தி. துரைராஜூ (சிங்கப்பூர்) கவிதைகள் இரண்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு: தி. துரைராஜூ)!

தி. துரைராஜூ (சிங்கப்பூர்) கவிதைகள் இரண்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு: தி. துரைராஜூ)!

1. நகரம்-நரகம்

நகரத்தில் நாங்கள்
தொலைந்து கொண்டிருக்கிறோம்
சன்னல் திறவா
ஐப்பானிய கார்களில்
பறக்கும் சிங்கப்பூரர்களுக்கு
முகங்கள் முக்கியமில்லை

ரசித்தல் அகராதியில்
அகப்படாத வார்த்தை
*எம். ஆர். டி. கதவுகள்கூட
எங்களுக்கு அவசியமில்லை 
இடைவெளி குறைந்தும்
தனிமை பழகிவிட்டது

Continue Reading →

அறிவித்தல்: இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014

வெளிவரவுள்ளது 'நற்றிணை' இணைய இதழ்!இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும்  அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில்  சுப்ரபாரதிமணியனின் நாவல்  ” தறி நாடா “ சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது.நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார்.குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பிற நூல்களுக்கானப் பரிசு பெற்றவர்களில் சிலர்: ஆட்டனத்தி,  க.ப அறவாணன்,( சிறுகதை ),   யூமா வாசுகி ( மொழிபெயர்ப்பு ), தஞ்சாவூர் கவிராயர் ( கவிதை ), தேவி நாச்சியப்பன் ( சிறுவர் இலக்கியம் ), இரா. மோகன் ( இலக்கிய ஆய்வு ) வீரநாதன் ( அறிவியல் ), மதுரை கர்ணன்.( பொது ) மற்றும் இலக்கிய இதழ்கள்  முகம், தொடரும், ஆலம்பொழில் . சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் தலைமையிலான் குழு விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Continue Reading →

மரணமும் மீராவின் ஆற்றுதலும்

மீராபாரதியமுனா ராஜேந்திரன்முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய போராளித் தலைவனின் மரணம் அங்கீகரிக்கப்படாத தமிழகப் புகலிட அரசியல் சூழலில், இலங்கையில் அமைதி நிலவுகிறது அபிவிருத்தி கொழிக்கிறது எனப் பிரச்சாரம் செய்யப்படும் காலத்தில், தாயின் கல்லறையில் அழுது ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பது கவிஞர் வ.ஐ ச.ஜெயபாலனுக்கு ஒரு பெரும் அரசியல் போராட்டமாக ஆகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். தருணத்திற்குப் பொருத்தமாக மீராபாரதி மரணமும் ஆற்றுப்படுத்தலும் குறித்து மரணம் இழப்பு மலர்தல் எனும் தலைப்பில் அவசியமான முன்னோடி நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.. மரணங்கள் இரு வகையிலானவை@ இயல்பாக நிகழும் மரணங்கள் மற்றும் சுமத்தப்பட்ட மரணங்கள். இயல்பாக நிகழும் மரணங்கள் குறித்த ஆற்றப்படுத்துதல் எந்தச் சமூகத்திலும் இயல்பாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சமூகமும் அதற்கென மரபான சடங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆற்றுப்படுத்தலின் வழியில் மனிதர்கள் தம்மை எதிர்கால வாழ்வுக்கு மீட்டுக் கொள்கிறார்கள். சுமத்தப்பட்ட மரணங்களில் இதற்கான வாய்ப்பு அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு இல்லாது போகிறது. சுமத்தப்பட்ட மரணங்கள் எனும்போது அவற்றைத் தற்கொலை படுகொலை வெகுமக்கள் மரணங்கள் என நாம் வகைப்படுத்துகிறோம். இயக்க உட்படுகொலைகள் மறைக்கப்பட வேண்டிய காரணங்களால் நிகழும் தற்கொலைகள் அரசினால் ஏவப்படும் வெகுமக்கள் படுகொலைகள் என இவற்றை வகைப்படுத்துகிறோம். பெரும்பாலுமான சமயங்களில் இத்தகைய மரணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த மரணங்களுக்கு எவரும் பொறுப்பேற்பது இல்லை. இந்த மரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பேசுபவரின் மரணத்திற்கும் இட்டுச் செல்வதாக இருக்கிறது.

Continue Reading →

தொடர் நாவல்: நாளை – 4

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

அத்தியாயம் நான்கு!

