வாசிப்பும், யோசிப்பும் 76 : பூங்குழழி வீரனின் ‘இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை’ என்னும் ‘வல்லின’ச்சஞ்சிகைக்கட்டுரை பற்றிச்சில குறிப்புகள்….

வாசிப்பும், யோசிப்பும் 76 : பூங்குழழி வீரனின் 'இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை' என்னும் 'வல்லின'ச்சஞ்சிகைக்கட்டுரை பற்றிச்சில குறிப்புகள்....‘இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை‘ என்னும் தலைப்பில் பூங்குழழி வீரன் என்பவரால் ‘வல்லினம்.காம்’ இணையச்சஞ்சிகையில் கட்டுரையொன்று எழுதப்பட்டுள்ளது.

கட்டுரையில் “1943-இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும் அவர்களால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையும் இலங்கையில் நவீன கவிதை முயற்சிக்கான களத்தினைத் திறந்து விட்டிருந்தது. இதன் விளைவாக மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி போன்ற பலர் நவீன கவிதை முயற்சிகளில் இறங்கினர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாவலர் துரையப்பாப் பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை, அழக.சுந்தரதேசிகர் போன்ற பல கவிஞர்கள் இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டத்தினைக் கொண்டிருந்த நிலையில், நீலாவாணன், மஹாகவி, முருகையன் போன்றோரும் முதன்மை பெறுகின்றார்கள்.” என்றூ குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading →

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை

பத்திரிக்கைச் செய்தி : நாவல் ஆய்வரங்கம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடைஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ என்ற புதிய நாவல் ஆய்வரங்கம் சனியன்று  மாலை மகாகவி வித்யாலயா, இந்திராநகர், icic வங்கி அருகில்அவினாசி சாலையில் வி.மணி, மாநிலத்தலைவர் , அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை மாநில பொதுச்செயலாளர்  தேனி விசாகன் பேசுகையில் “ சமூகப் போராளிகள் அவர்கள் வாழும் கால்த்திலேயே அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் . அவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக் இருந்தாலும், தன்னார்வத் தொண்டர்களாக இருந்தாலும், சமூகப்பணியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகத்தில் பெரிய அங்கீகாரம் இல்லாமல் இருப்பது துயரமானது. சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற போராளிகளும், செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் “ என்றார்.

சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை இந்த ”புத்துமண் “ நாவல் சொல்கிறது. இதை சென்னை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 120 விலை ரூ 100

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ஏற்புரையில் : நவீன முதலீட்டாளர்கள், கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களை அக்கறையுடன் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். முதலீட்டாளர்கள், .கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரை,  மண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக  கார்ப்பரேட்  சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும்  என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை படைப்புகள்   மூலம் வலியுறுத்துகிறோம்.. முதலீட்டாளர்கள்,  கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.அதைக் கடைபிடித்தால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியும் “

Continue Reading →

கவிதை: பின்வயது இலக்கியத்தில் விம்மிய தினங்கள்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இளம்நண்பர் சுறுசுறுப்பர் சிறுகதையை நான் படித்தேன்.
மளமளென்று எழுதியது…  மைகூடக் காயவில்லை…
இருந்தசிறு குறைகள்என் துருதுருப்பைக் குறைக்கவில்லை.
புரிந்து அதனைப் படித்து விட்டுப் பல மணிகள் சிந்தித்தேன்.

அன்புக்கு இலக்கணமாய் காதலுக்கோர் பொற்சிலையாய்
இன்சுவைகொள் இலக்கியமாய் மானிடத்தின் முதன்மையனாய்
என்னுளத்துள் இடம்பிடித்தான் கதைமாந்தன் என்னும் ‘அவன்” —
தன்-இனியாள் மறைவாய் மணந்தும் கடுகளவும் வெறுக்காதான்.

