன்னி பெருநிலப்பரப்பை அந்நிய சக்திகளிடம் வீழ்ச்சியுறாமல் அரசாண்ட, இறுதி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் ஆவான். அந்த தீரனின் அஞ்சா நெஞ்ச வாழ்க்கையை கூறும் வரலாற்று நாடகம் எதிர்வரும் 06.07.2014 அன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும், “வன்னி குறோஸ்” சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சி.சிவமோகனின் முயற்சியால், ஏறத்தாள ஏழு வருடங்களுக்கு பிறகு முல்லை கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்படவுள்ள இந்த நாடகவிழாவில், பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா மற்றும் வரலாற்று ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரை ஆகியோரும், கலாநிதி தமிழ்மணி அகளங்கன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.