– சிவானந்த கக்கோட்டி, இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரி. முக்யமான அஸ்ஸாமிய எழுத்தாளர். மறைந்து வரும் மனித விழுமியங்களையும் அதன் அக்கறையும் கிராம மக்களின் வாழ்வனுபவங்களோடு சொல்பவர். இவரின் கதைகள் . மூன்று சிறுகதைத் தொகுதிகளும், ஒரு நாடகமும் பதிப்பிததுள்ளார். 2000ம் ஆண்டில் மதிப்பிற்குரிய மும்மின் பர்கடகி விருதைப் பெற்றவர். –
நிலாவெளிச்ச முற்றத்தில் மெல்ல வினோதமான மெளனம் விரைவாகப் பரவியது. முற்றத்தின் மத்தியில் வலது புறத்தில் பரவியிருந்த பாயின் கடைசிப் பகுதியிலிருந்து அய்டா மட்டும் பேசிக்கொண்டிருந்தான். பராமா, டெய்து ராஜன், பகுல், மைனா மற்ற பக்கத்து வீட்டு சிறுவர்கள் அய்டாவை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டியின் உதடுகளிலிருந்து இந்த நேரத்தில் கதைகள் கசிந்து கொண்டிருக்கும். இருட்டின கொஞ்ச நேரத்திற்குப்பிறகு விலாசமான முற்றத்தில் பெரும்பாலும் எல்லா குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விடுவர். பராமா அவனின் மூத்த சகோதனுடன் கொஞ்சம் தாமதமாக வருவான். அவர்களின் தினசரி படிப்பு வேலைகள் முடிந்தபின் அவர்கள் வருவர். அவர்கள் வெகு ஆர்வத்துடன் வருவர். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளித்தான் இருந்தனர்.. அவள் அவர்களுடைய சொந்த பாட்டியல்ல. ஆனால் குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் பொதுவாக கடைபிடிக்கப்படும் குழுவைச் சேர்ந்தவள். அவர்கள் அவசரப்படுவதில்லை.அய்தா எப்போதும் பாராமாவுக்குக்காக மற்ற குழந்தைகளுக்காகவும் காத்திருப்பான். சில வருடங்களுக்கு முன்பு வரை பாராமா பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டே இந்த முற்றத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பான். வளர்ந்தபின்னும் கூட அவள் மடியிலேயே அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருப்பான். இந்த கதி பிகு திருவிழா நாளில் அவனுக்கு பனிரெண்டு வயது நிறைவடைந்தது பதிமூன்று வயது தொடங்கியது. அந்நாள் அம்மா பிராத்தனைகள் செய்து கடவுளுக்கு பிரசாதம் சமர்ப்பிப்பாள். அவன் வளர்ந்தாலும் அய்தாவின் கதைகள் தொடர்கின்றன. அனைத்திற்கும் மேலாக, அவள் கதைக் களஞ்சியமாக இருந்தாள்.