அடுத்தநாள் காலையிலே படுக்கைவிட்டு எழுமுன்னம்
நடுநிசியில் தொடங்கியஎன் நடுவு-நிலை ஆய்வுகளின்
முடிவுகள் முன்னிடம்பெற்று மனத்திரையில் ஓடுகையில் 
சடுதியாய் என்கண்கள் சலக்குளமாய்ப் பனித்தன பார்!

Continue Reading →

சிறுகதை: ஈழத்தில் ஒரு தாய்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -மங்காமல் ஒளிவீசும் மணிகள்போன்று
எங்கள், தொல் தமிழீழ மானிப்பாயின்
தங்கரத்தினம் என்னும் குணத்தின் குன்று
தாய்க்குலத்தார் பலர்போற்றும் தலைமைமாது
அங்காங்கு பந்துக்கள் அகதிகளாய்
அலைக்கழிந்து வாய்க்கரிசி போடுதற்கும்
பங்காகப் பாடையினைச் சுமப்பதற்கும்
பக்கத்தில் இல்லாமல் தனித்துச் சென்றாள்.

ஊரில் எவருக்குமே அவள் தங்கமாமி. எனக்கும் தான். நான் அவளின் ஒரே மகளை மணம் முடித்தேன். எப்போதும் பகிடியுடன் சிரித்த முகம்.  ஒரு மாதிரியான வஞ்சகமில்லாத கேலிச்சிரிப்பு என்றும் சொல்லலாம். தங்கமும் குடும்பத்தில், நான்கு சகோதரர்களுடன் ஒரே மகள். அவருக்கும், என்னுடைய மனையாளுடன் நான்கு ஆண்பிள்ளைகள்.

மானிப்பாயில் மரியாதையாக வாழ்ந்துவந்த குடும்பம். மாமிக்கு, எட்டு வாரங்களின் முன் பிறந்த குழந்தையிலிருந்து எண்பது தொண்ணூறு வயதினர் வரையில் எல்லோரும் நண்பர்களே. இப்படியான ஒரு ஆத்மா, குடும்பத்தினர் ஒருவருமே கிட்டடியில் இல்லாமல், அநாதை போல, நோயினில் நினைவின்றிப் பிரிந்துசென்றது. ஏன்?  எப்படி?  வாழ்வெல்லாம் எல்லோரிடமும் அந்த அசாதாரணத் தாயார் நல்லெண்ணமும் நற்பெயரும் தேடியது இதற்காகத்தானா?

Continue Reading →

‘மக்கள் முதல்வரும்’, ஶ்ரீரங்கத்தேர்தல் முடிவும்’

'மக்கள் முதல்வரும், ஶ்ரீரங்கத்தேர்தல் முடிவும்'

தமிழக முன்னாள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கெதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தபோது பின்வருமாறு என் முகநூல் குறிப்பொன்றில் குறிப்பிட்டிருந்தேன்:

“தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட இந்நிலையால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பவர்கள் அவருக்கு வாக்களித்த தமிழகத்தின் பொதுமக்கள்தாம். ஜெயலலிதாவின் செல்வாக்கு உச்சத்திலிருக்கும் சமயத்தில் இந்தத்தீர்ப்பு வந்திருப்பதால், அவரைத் தெய்வமாக நினைக்கும், அவருக்காக அவரது கட்சிக்கு வாக்களித்தவர்கள் (பெரும்பாலானவர்கள் பாமர மக்கள்) இந்தத்தீர்ப்பினை அம்மாவுக்கெதிரான அரசியல் பழிவாங்கலாகவே கருதுவார்கள். இந்தத்தீர்ப்பும் ஒரு விதத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்தான். தமிழகத்தில் செல்வாக்கினை இழந்த தி.மு.க.வும் ஏனைய கட்சிகளும் தம் செல்வாக்கினைக் கட்டியெழுப்ப முனையும் அதே சமயம், ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்யும். ஆனால் அவர்களின் திட்டங்கள் வெற்றியடையுமா என்பது கேள்விக்குறிதான். ஜெயலலிதா அரசியல்ரீதியில் செல்வாக்கினை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இது போன்றதொரு தீர்ப்பு வந்திருந்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கும். ஆனால் அவர் தமிழக மக்களிடத்தில் செல்வாக்குடனிருக்கும் சமயத்தில் இத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால், இத்தீர்ப்பானது அவர் மீது அனுதாபத்தினை ஏற்படுத்தப்போகின்றது. இதன் விளைவாக அ.தி.மு.கவின் வலிமை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரப்போகின்றது.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 75 கருணாகரனின் ‘இலங்கையின் தமிழ் இலக்கியம்’ பற்றிச்சில குறிப்புகள்…..

