கவிதை: ஒரு பனித் துளி ஈரம்

கவிதை வாசிப்போமா?

இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென

வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்

அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 73 குமரன் பொன்னுத்துரையின் ‘நான் நடந்து வந்த பாதை’: ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்….

வாசிப்பும், யோசிப்பும் 73 குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை': ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்....பெப்ருவரி 8 அன்று,  டொரான்டோவில் தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஏற்பாட்டில் நடந்த தோழர் குமரன் பொன்னுத்துரையின் ‘நான் நடந்து வந்த பாதை’ நூல்  வெளியீடும், கலந்துரையாடலும் நடைபெற்றன. நிகழ்வில் பலரைக் காண முடிந்தது. குமரன், சேணா உட்படப்பல தேடக நண்பர்கள், பரதன் நவரத்தினம், ‘ஜான் மாஸ்டர்’, எஸ்.கே.விக்னேஸ்வரன், சுவிஸ் முரளி மற்றும் முகநூல் நண்பர்கள் எனப் பலரைக்காண முடிந்தது.  குமரன் பொன்னுத்துரை அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் ஆரம்ப காலகட்டத்திலிருந்து இயங்கி, ஒதுங்கியவர்களில் ஒருவர். கழகத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றில் இருந்ததுடன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களிலொருவராகவும் விளங்கியவர். தனது மறைவுக்கு முன்னர் அவர் எழுதி வைத்த அனுபவக்குறிப்புகளை அவரது குடும்பத்தினர் குறிப்புகளை அப்படியே (எந்தவித எழுத்துப்பிழைகள் / இலக்கணப்பிழைகளைத்திருத்தாமல்) வெளியிட்டிருக்கின்றார்கள். தன்னைச்சுற்றிய எந்தவித ‘நாயக’க்கட்டமைப்புமின்றி, உள்ளது உள்ளபடி, தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அதன் மூலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஒரு காலகட்டத்து வரலாற்றினைத் தன் பார்வையில் பதிவு செய்துள்ளார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 72: பதினொரு பேய்கள் – அ.முத்துலிங்கம் (காலச்சுவடு இதழில் வெளியான சிறுகதை)

வாசிப்பும், யோசிப்பும் 72: பதினொரு பேய்கள் - அ.முத்துலிங்கம் (காலச்சுவடு இதழில் வெளியான சிறுகதை)ஜெயமோகன் வழியை முத்துலிங்கமும் பின்பற்றுகின்றார் போல் தெரிகிறது. உடனடியாகத் தன்னைப்பற்றிப் பலர் கதைக்க வேண்டுமென்றால் மிகவும் பிரச்சினையான ஒரு கருத்தை அவர் கூறுவார். உடனே அது தீ பற்றியெரியும். விகடனில் எம்ஜிஆர்/சிவாஜி பற்றி அவர் எழுதியதை உதாரணத்துக்குக் கூறலாம். அ.மு.வும் அந்த வழியைப் பின்பற்றி ‘பதினொரு பேய்கள்’ கதையை எழுதினாரோ தெரியவில்லை. ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பொன்றான ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பினை இவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதை அவர் தனது கருத்துச்சுதந்திரம் என்று கூறலாம். ஆம், அது அவரது கருத்துச்சுதந்திரம். .  தகவல்களைத்திரித்து, பிழையான தகவல்களை, ஊகங்களை மையமாகக்கொண்டு, விடுதலைக்குப் போராடிய அமைப்பொன்றினைச் சிறுமைப்படுத்தி, ( போராடிய அமைப்புகள்  யாவும் மனித உரிமை மீறல்கள் பலவற்றைப் புரிந்துள்ளன. அவற்றில் ஏதாவதொன்றினை மையமாக வைத்து அவர் இக்கதையினை எழுதியிருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும்)புனைவென்ற பெயரில் இவ்விதம் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதென் கருத்து. இதனைக்கூறுவது எனது கருத்துச்சுதந்திரம். பதினொரு பேய்கள் சிறுகதையைப் படிக்க: http://www.kalachuvadu.com/issue-181/page86.asp

Continue Reading →