வந்தவாசி.ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டிய பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேஷ் பேசும்போது குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர்கள் தெ.இராஜேஸ்வரி, இரா.அப்பாண்டைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் இரா.அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.
‘பூமி, சூரியன் மற்றும் சந்திரன்’ பற்றிய அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பட்டது. ‘உலகம் உருவான கதை’ எனும் அறிவியல் நூலை வெளியிட்டு, ‘அறிவியலும் நாமும்’ எனும் தலைப்பில் யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேஷ் பேசும்போது, காலம் எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறினாலும், வளர்ந்த நாடுகள் போராயுதங்களை-அணுகுண்டுகளை வைத்துக் கொண்டு, சிறிய வளரும் நாடுகளை மிரட்டுகிற போக்கு இன்னும் மாறவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்கிற அறிவியல் ரீதியான தெளிவைப் பெற மாணவர்கள் எப்போதும் தயங்க கூடாது. சிறுவயதில் நமக்குள் எழும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடமும் கற்றறிந்த சான்றோர்களிடமும் கேட்டு, அவற்றிற்கான விளக்கங்களைப் பெற முயற்சிக்க வேண்டும்.
மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்பிரமணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத் தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர். 1986ஆம் வருடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவை யாறு அரசர் தமிழ் மற்றும் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பட்டயப் படிப்பில், விதிவிலக்கின் அடிப்படையில் தனது 29ஆம் வயதில் சேர்ந்தார் வெங்கடசுப்பிர மணியன். இவர் ஒருவர் தான் மாணாக்கர்களில் பார்வையிழந்தவர். ஆரம்பத்தில் இவரை ஒருமாதிரிப் பார்த்த சக மாணவர்கள் நாளாக ஆக இவரை மூத்த சகோதரனைப்போல் நடத்தத் தொடங்கினார்கள். அவர்கள் 8ஆம் வகுப்பு படித்தவர்களே. ஆனால், அவர்கள் வெங்கடசுப்ரமணியனின் கல்வி தொடர பெரிதும் உதவினார்கள். அவருக்கு ஆர்வமாகப் படித்துக்காட்டினார்கள். பள்ளிக் கல்வியையும் முடித்தார் வெங்கடசுப்ரமணியன். மிருதங்கம் கற்கத் தொடங்கியவர் இறுதியில் இந்திய இசையில் கீழ்/மேல் நிலைகளில் தேறினார். 1991இல் டி.டி.ஸி முடித்தார்(இசையாசிரியர் பயிற்சி). 1995இல் வெங்கடசுப்ரமணியனின் மனைவியாக மனம்விரும்பி முன்வந்தவர் சூரியா. பார்வையுள்ளவர். இன்றளவும் வெங்கடசுபரமணியத்தின் வலதுகர மாகத் திகழ்ந்துவருகிறார்!
தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:
1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.
2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.
இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.
நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்
“திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.”
நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்
“திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.”
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி பெயர்ப்பாளராகத் திகழும் எழுத்தாளர் கெக்கிறாவ சுலைஹாவின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனத்தின் 17 ஆவது இதழ். ஜுன் மாதம் 26 ஆம் திகதியான சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை நினைவூட்டி, மதுவும் போதைப் பொருள்களும் இன்று மக்கள் மத்தியில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும், மாணவர்கள் மத்தியில் அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது, அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆசிரியர் தனது ஆசிரியர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். இதழின் உள்ளே பதுளை பாஹிரா, ஷெல்லிதாசன், எல்.தேனுஷா, எம்.எம். அலி அக்பர், த. ஜெயசீலன், செ. ஞானராசா, வெலிப்பண்ணை அத்தாஸ், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோர்களது மூன்று சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.
இன்று ஆங்கில மொழிபெயர்ப்புத் துறையில் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருப்பவர்கள் ஒரு சில படைப்பாளிகளே. இதில் கெக்கிறாவ சுலைஹா அத்தகையதொரு சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றார். நேர்காணலில் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் படைப்பாளி கெக்கிறாவ ஸுலைஹாவை, ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு அவர் மூலமாக அவரைப் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளார். உண்மையில் கெக்கிறாவ ஸுலைஹாவைப் பற்றி அறிந்துகொள்ள இந்தத் தகவல்கள் பெரிதும் உதவுகின்றன.
“வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார்.
இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்சத்தம் கேட்க, விறாந்தையில் இருந்த தம்பி வீரிட்டுக் குளறினான். அம்மா விறாந்தைக்கு ஓடினாள். இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை. ஆமி மூவ் பண்ணி வருகிறதாம் சனங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் ஆரவாரம் ரோட்டில். குண்டுச்சத்தங்கள்.. அப்பா ரோட்டுக்கு ஓடுவதும் வீட்டுக்கு வருவதுமாக ஒரு நிலையின்றித் தவித்துக்கொண்டிருந்தார். “எல்லாச் சனங்களும் வெளிக்கிட்டிட்டுதுகள். நாங்கள் மட்டும் இருக்கிறம்…. வெளிக்கிடுங்கோ போவம்!” என அடிக்கடி சொன்னார்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த சில மாதங்களாக இலக்கியத்துறையில் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்நாட்டில் குடியேறிய ஏனைய இனத்தவர்களின் வாழ்வு அனுபவம் தொடர்பான சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியையும் எதிர்வரும் 16-08-2014 திகதி சங்கம் நடத்தவிருக்கிறது. அவுஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடாகவும் பல்தேசிய கலாசார நாடாகவும் விளங்குகின்றமையினால் ஏனைய இனத்தவர்களின் வாழ்வனுபவங்களையும் தெரிந்துகொள்ளும்வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நாட்டில் வதியும் தமிழ்ப்படைப்பாளிகள் – கலைஞர்கள் பிற இனத்தவர்களின் வாழ்வு அனுபவங்களை நேரடி உரையாடல்களின் மூலம் தெரிந்துகொள்வதன் ஊடாக தமது படைப்பு இலக்கியம் மற்றும் கலைத்துறைகள் தொடர்பான சிந்தனைகளையும் பார்வையையும் மேலும் விரிவுபடுத்திக்கொள்ள முடியும். முதற்கட்டமாக இலங்கையர் மற்றும் தென் ஆசிய நாட்டைசேர்ந்த பல்தேசிய இனத்தவர்களும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ள இந்த சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் பார்வையாளராகவும் பங்கு பற்றுவோராகவும் கலந்து கொள்ளவும் வருமாறு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது. மேலும் இந்த நிகழ்வில் சிறந்த கதை சொல்பவருக்கு $ 50 வெள்ளி பரிசும் காத்திருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் இலக்கியத்துறையில் ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வருடாந்தம் ஒன்று கூடச்செய்யும் தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நான் ஒழுங்குசெய்து அதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியிலிருந்து நண்பர் கலாமணி ( தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் அதன் ஆசிரியர் பரணீதரனின் தந்தையார்) தமது குடும்பத்தினருடன் வந்து எமதில்லத்தில் தங்கியிருந்தார். கலாமணி தமது பூதத்தம்பி இசைநாடகத்தை எழுத்தாளர் விழாவில் மேடையேற்றுவதற்காகவும் விழாவில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் உரையாற்றுவதற்காகவும் வருகைதந்திருந்தார். கலாமணி தற்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியிலிருக்கிறார். 2001 ஆம் ஆண்டு முதலாவது எழுத்தாளர் விழா அழைப்பிதழ்களுக்கு முகவரிகளை எழுதி முத்திரைகளை ஒட்டிக்கொண்டிருந்தபொழுது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நண்பர் கலாமணிதான் எடுத்தார்.
எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது. நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது. அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.