- இ. தியாகலிங்கம் -ஈழத்தமிழ் இனத்தின் மீட்பிற்காகவும், இறுதி விடுதலைக்காகவும் பல இயக்கங்கள் இயங்குவதாகத் தேவகுரு கேள்விப்பட்டிருந்தார். எல்லா இயக்கங்களுமே தமிழ் இனத்தின் கௌரவத்திற்காகவே உழைக்கின்றன என்றும், அந்த இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள் அனைவருக்கும் யாழ் மக்களினால், ‘பெடியன்கள்’ என் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டனர் என்றும் தேவகுரு அறிந்திருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் சேர்ந்து கொண்ட இயக்கம் பற்றி அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.

சில மாதங்கள் எந்தப் பயிற்சியும் இன்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள கோண்டாவில் என்று ஊரிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. கோண்டாவில் மக்கள் ஆதரித்த நேர்த்தி இன்றும் நெஞ்சை உருக வைக்கும் என்றாலும், இந்தக் காலம் மிகவும் அலுப்பான காலம். உண்மையான ராணுவப் பயிற்சி பெற்று, களத்திலே குதித்து செயற்கரியன சாதிக்க வேண்டும் என்று துடித்தார். இந்தியக் கரையை அடைவதற்குப் பயண ஏற்பாடுகளைச் செய்வதிலே சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு, என்று விளக்கினார்கள். பல்லைக் கடித்துப் பொறுமை காத்தார். பொறுமை வளறத் துவங்கி, பயிற்சி முகாம் செல்ல வேண்டும் என்கிற அவர் துடிப்பு நச்சரிப்பாக மாறிய ஒரு கட்டத்திலே, இந்தியாவிலுள்ள பயிற்சி முகாமுக்குச் செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.

Continue Reading →

வெளிவரவுள்ளது ‘நற்றிணை’ இணைய இதழ்!

வணக்கம், நற்றிணை பதிப்பகம் தற்போது நற்றிணை இணைய இதழ் ஒன்றை துவங்க இருக்கிறது. இந்த இணைய இதழில் கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல், புத்தக மதிப்புரை ஆகிய…

Continue Reading →

பண்டாரவன்னியன் வரலாறு தொடர்பில் வரலாற்று ஆய்வாளர்களை விவாதத்துக்கு அழைக்கிறார் அமைச்சர் சத்தியலிங்கம்!

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியிலும் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக விளங்கி, வன்னி பெருநிலப்பரப்பின் சுயாட்சிக்காக இறுதிவரை போராடி உயிர் துறந்த தமிழ் தேசிய மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நாடகம், கடந்த 06.07.2014 ஞாயிறு அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் முல்லைக்கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியிலும் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக விளங்கி, வன்னி பெருநிலப்பரப்பின் சுயாட்சிக்காக இறுதிவரை போராடி உயிர் துறந்த தமிழ் தேசிய மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நாடகம், கடந்த 06.07.2014 ஞாயிறு அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் முல்லைக்கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, வடமாகாண சுகாதார சுதேசிய வைத்தியதுறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது உரையில்,  “இங்கு அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகத்தை பார்த்தேன். அதில் “காக்கைவன்னியன்” எனும் மற்றுமொரு குறுநில மன்னனால், பண்டாரவன்னியன் காட்டிக்கொடுக்கப்பட்டு துரோகத்தனத்தால் மாண்டதாக இந்த கலைஞர்கள் சித்திரித்திருந்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.  காக்கைவன்னியன் என்று ஒரு மன்னன் இந்த உலகத்தில் வாழ்ந்ததே இல்லை. அது வெறுமனே ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டுமே ஆகும்” என்று தெரிவித்தார்.

வரலாற்று கதைச்சுருக்கம்:
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலப்பரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாயவன்னியனையும், தளபதியாக கடைசிச்சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

