சிறுகதை: பாம்பு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு. இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மனைவி ஓடிவந்து கூறினாள்.

‘ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு.. உங்கள வரட்டாம்!”

எட்டு பத்து வயதுமான எனது பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஜசீலா அன்ரியின் வீடு நோக்கித்தான். அவர்களுக்கு இது விளையாட்டாயிருந்தது. (அதிலும் சின்னவன், ஒரு நாள் வீதி ஓரத்தில் போன குட்டிப் பாம்பு ஒன்றை வாலிற் பிடித்துத் தூக்கிவந்தான். ‘அப்பா நல்ல வடிவான குட்டிப் பாம்பு. பார்த்தீங்களா?” என்று! அந்தக் குட்டியும் என்ன நினைத்ததோ அவனைக் கடித்துப் பதம் பார்க்கவும் இல்லை.)

Continue Reading →

நிகழ்வுகள்: “ பனியன் “ நாவல் வெளியீடு:

[இத்தகவலினைத் தவறுதலாகத் தவற விட்டு விட்டோம். ஒரு பதிவுக்காக பிரசுரமாகிறது.  – பதிவுகள் -] 10/01/15 சனி மாலை 6 மணிஸ்ரீ இராம மடாலயம்( நாச்சியார் கோவில்…

Continue Reading →

ஆய்வு: ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்

ஆய்வு: ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது.  தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு தெரிந்த தெலுங்கு மொழியைக் கற்க விரும்பும் சமற்கிருதவானர் எடுத்துக்கொண்டால் பெயர் வினைகளைப் பற்றித் தவறாமல் பேசியிருக்கிறது. தெலுங்கு  வினைக்கென ஓர் இயலை அமைத்துச் (கிரியா பரிச்சேதம்) சமற்கிருத வேர்ச்சொற்களைத் தற்சம வினைகளாக மாறும் படிநிலைகளையும் வினையியலின் போக்குகளையும் இனம்காணும் வகையில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

      முதல் தெலுங்கு இலக்கண நூலான ஆந்திர சப்த சிந்தாமணி கி;.பி 11-ஆம் நூற்றாண்டில் நன்னையா அவர்களால் இயற்றப்பட்டது. ஆந்திர சப்த சிந்தாமணிக்கு நன்னய பட்டீயம்;இ வாகம சாஸநீயம்;இ; சப்தானு சாஸனம்;;இ பிரகிரியா கௌமதி;;இ ஆந்திர கௌமதி;;இ ஆந்திர வியாகரணம்; என்ற பெயர்களும் உண்டு. இது நன்னையாவால்  இயற்றப்பட்டதென்பது பழங்கால இலக்கணிகளின் நம்பிக்கை.  தெலுங்கு இலக்கியத்தில் ஆதிகவி யார் என்ற விவாதத்தைப் போலவே முதல் இலக்கணி யார் என்பதும் இன்றுவரை உறுதிபடுத்தாத நிலை உள்ளது. ஆதிகவியான நன்னையா முதல் இலக்கணி என்பது பல புலவர்களின் கருத்தாகும.

Continue Reading →

காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் – 2014

1_nadeswara-2014a.jpg - 16.02 Kbகடந்த ஞயிற்றுக்கிழமை (21-12-2014) காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடாக்கிளையின் குளிர்கால ஒன்றுகூடலும், இராப்போசன விருந்தும் கனடா ஸ்காபரோவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்த விழாவில் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவரான திரு. குணசிங்கம் வைத்தியகலாநிதி திருமதி குணசிங்கம் ஆகியோர் லண்டன் ஒன்ராறியோவில் இருந்து வருகைதந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

விழா ஆரம்பத்தில் முதலில் மங்களவிளக்கேற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டது. தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து இயல், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. புதிய தலைமுறையினர் விரும்பி ரசிக்கும் திரையிசை நடனங்களும் அவ்வப்போது இடம் பெற்றன. நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர்களும், மாணவர்களின் பிள்ளைகளும், குறிப்பாக அடுத்த தலைமுறையினர் இந்த நிகழ்ச்சியில் அதிகமாகக் கலந்து கொண்டனர். திரு. பரம்ஜி ஞானேஸ்வரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். கனடா கிளையின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். இதைவிட காங்கேசந்துறை வடபகுதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வருவதால் அங்கு மீள்குடியேற்றம் நடைபெறாமல் இருப்பதும், பாடசாலையை மீண்டும் காங்கேசந்துறையில் இயங்கச் செய்ய எப்படியான நடவடிக்கைகள் சாத்தியம் என்பது பற்றியும் சங்கக் காப்பாளர்களில் ஒருவராக பி. விக்னேஸ்வரன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு, அது சம்பந்தமாகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட விவரண ஒளிப்படமும் காண்பிக்கப்பட்டது.

