சிறுகதை: வழிப்பாதையின்…….

– சிவானந்த கக்கோட்டி, இந்திய  ஸ்டேட் வங்கியின் அதிகாரி. முக்யமான அஸ்ஸாமிய எழுத்தாளர். மறைந்து வரும் மனித விழுமியங்களையும் அதன் அக்கறையும் கிராம மக்களின் வாழ்வனுபவங்களோடு சொல்பவர். இவரின் கதைகள் . மூன்று சிறுகதைத் தொகுதிகளும், ஒரு நாடகமும் பதிப்பிததுள்ளார். 2000ம் ஆண்டில் மதிப்பிற்குரிய மும்மின் பர்கடகி விருதைப் பெற்றவர். –

சுப்ரபாரதிமணியன்நிலாவெளிச்ச முற்றத்தில் மெல்ல வினோதமான  மெளனம் விரைவாகப் பரவியது. முற்றத்தின் மத்தியில் வலது புறத்தில் பரவியிருந்த பாயின் கடைசிப் பகுதியிலிருந்து அய்டா மட்டும் பேசிக்கொண்டிருந்தான். பராமா, டெய்து ராஜன்,  பகுல், மைனா மற்ற  பக்கத்து வீட்டு சிறுவர்கள் அய்டாவை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டியின் உதடுகளிலிருந்து இந்த நேரத்தில் கதைகள் கசிந்து கொண்டிருக்கும். இருட்டின கொஞ்ச நேரத்திற்குப்பிறகு விலாசமான முற்றத்தில் பெரும்பாலும் எல்லா  குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விடுவர்.  பராமா அவனின் மூத்த சகோதனுடன் கொஞ்சம் தாமதமாக வருவான். அவர்களின் தினசரி படிப்பு வேலைகள் முடிந்தபின் அவர்கள் வருவர். அவர்கள் வெகு ஆர்வத்துடன் வருவர். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளித்தான் இருந்தனர்.. அவள் அவர்களுடைய சொந்த பாட்டியல்ல. ஆனால் குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் பொதுவாக கடைபிடிக்கப்படும் குழுவைச் சேர்ந்தவள். அவர்கள் அவசரப்படுவதில்லை.அய்தா எப்போதும் பாராமாவுக்குக்காக மற்ற குழந்தைகளுக்காகவும் காத்திருப்பான். சில வருடங்களுக்கு முன்பு வரை பாராமா  பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டே இந்த முற்றத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பான். வளர்ந்தபின்னும் கூட அவள் மடியிலேயே அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருப்பான்.  இந்த கதி பிகு திருவிழா நாளில் அவனுக்கு பனிரெண்டு வயது நிறைவடைந்தது பதிமூன்று வயது தொடங்கியது. அந்நாள் அம்மா பிராத்தனைகள் செய்து கடவுளுக்கு பிரசாதம் சமர்ப்பிப்பாள். அவன் வளர்ந்தாலும் அய்தாவின் கதைகள் தொடர்கின்றன.  அனைத்திற்கும் மேலாக, அவள் கதைக் களஞ்சியமாக இருந்தாள்.

Continue Reading →

கலை வழியே ஒரு கலகப் பயணம் – காசா மக்களுக்கு சமர்ப்பணம்…

தமிழ் ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் – ஆகஸ்ட் மாத படங்கள் பட்டியல்…  மனிதத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் திரையிடல்…

பேசாமொழி 18 வது இதழ் வெளிவந்துவிட்டது....நாள்: 01-08-2014 முதல் 29-08-2014 வரை, தினமும் மாலை 7.00 மணிக்கு, தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில். தொடர்புக்கு: 9840698236

நண்பர்களே, தொடர்ச்சியாக இன அழிப்பும், இன துவஷமும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நிலவியல் கூறுகள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கிடையேயான இன துவேஷம் எல்லா இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு போருக்கும் பின்னும், இன அழிப்பிற்கும் பின்னும் இருக்கும் நுட்பமான வல்லரசுகளின் அரசியலை நாம் சூழ்நிலைகேற்ப மறந்துவிடுகிறோம். மொழி, இனம், மதம், கலாச்சாரம், என எல்லாவற்றையும் தாண்டி, நம் போற்றவேண்டியதும், பாதுகாக்க வேண்டியதும் மனிதம். மனித மனதில் இருக்கும் கொஞ்சம் ஈரமும் காய்ந்துக்கொண்டே இருக்கிறது. சக மனிதன் மீது, பரிவு ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் சக மனிதன் மீது நமக்கு காழ்ப்புணர்வும், குரோதமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் மனிதத்தை வலியுறுத்த வேண்டியது படைப்புகளின் கடமை. காசாவில் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான இன அழிப்பை எதிர்க்கும் விதமாகவும், காசாவில் வசிக்கும் ஒவ்வோவருக்குமான ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும், தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரையரங்கத்தில் இந்த மாதம் முழுவதும் மனிதத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவிருக்கிறது.

Continue Reading →

மாயா ஏஞ்சலோ கவிதைகள் / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ (1928 – 2014)

1_maya_angelou5.jpg - 5.97 Kb1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர். தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—5

“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” –  கண்ணதாசன்

- பிச்சினிக்காடு இளங்கோ கும்மிப்பாடல்கள்,நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள்,நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள்,மாலையில்,இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை;இசையை; கலையை; அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக்குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள். அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன்.  எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள்.அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன். எங்களூர் ஏகலைவன் உறவினர்,கவிதை நண்பர் திரு பெ.அண்ணாமலை யார் பாடுறது? இளங்கோவா? என்று கேட்டது காதில் விழுந்தது. அடுத்த நொடியே நல்லாயிருக்கே என்றார். அதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற முதல் பாராட்டு. அது இன்னும் என்னோடு இருக்கிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 49: கவிதை நயம், கவிதை, Two Women & குட்டிக்கதை!

கவிதை நயம் மற்றும் கவிதைத்தொகுப்பு பற்றி….
 

வாசிப்பும், யோசிப்பும் - 49

கவிதையை நயப்பதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். கவிதையிலுள்ள உவமை, உருவகம், குறியீடு, கற்பனை வளம், சொல் வளம் இவையெல்லாவற்றையும் அறிந்து , உணர்ந்து, சுவைப்பதற்குக் கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமெ சாத்தியம்.  எனவேதான் கவிதைகளைத் தொகுப்பவர்களுக்குக் கவிதையைச் சுவைக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பதென்ன? கவித்துவமில்லாத கவிதைகளெல்லாவற்றையுயும் தொகுத்திருப்பார்கள். இதற்குக் காரணம் இவ்விதமாகக் கவிதைகளைத் தொகுப்பவர்கள், தொகுக்கப்படும் கவிதைகளின் நயத்தை அறிந்து , சுவைக்கத்தெரியாதவர்களாக இருப்பதுதான்..
 
இவ்விதம் தொகுக்கப்படும் கவிதைத்தொகுப்புகளை அவர்களது குழுவினருக்கு ஆதரவாக இயங்கும் திறனாய்வுப் பெருந்தகைகளை அல்லது தமிழகத்து இலக்கிய ஆளுமைகளை அழைத்துச் சிறப்பித்து நூல்களை வெளியிட்டு வைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்பட்ட ஆளுமைகளும் தம் பங்குக்கு ஏதாவது கூறி வைப்பார்கள். அத்துடன் சரி. ஒரு சில மாதங்களில் மறக்கடிக்கப்பட்ட தொகுப்புகளாக அவை மாறிவிடும்.

Continue Reading →