பெப்ருவரி 8 அன்று, டொரான்டோவில் தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஏற்பாட்டில் நடந்த தோழர் குமரன் பொன்னுத்துரையின் ‘நான் நடந்து வந்த பாதை’ நூல் வெளியீடும், கலந்துரையாடலும் நடைபெற்றன. நிகழ்வில் பலரைக் காண முடிந்தது. குமரன், சேணா உட்படப்பல தேடக நண்பர்கள், பரதன் நவரத்தினம், ‘ஜான் மாஸ்டர்’, எஸ்.கே.விக்னேஸ்வரன், சுவிஸ் முரளி மற்றும் முகநூல் நண்பர்கள் எனப் பலரைக்காண முடிந்தது. குமரன் பொன்னுத்துரை அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் ஆரம்ப காலகட்டத்திலிருந்து இயங்கி, ஒதுங்கியவர்களில் ஒருவர். கழகத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றில் இருந்ததுடன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களிலொருவராகவும் விளங்கியவர். தனது மறைவுக்கு முன்னர் அவர் எழுதி வைத்த அனுபவக்குறிப்புகளை அவரது குடும்பத்தினர் குறிப்புகளை அப்படியே (எந்தவித எழுத்துப்பிழைகள் / இலக்கணப்பிழைகளைத்திருத்தாமல்) வெளியிட்டிருக்கின்றார்கள். தன்னைச்சுற்றிய எந்தவித ‘நாயக’க்கட்டமைப்புமின்றி, உள்ளது உள்ளபடி, தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அதன் மூலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஒரு காலகட்டத்து வரலாற்றினைத் தன் பார்வையில் பதிவு செய்துள்ளார்.
Continue Reading →