வாசிப்பும், யோசிப்பும் 74 : அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ நாவல் கிடைத்த கதை. அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருப்போர் தொடர்புகொள்ளவும்.

தொடர் நாவல்: மனக்கண்அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளில் இதுவரையில் வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்; தமிழகத்தில் பாரி பதிப்பாக வெளிவந்தது.), மதமாற்றம் (நாடகம்) தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டது. ஏனைய படைப்புகள் இதுவரையில் நூலுருப்பெறவில்லை. மொழிபெயர்ப்பு நாவலான நாநா, குழந்தைகளுக்கான நாவல் ‘சங்கீதப் பிசாசு’, தினகரனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பினைப்பெற்ற ‘மனக்கண்’ நாவல், அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனக்குறிப்புகள் என அனைத்தும் நூலுருப்பெற வேண்டியது அவசியம்,

அ.ந.க.வின் படைப்புகளைப்பெறுவதற்காக இலங்கையிலுள்ள எழுத்தாளர்கள் பலருடன் தொடர்புகொண்டேன். உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதாகவும் குறிப்பிட்டேன். எதுவுமே சரிவரவில்லை.

பின்னர் அமரர் சில்லையூர் செல்வராஜனின் துணைவியார் திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடம் நாவலின் பிரதி இருப்பதாகவும், தொடர்புகொள்ளும்படியும் கூறியிருந்தார். அவ்விதமே தொடர்புகொண்டபோது அவர் அப்பிரதிக்கு வைத்த விலை அக்காலகட்டத்தில் என்னால் கொடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. மீண்டும் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடமிருந்த பிரதியைக் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்துக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அதன் பின்னர் அப்பிரதியைப் பல வழிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

Continue Reading →

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்இயற்கை, இயற்கைச் சார்ந்த புற உலகில் மாந்தன் நொடியொரு பொழுதும் பல்வேறு விதமானப் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டே வந்ததை வரலாறு மெய்ப்பிக்கின்றது. இத்தகு போராட்டங்கள் முதலில் உணவுக்காகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான போராட்டமாகத் தொடங்கி பின்னர் செல்வ பெருக்கத்திற்கும், சிலர் அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாகவே பெரும் போர்கள் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன. அப்போர் நிகழ்வுகளில் மலையும், மலையைச் சார்ந்து வாழ்ந்த மக்களுக்கிடையே ஆநிரைகளைக் கவர்தலும் அதனை மீட்டலுக்குமான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன.

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழ்க் காதல்

பண்டைத் தமிழ்க் காதல்  - பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – இயற்கை சமூகம் உள்ளடக்கிய இந்நிலவுலகில் உயிரினங்களின் செயல்கள் யாவும் ஒன்றோடொன்று இணைந்தது! இது இயற்கையானது! இவ்வேட்கை இயல்பானது! எதார்த்தமானது! இதனை அறிந்தே தமிழ் ஆசான் தொல்காப்பியர்,

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்காப்பியம். நூ.)

என்றார். மனித குலத்தின் இயற்கை இயல்பான இன்ப நுகர்வாம் காதல்; அது அனைத்துக்குமான பிணைப்பு நிலை: அது இயற்கையோடு பொருந்திய ஒழுக்க நிலை; அவற்றை மானுட உடலுயிரினின்று பிரித்து அறிய முடியாது! அத்தகு காதலைப் பழந்தமிழகம் போற்றிற்று; நூல்களின் வழியாக உணர்த்திற்று:

Continue Reading →

கோசின்ரா (கொல்கத்தா) கவிதை

1
கோசின்ரா (கொல்கத்தா) கவிதைநண்பனுக்கு நிறைய வேலைகள்
என்னுடைய காலையைப்போலத்தான்
அவனுடைய காலையும்
இளம் வெயிலால் நிரப்பட்டிருக்கும்
அவனுடைய தொடக்கமும்
என்னுடைய தொடக்கமும்
உறக்கத்திலிருந்து எழுவதுதான்
அவனுடைய கடமையும் என்னுடைய கடமையும் வேறுவேறு
வெவ்வேறு பரபரப்புகளால் மூடப்பட்டவை
நண்பன் பூப்பறித்துக்கொண்டிருக்கும் போது
நான் தூங்கிக்கொண்டிருப்பேன்
நண்பன் வேதம் ஓதிவிட்டு  யோகா செய்யும் போது
நான் என் உறக்கத்தைக்கழற்றி விடுவேன்
அவன் காயத்திரி மந்திரம் ஜெபிக்கும் போது
விடுதலை படிப்பேன்

Continue Reading →