வாசிப்பும், யோசிப்பும் 75  கருணாகரனின் 'இலங்கையின் தமிழ் இலக்கியம்' பற்றிச்சில குறிப்புகள்.....அண்மையில் ‘வல்லினம்’ இணையத்தளத்தில் கருணாகரனின் ‘ இலங்கையின் தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையினை வாசித்தேன். கட்டுரையின் ஓரிடத்தில் கட்டுரையாளர் ‘மணிக்கொடியில் புதுமைப்பித்தனைப்போல மறுமலர்ச்சியில் அ.செ.மு இருந்தார். புதுமைப்பித்தன் எழுத்தின் உச்சத்தைத் தொட்டார். அ.செ.மு பத்திரிகையாளராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். இதனால் தன்னை முழுமையாக இலக்கிய எழுத்தில் ஈடுபடுத்திக்கொள்வதற்கே அ.செ..முவினால் முடியாமற் போய்விட்டது. மறுமலர்ச்சி முக்கியமான பல படைப்பாளிகளை உருவாக்கியது’ என்று குறிப்பிடுவது ஆச்சரியத்தைத்தருகின்றது. அக்கூற்று அ.செ.மு பற்றிய போதிய ஆய்வின்றி கூறப்பட்ட கூற்றாகவே எனக்குத்தென்படுகின்றது.

அ.செ.மு புனைகதையில் சாதனை புரிந்தவர். அவரது சிறுகதைகள் முக்கியமானவை. அவரது படைப்புகள் பல இன்னும் நூலுருப்பெறவில்லையென்பதற்காக அவரது பங்களிப்பை மறந்துவிடவோ அல்லது மறைத்து விடவோ முடியாது. ஒரு படைப்பாளியின் படைப்புகளின் எண்ணிகையை மட்டும் வைத்து அவரது சாதனையையோ அல்லது பங்களிப்பினையோ மதிப்பிடுவதில்லை. அ.செ.மு பத்திரிகையாளராக இருந்த அதே சமயம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் புனைகதைத்துறையிலும் காத்திரமாகக் கால் பதித்தவர். அவரது சிறுகதைத்தொகுதியான ‘மனித மாடு’ (யாழ் இலக்கியக் கலாச்சாரபேரவையினால் வெளியிடப்பட்டது) நூலுக்கு விடுதலைப்புலிகளின் கலைப்பண்பாட்டுக்கழகத்தினர் பணமுடிப்பு வழங்கிக்கெளரவித்ததாக அவர்கள் வெளியிட்ட எரிமலை சஞ்சிகையில்  வாசித்திருக்கின்றேன்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 74 : அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ நாவல் கிடைத்த கதை. அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருப்போர் தொடர்புகொள்ளவும்.

தொடர் நாவல்: மனக்கண்அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளில் இதுவரையில் வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்; தமிழகத்தில் பாரி பதிப்பாக வெளிவந்தது.), மதமாற்றம் (நாடகம்) தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டது. ஏனைய படைப்புகள் இதுவரையில் நூலுருப்பெறவில்லை. மொழிபெயர்ப்பு நாவலான நாநா, குழந்தைகளுக்கான நாவல் ‘சங்கீதப் பிசாசு’, தினகரனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பினைப்பெற்ற ‘மனக்கண்’ நாவல், அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனக்குறிப்புகள் என அனைத்தும் நூலுருப்பெற வேண்டியது அவசியம்,

அ.ந.க.வின் படைப்புகளைப்பெறுவதற்காக இலங்கையிலுள்ள எழுத்தாளர்கள் பலருடன் தொடர்புகொண்டேன். உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதாகவும் குறிப்பிட்டேன். எதுவுமே சரிவரவில்லை.

