நவீன தமிழ்க்கவிதை வெளியில் நான்….

- கிருஷாங்கினி -[சென்ற வருடம் கிருஷாங்கினியிடம் வாங்கிய கட்டுரை (பதில்கள்) என்னிடமே தங்கி விட்டன. அவற்றையும் கிருஷாங்கினியின் கவிதைகளையும் சேர்த்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் பரப்பில் தனது கவிதை, கதை கட்டுரைகள் மூலமும், சதுரம் என்ற தனது பதிப்பகத்தின் வாயிலாகவும் ஆர்வத்தோடு பங்களித்துவரும் கிருஷாங்கினி குறித்த முடிந்த அளவு அகல்விரிவான கட்டுரை ஒன்றை அனுப்ப விரும்பி இந்த நீள்கட்டுரைத் தொகுப்பினைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியுள்ளேன் – லதா ராமகிருஷ்ணன் -]

கவிஞர் கிருஷாங்கினி : சிறு குறிப்பு
இயற்பெயர் பிருந்தா. 25.8.1947 அன்று பிறந்தவர்.நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் முனைப்பாகப் பங்காற்றிவருகிறார். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் குறித்த , சமூக அவலங்கள் குறித்த கட்டுரைகள், எழுதியுள்ளார். ஓவியம், நடனம், பிறவேறு நுண்கலைகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். கானல் சதுரம் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. கவிதை கையெழுத்தில் என்ற தலைப்பில் வெளியான இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு கையெழுத்துப்பிரதி வடிவில் கோட்டோவியங்களுடன் அமைந்து உருவமும் உள்ளடக்கமுமாய் தனிக் கவனம் பெற்றது.கவனத்தை ஈர்த்தது. கவிஞர் கிருஷாங்கினி பல்வேறு தேசிய அளவிலான, மாநில அளவிலான இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். 2002 – 04 ஆண்டுகளில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார் ஸீனியர் ஃபெல்லோஷிப் பெற்று 50களுக்குப் பிறகு நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் எழுத்தாளர்களால் கையாளப்பட்ட கருத்தோட்டங்கள், கருப்பொருள்கள், அணுகுமுறை குறித்த ஆய்வுத்தாள் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.[‘The Ideas, Topics and Approach adopted by Women Writers in Modern Poetry written after the 50s.’]

சமகாலப் புள்ளிகள் என்ற தலைப்பிலான இவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு 2002இல் தமிழக அரசின் இரண்டாவது பரிசுக்குரிய நூலாக விருது வழங்கப்ப்ட்டது.ment. தேவமகள் அறக்கட்டளை வழங்கிவரும் கவிச்சிறகு விருது பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது கணவரோடு சென்னை, சிட்லப்பாக்கத்தில் வசித்துவருகிறார். கவிஞர் கிருஷாங்கினியின் மின்னஞ்சல் முகவரி: nagarajan63@gmail.com

Continue Reading →

(5) யாமினி கிருஷ்ணமூர்த்தி

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை  தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் (  repertoire)  பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். அடுத்து, அந்த பதங்களின் ஒவ்வொரு சொல்லும் தெய்வங்களைப் போற்றுவனவாகவும் மிக நெருக்கமான அடுக்கடுக்கான குணசித்திர மகிமைகளைச் சொல்வனவாகவும் இருப்பதால்,  சாவகாசமான நீண்ட பரதக் கலை வெளிப்பாட்டுக்கு வாய்ப்பு தராதவையாக இருக்கும். இந்தப் பதங்கள் பெரும்பாலும் சங்கீத வெளிப்பாட்டுக்கெனவே இயற்றப் பட்டவையாக, முத்துசாமி தீக்ஷிதர், தியாகராஜர் போன்றோரின் கீர்த்தனைகளாகவும் ( உதாரணமாக நவரத்தினக் கீர்த்தனைகள், பஞ்சரத்தின கீர்த்தனைகள்) பின்னும் பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட தில்லானாக் களாகவும் இன்னும் சில வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளாகவும், ஆதி சங்கராச்சாரியாரின் பஞ்சாக்ஷர ஸ்லோகங்களாகவும் இருக்கும். சங்கீத வெளிப்பாட்டுக்கும், நடனவெளிப்பாட்டுக்கான பதங்களின் இலக்கணமும் தேவையும் வேறாக இருக்கும். ஆனால் யாமினியின் பார்வை வேறாக இருந்தது அது அவருடைய தந்தையாரின் பாண்டித்யத்தாலும், புதியவை நாடும் மனத்தாலும் உருவாக்கப் பட்டவை.. அது வரை  வேறு யாரும் பார்வை செலுத்தாத விஷயங்களைத் தான் ஆராய்ச்சி மனம் கொண்ட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் தேடும். ”நமது பாரம்பரியமும், இலக்கியமும் மிக அகண்டதும் விஸ்தாரமானதுமாகும். நம் கால்பதித்திராத, பார்வை பட்டிராதவை அனேகம். நாம் அவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், நாம் இன்று காணும் இன்றைய  நவீன இலக்கியத்தைப் போலவே நவீன பார்வையும் சிந்தனையும் ஆழமும் கொண்டவையாக இருப்பதைக் காணலாம் என்று சொல்கிறார் யாமினி.