Continue Reading →

அறிவித்தல்: திருக்கோணேஸ்வரம் – வரலாறு உள்ளிட்ட தொகுப்பு நூல்

நூல் அறிமுகம்: திருக்கோணேஸ்வரம் - வரலாறு உள்ளிட்ட தொகுப்பு நூல்அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு, வணக்கம்.  இலங்கைத் தமிழர்களின் – குறிப்பாக சைவ மக்களின் ஆன்மீக வாழ்வியல் தொன்மையின் நிலைக்களனாக விளங்குவது திருக்கோணேஸ்வரம்.  ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, கணிசமான இடர்களை பல கோணங்களிலிருந்தும் சந்தித்து அவ்வப்போது நேர்ந்த அழிவுகளிலிருந்து மீண்டும் மீண்டும் நிமிர்ந்தெழுந்து இன்றைக்கும் உயிர்ப்புடன் திகழ்வது திருக்கோணேஸ்வரம்.  எண்ணிக்கையில் அதிகமான இலக்கியங்களால் புகழ்ந்து பாடப்பட்ட சீரிய திருத்தலம் திருக்கோணேஸ்வரம். திருஞானசம்பந்தர் உள்ளிட்ட தேவார முதலியரால் தேவாரம் பாடப்பெற்ற புண்ணிய சேத்திரம்.  திருமூலர், பட்டினத்தார், அருணகிரிநாதர், சேக்கிழார் ஆகிய அருளாளர்களினால் ஆக்கப்பட்ட பாடல்களில் வைப்புத்தலமாகப் பாடப்பட்டு ப10சிக்கப்பட்ட திருக்கோயில். இராவணேஸ்வரனால் வழிபடப்பட்டதும், குளக்கோட்டனால் புனரமைக்கப்பட்டதுமான வரலாற்றுத் தொன்மை கொண்ட அருளாலயம்.  இதுகாலவரை பல பெரியார்கள் திருக்கோணேஸ்வரம் சார்ந்து அவரவர் காலங்களில் உபயோகத்திலிருந்த அச்சு சாதனங்கள் வாயிலாக மிகுந்த பிரயாசைப்பட்டு பதிப்பித்து வெளியிட்ட ஏடுகள், கல்வெட்டுகள், சாசனங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், செய்யுள் இலக்கியங்கள், வரலாறுகள், ஆய்வுகள், தோத்திரங்கள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள் எண்ணில் அடங்காது.  அச்சுக்கலை பெரிதும் வளராதிருந்த காலமது.  வசதியீனங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட பல நூல்கள் – எங்கள் பார்வைக்கும் பராமரிப்புக்கும் அகப்படாமல் எங்கெங்கோ தனித்தனியாகத் தேங்கிக் கிடந்து காலஓட்டத்தில் எங்கள் ஒட்டுமொத்த கவனமின்மையினால் எதிர்காலச் சந்ததியினரின் கைகளுக்கு கிடைக்காமல் போகலாம். அத்தகைய துர்ப்பாக்கிய நிலைக்கு இடங்கொடாமல் அவைகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து ஒரு முழுமையான நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறோம். புராணங்கள் தொடங்கி வரலாற்று ஆய்வுகள் வரை வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்ட இந்நூல் திருக்கோணேஸ்வரம் பற்றி அறிய ஆர்வமுள்ள அடியார்கள், தமது உயர்படிப்பு தேவை நோக்கி உண்மை வரலாற்றினைத் தேடும் மாணவர்கள், ஆலயங்கள், ஆன்மீக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,  பாடசாலைகள், வாசிகசாலைகள், சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டு அன்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் பயனளிக்கும் பெட்டகமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.  திருக்கோணேஸ்வரத்தைப் பற்றி யார் யார் எந்தெந்த அனுபவத்தினைப் பெற விரும்புகிறார்களோ அந்தந்த அனுபவத்தினைப் பெற்றுப் பயனடைய இந்நூல் உதவும்.

Continue Reading →

சிறுகதை: “தெற்றுப்பல்”

-கமலாதேவி அரவிந்தன் (மலேசியா) -பலத்த காற்று  வீசும்போதே  ஈரப்பதத்தையும் சேர்த்தே வீசியது கண் சிமிட்டும் நேரத்துக்குள் சடசடவென்று மழை பிடித்துக்கொண்டது.திசை மறித்த இக்கட்டின் சீற்றமாய்  அலறிக்கொண்டு  வந்த மழையைத் துளைத்துக்கொண்டே மழையோடு மழையாய்  வேக வேகமாக நடக்கும்போதே குடை சரிந்து சாய்ந்தது. ஆவேசத்தோடு குடையைத் துக்கி எறிந்த ராமலிங்கம் இன்னும் துரிதமாக நடையைப் போட்டான்.  ஒரு டேக்சியை நிறுத்தத் தோன்றவில்லை. டேக்சியில் ஏறினால் பத்தே நிமிடங்களில் போய்விடலாம் தான். ஆனால் திமிறத்திமிற முகத்தில் வந்து விழும் மழை நீரோடு ,கண்ணிலிருந்து விழுந்த உப்புநீரும் சட்டையை நனைக்க, ராமலிங்கம் வெறி பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்தான். அலமலந்து சொல்லிக்கொள்ள வாய்விட்டு ஆற்றிக் கொள்ள ஒருபற்றுக்கோடு கூட இல்லாமல்,  காற்றை இரண்டு கைகளாலும் அளைந்து வீசிக்கொண்டே,  ஏய், என்று ஓங்கிக் கத்தினான். எரி நட்சத்திரமொன்று, இருள் கிழித்த ஒளியாய் பளீரென்று, மின்னலும் இடியுமாய் கிடுகிடுக்க வானம் ஓவென்று கிழிந்து ஊற்றியது.அவள் மட்டும் இப்போது எதிரில் இருந்தால் அப்படியே அந்த இடுப்பிலேயே ஓங்கி மிதிக்க வேண்டும் போல் சண்டாளமாய்  வந்தது கோபம்

Continue Reading →