பின்னர் அமரர் சில்லையூர் செல்வராஜனின் துணைவியார் திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடம் நாவலின் பிரதி இருப்பதாகவும், தொடர்புகொள்ளும்படியும் கூறியிருந்தார். அவ்விதமே தொடர்புகொண்டபோது அவர் அப்பிரதிக்கு வைத்த விலை அக்காலகட்டத்தில் என்னால் கொடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. மீண்டும் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடமிருந்த பிரதியைக் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்துக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அதன் பின்னர் அப்பிரதியைப் பல வழிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

Continue Reading →

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்இயற்கை, இயற்கைச் சார்ந்த புற உலகில் மாந்தன் நொடியொரு பொழுதும் பல்வேறு விதமானப் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டே வந்ததை வரலாறு மெய்ப்பிக்கின்றது. இத்தகு போராட்டங்கள் முதலில் உணவுக்காகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான போராட்டமாகத் தொடங்கி பின்னர் செல்வ பெருக்கத்திற்கும், சிலர் அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாகவே பெரும் போர்கள் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன. அப்போர் நிகழ்வுகளில் மலையும், மலையைச் சார்ந்து வாழ்ந்த மக்களுக்கிடையே ஆநிரைகளைக் கவர்தலும் அதனை மீட்டலுக்குமான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன.

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழ்க் காதல்

பண்டைத் தமிழ்க் காதல்  - பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – இயற்கை சமூகம் உள்ளடக்கிய இந்நிலவுலகில் உயிரினங்களின் செயல்கள் யாவும் ஒன்றோடொன்று இணைந்தது! இது இயற்கையானது! இவ்வேட்கை இயல்பானது! எதார்த்தமானது! இதனை அறிந்தே தமிழ் ஆசான் தொல்காப்பியர்,

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்காப்பியம். நூ.)

என்றார். மனித குலத்தின் இயற்கை இயல்பான இன்ப நுகர்வாம் காதல்; அது அனைத்துக்குமான பிணைப்பு நிலை: அது இயற்கையோடு பொருந்திய ஒழுக்க நிலை; அவற்றை மானுட உடலுயிரினின்று பிரித்து அறிய முடியாது! அத்தகு காதலைப் பழந்தமிழகம் போற்றிற்று; நூல்களின் வழியாக உணர்த்திற்று:

Continue Reading →

கோசின்ரா (கொல்கத்தா) கவிதை

1
கோசின்ரா (கொல்கத்தா) கவிதைநண்பனுக்கு நிறைய வேலைகள்
என்னுடைய காலையைப்போலத்தான்
அவனுடைய காலையும்
இளம் வெயிலால் நிரப்பட்டிருக்கும்
அவனுடைய தொடக்கமும்
என்னுடைய தொடக்கமும்
உறக்கத்திலிருந்து எழுவதுதான்
அவனுடைய கடமையும் என்னுடைய கடமையும் வேறுவேறு
வெவ்வேறு பரபரப்புகளால் மூடப்பட்டவை
நண்பன் பூப்பறித்துக்கொண்டிருக்கும் போது
நான் தூங்கிக்கொண்டிருப்பேன்
நண்பன் வேதம் ஓதிவிட்டு  யோகா செய்யும் போது
நான் என் உறக்கத்தைக்கழற்றி விடுவேன்
அவன் காயத்திரி மந்திரம் ஜெபிக்கும் போது
விடுதலை படிப்பேன்

Continue Reading →