Continue Reading →

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம் பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு குடும்பம் அல்லது குழு அல்லது தனிமனிதர் ஆகியோருக்கு உரியதாய் மரபு சார்ந்தும் புதுமை மிக்கதுமாய் மாறி மாறி வரும் தன்மையுடையது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தனக்குரிய வாழ்வியல் முறைக்கு கட்டுப்பட்டு நடக்கவும், மக்களிடம் உள்ள உறவு முறைகளைப் பலப்படுத்தவும், முன்னேற்றங்களை மதிக்கவும் பழக்க வழக்கங்கள் தோன்றின என்றே கூறலாம். இக்கருத்தை, “ மனித சமூக வாழ்க்கையில் பழக்கவழக்கமே முதல் கட்டுப்பாடாகும். மக்கள் எல்லோரும் ஒன்றுபடவும் சாதிப் பஞ்சாயத்து நடவடிக்கைகளை ஒத்த தன்மை பெறச் செய்யவும் சுய எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், ஆட்படாதவர்களை ஒதுக்கித் தள்ளவும், இப்பழக்கவழக்கங்கள் தோன்றின….. ”  என்று பழக்கவழக்கம் தோற்றம் பெற்றதற்குரிய காரணத்தை வரையறுக்கிறார் டாக்டர்  அ. தட்ஷிணாமூர்த்தி அவர்கள். பழக்கவழக்கம் தொடர்பாக தமிழர்கள் கொண்டிருந்த ஒழுக்க நெறிகள் பல கலித்தொகையில் பண்பாட்டின் சுவடுகளாய் விரவிக் கிடக்கின்றன. அவை பின்வருமாறு வரிசைபடுத்தப்பட்டு வெளிக் கொணரப்படுகிறது.

Continue Reading →

இர.மணிமேகலை கவிதைகள்!

மனச்சித்திரம்

இர.மணிமேகலை கவிதைகள்!

தட்டான்கள் சிறகடிக்கும்
மழைக்காலத்து மலையென
அந்த நிகழ்வு நடந்துவிடும்
எதிர்பாராத வருகையில்
குல்மோஹர் மலர்கள் தூவப்பட்டிருக்கும் சாலையெங்கும்
என்றோ பூத்திருந்த மலரின் மணம் அப்பொழுது கசிந்துவிடும்
விடைபெறும் தருணங்களில்
யாரும் அறியாமல்
வெளிப்படத்தான் செய்கிறது
அது.
 

Continue Reading →

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்.

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

இவர்க்கிலையோ ..?

பரந்த கடலன்னை மேனியிலே,
நீந்தும் படகினில் தானமர்ந்தே,
ஞாலம் புகழ்ந்திடும் நீருழவன்,
நாடியே  மீனினைத் தான் பிடிப்பான் !

கந்தலுடையவன்தான ணிந்தே,
கஞ்சிக் கலயத்தைத் தான் சுமந்தே ,
நொந்து வருந்தியே !தன்னுடலை,
நூறு வகைக் கடல் மீன் பிடிப்பான் !

Continue Reading →