[சென்ற வருடம் கிருஷாங்கினியிடம் வாங்கிய கட்டுரை (பதில்கள்) என்னிடமே தங்கி விட்டன. அவற்றையும் கிருஷாங்கினியின் கவிதைகளையும் சேர்த்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் பரப்பில் தனது கவிதை, கதை கட்டுரைகள் மூலமும், சதுரம் என்ற தனது பதிப்பகத்தின் வாயிலாகவும் ஆர்வத்தோடு பங்களித்துவரும் கிருஷாங்கினி குறித்த முடிந்த அளவு அகல்விரிவான கட்டுரை ஒன்றை அனுப்ப விரும்பி இந்த நீள்கட்டுரைத் தொகுப்பினைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியுள்ளேன் – லதா ராமகிருஷ்ணன் -]
கவிஞர் கிருஷாங்கினி : சிறு குறிப்பு
இயற்பெயர் பிருந்தா. 25.8.1947 அன்று பிறந்தவர்.நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் முனைப்பாகப் பங்காற்றிவருகிறார். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் குறித்த , சமூக அவலங்கள் குறித்த கட்டுரைகள், எழுதியுள்ளார். ஓவியம், நடனம், பிறவேறு நுண்கலைகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். கானல் சதுரம் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. கவிதை கையெழுத்தில் என்ற தலைப்பில் வெளியான இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு கையெழுத்துப்பிரதி வடிவில் கோட்டோவியங்களுடன் அமைந்து உருவமும் உள்ளடக்கமுமாய் தனிக் கவனம் பெற்றது.கவனத்தை ஈர்த்தது. கவிஞர் கிருஷாங்கினி பல்வேறு தேசிய அளவிலான, மாநில அளவிலான இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். 2002 – 04 ஆண்டுகளில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார் ஸீனியர் ஃபெல்லோஷிப் பெற்று 50களுக்குப் பிறகு நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் எழுத்தாளர்களால் கையாளப்பட்ட கருத்தோட்டங்கள், கருப்பொருள்கள், அணுகுமுறை குறித்த ஆய்வுத்தாள் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.[‘The Ideas, Topics and Approach adopted by Women Writers in Modern Poetry written after the 50s.’]
சமகாலப் புள்ளிகள் என்ற தலைப்பிலான இவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு 2002இல் தமிழக அரசின் இரண்டாவது பரிசுக்குரிய நூலாக விருது வழங்கப்ப்ட்டது.ment. தேவமகள் அறக்கட்டளை வழங்கிவரும் கவிச்சிறகு விருது பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது கணவரோடு சென்னை, சிட்லப்பாக்கத்தில் வசித்துவருகிறார். கவிஞர் கிருஷாங்கினியின் மின்னஞ்சல் முகவரி: nagarajan63@gmail.com
Continue Reading →