அ.ந.க.வின் (கவீந்திரனின்) கவிதைகள் சில!

– அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கவிதைகள் மீள்பிரசுரமாகின்றன. –

- அறிஞர் அ.ந.கந்தசாமி -1. எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான் 
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன் 
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும் 
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான் 
“எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங் 
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை 
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே 
அப்பனே நிகழ்காலம் செல்க” என்றான். 

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன் 
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச் 
‘செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும் 
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே 
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை 
மலைவுறுத்தா தெதிர்காலம்” என்று கூறிக் 
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான் 
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன். 

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஞானம் சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ சிறப்பிதழ் அறிமுக விழா

தலைமை:  வைத்திய கலாநிதி இ.லம்போதரன்  நிகழ்ச்சி நிரல்தொடக்கவுரை: அகில்  தலைமையுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அறிமுகவுரை: பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்       சிறப்புப் பிரதிகள் வழங்கல் சிறப்புரை: கலாநிதி…

Continue Reading →

அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய குறிப்புகள் சில…

– அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றயது. –

- அறிஞர் அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமியின் ‘நாயினுங் கடையர்’ அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் ‘காளி முத்துவின் பிரஜா உரிமை’ படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின.  இரு கதைகளும் சான்று. “போர்க்குணம் மிக்க எழுத்தாளன் தான் உண்மையான இலக்கியவாதி” என டால்ஸ்டாய்யும் கார்க்கியும் சொன்னதின் அர்த்தம்- அந்தப் போர்க்குணம் மிக்க எழுத்து அ.ந.க., அ.செ.முவிடம் அக்காலமே வெளிப்பட்டது. இருவரையும் மனிதாபிமானம் மிக்கோர் என்பேன்.

ஒரு படைப்பாளியின் சிருஷ்டிகளைப் படியாமல் மேலெழுந்தவாரியாக ‘ஆகா ஊகூ’ என்று இலக்கியத்தை மலட்டுத்தனமாக்கும் கேடுகெட்ட நிலை இன்னும் விட்டபாடில்லை. படியாமலே விமரிசிக்கும் ‘மேதைகளு’ம் உண்டு. ஓர் சமயம் ஓர் இலக்கிய ஆர்வலர் நான் எதிர்பாராத ஒரு கேளிவியைத் தூக்கிப் போட்டார் – “சில விமர்சகர்கள் மேடையில் பேசினாலும் பத்திரிகையில் எழுதினாலும் புத்த்கம் வெளியிட்டாலும் கனதியாக – பல்வகை உத்திகளில் ஓயாமல் எழுதுகிற அ.ந.கந்தசாமியையோ உங்களையோ ஏன் குறிப்பிடுவதில்லை”. “குருடர்கள் யானை பார்த்த கதை தெரியும் தானே?” என்று திருப்பிக் கேட்டேன்.  ஒரு வகையில் பார்த்தால் எழுதிகிறவனுக்கு விளம்பரம் ஆபத்துத் தான். விளம்பர ஓடுகாலித்தனம் இலக்கியக்காரனுக்கு விழுக்காடு என்பதை இன்னும் நம்பாத – புரியாத கலை இலக்கிய ‘மேதாவி’கள் நம் மத்தியில்  செப்பமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருப்பதும் நல்லதுதான். கம்பு எடுத்தால் அடியெடுத்து ஓடாமல் விழுந்து படுக்கிற மாடுகளும் உண்டு தானே.

Continue Reading →