Continue Reading →

நூல் அறிமுகம்: அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

book_alukaihalnirantharamillai5.jpg - 11.19 Kbஈழநாதம், தினமுரசு பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக, உதவி ஆசிரியராக, பிரதேச செய்தியாசிரியராக பணிபுரிந்தவர் அலெக்ஸ் பரந்தாமன். எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நேர்காணல், பத்தி எழுத்துக்கள், கட்டுரைகள் போன்றவற்றை பத்திரிகைகள் ஊடாக களப்படுத்தி வந்துள்ளார். ஜீவநதி வெளியீட்டகத்தின் 38 ஆவது தொகுப்பாக வெளிவந்துள்ளது அலெக்ஸ் பரந்தாமனின் கன்னிச் சிறுகதைத் தொகுப்பு. 58 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 10 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.

அனலெனவாகிய நினைவுகள் (பக்கம் 01) என்ற முதல் சிறுகதை போரின் கோரத் தாண்டவத்தால் மக்கள் படும் அல்லலை சித்திரித்துக் காட்டுகின்றதெனலாம். பிள்ளைகளுடன் கொட்டிலுக்குள் வறுமை வாழ்வு கழிக்கும் சிறியதொரு குடும்பத்தின் சோக நிகழ்வுகள் இக்கதை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் வயதான ஒரு மாமாவின் பாத்திரமும் உள்ளடக்கப்ட்டிருக்கின்றது. அவர் முணுமுணுக்கும் வார்த்தைகள் இதுதான்..

‘அவன் ஆமி வாறதைப் பார்த்தால் எல்லோரையும் புடிச்சிடுவாங்கள் போலக்கிடக்கு. புடிச்சு எல்லோரையும் சுட்டுவிட்டாங்கள் என்றால் உபத்திரவமில்லை…’

Continue Reading →

நூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் “ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்” சில இரசனைக் குறிப்புக்கள்……..

நூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்" சில ரசனைக் குறிப்புக்கள்........ - வேலணையூர்-தாஸ் -ராஜாஜி ராஜகோபாலன் ஈழத்தில் இருந்த கனடாவுக்குச் சென்று அங்கு வசித்த வருபவர்.  அவருடைய படைப்பாக வளரி எழுத்துக்கூடம் வெளியிட்ட ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் பற்றி சில குறிப்புக்கள் .  கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளை வெளிக்கொணரும் மொழியின் ஒரு அழகிய பகுதி . அந்தக்கவிதையை கையிலெடுத்த ராஜகோபாலன் ஈழத்து வாழ்வியலை அதன் பண்பாட்டம்சங்களை அழகிய கவிதைகளாக இத்தொகுதியில் தந்திருக்கிறார். “அம்மாமெத்தப் பசிக்கிறதே” என்ற கவிதை போர் முனையில் சிதைந்த ஒரு சிறுவனின் வாய்ப்பாடாக பின்வருமாறு வெளிப்படுகிறது “வானமே எங்கள் கூரையம்மா. வெண் மணலே எங்கள் கம்பளமாம். வேலிக்கு வெளியே வேறுலகம். வேதனை என்பதே நம்முலகம்.

“மரங்கள் என் நண்பர்கள்” என்ற கவிதை இயற்கையோடு இணைந்து இவர் கவி மனதை வெளிப்படுத்துகிறது. “ஒழுகும் நிழலின் அணைப்பில் அயர்வேன் .தழுவும் இதழ்களில் காதலில் கரைவேன் தேயும் மரங்களின் தியாகத்தை மதிப்பேன் .தாங்கும் தண்டினில் தந்தையை துதிப்பேன்.” என தொடர்கிறது அக்கவிதை . “மங்கையராய் பிறப்பதற்கே” என்ற கவிதை பெண்ணடிமைத் தனத்தை யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. “மாவை அரைக்கிறாய் மாவாய் அரைபடுகிறாய் . உரலில் இடிக்கிறாய் உரலால் இடிபடுகிறாய். பகலில் முறிகிறாய் படுக்கையிலும் முறிகிறாய்.” எனத் தொடர்கிறது அக்கவிதை .

Continue Reading →