ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர். ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார். சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.
நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகுதூரம்வரை பார்க்கக்கூடியதாயிருக்கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மையான இடங்களில் நடந்திருக்குமோ.. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம். நேட்டோ படையினரின் குண்டு வீச்சுக்களும்.. அவற்றைத் தொடர்ந்து லிபிய அரசப் படையினரின் வான் நோக்கிய விமான எதிர்ப்பு வேட்டுக்களின் சத்தங்களும் சில இரவுகளாகத் திரிப்போலி நகரின் இரவுகளைக் கலக்கிக் கொண்டிருந்தன.
என் அறைக் கதவு அவசர கதியிற் தட்டப்பட்டது.
அழைப்பொலியை விசைக்காமல் இப்படி நாலு வீடுகளை எழுப்புவதுபோலப் படபடப்புடன் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதவின் கொளுக்கியை விடுவித்துத் திறப்பதற்கு முற்படும்போதே, அதைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுளைந்தார்கள்.. பிரியசாந்தவும் சந்திரசேனவும். நான் பணியாற்றும் கம்பனியின் ஊழியர்களான இவர்களும் இதே கட்டடத்தின் இன்னொரு அறையிற் தங்கியிருந்தார்கள். விமானக் குண்டுவீச்சு தொடங்கிய நாளிலிருந்து குழம்பிப்போயிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, ‘இலங்கைக்குப் போகவேண்டும்.. அதற்கு ஒழுங்கு செய்யுங்கள்..’ என நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் உக்கிரமடைந்து வான்வழி தடைவலயமாக்கப்பட்டிருக்கும் கட்டம் இது. லிபியாவிலிருந்து நினைத்தவுடன் இலங்கைக்குப் போவதென்பது இயலுமான காரியமல்ல என்பது இவர்களுக்கும் தெரிந்திருந்தது. எனினும் ஒவ்வொரு குண்டு வீச்சின்போதும் எனது அறைக்கே வந்துவிடுகிறார்கள்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த எழுத்தாளர் விழா இம்முறை கலை – இலக்கிய விழாவாக எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி (26-07-2014) சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரையில் மெல்பனில் St.Bernadettes Community Centre மண்டபத்தில் (1264, Mountain Highway, The Basin – Vic- 3154) நடைபெறும். உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தினை உருவாக்கியவரும் உலகெங்கும் தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகை செய்தவருமான தமிழ்த்தூது அமரர் வண. பிதா தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொடர்பான நினைவுப்பேருரையும் இடம்பெறும் இலக்கியக்கருத்தரங்கு நிகழ்வும் கலை, இலக்கிய விழாவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரை நினைவு கூர்ந்து இடம்பெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த அழைப்பினை தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடமும் தெரிவிக்குமாறு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றது.
இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே காலச்சுவடு ( இதழ் – 159, பக்கம் – 26) இதழில் ‘எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள்’ எனும் தலைப்பிலும், உயிரோசை (இதழ் – 156, ஆகஸ்ட் 2011) இதழில் ‘ ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?’ எனும் தலைப்பிலும் விரிவாகத் தந்திருந்தேன். எனவே இக் கட்டுரையில் நான் பழையவற்றை விடுத்து கடந்த ஜூன், 2014 இல் இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவர வன்முறை குறித்த உண்மைச் சம்பவங்களையும் அண்மைய நிலவரங்களையும் முழுமையாகத் தருகிறேன்.
கடந்த ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்கு திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித் திட்டமாகும். பேரினவாத வன்முறையாளர்களின் ‘பொதுபலசேனா’ எனும் இயக்கமானது, ஊர் ஊராக கூட்டங்கள் நிகழ்த்தி ‘இலங்கையானது புத்தரின் தேசம், இந் நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது’ என்ற கொள்கையைப் பரப்பி ஆள் திரட்டியது. பௌத்த போதனைகளை பல விதமாக துவேசத்தோடு பரப்பியது. எவ்வாறெனில், ‘ஒரு பௌத்தனை வளர்த்தெடுப்பதே உங்கள் கடமையாகும். எனவே தமிழ், முஸ்லிம் இனத்தவர்களது வர்த்தக நிறுவனங்களுக்குச் செல்லாதீர். அவர்களது வாகனங்களில் பயணம் செய்யாதீர். அவர்களது பொருட்களை வாங்காதீர்’ என்பது போன்ற மோசமான விடயங்களைப் பரப்பியது.