ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம் பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு குடும்பம் அல்லது குழு அல்லது தனிமனிதர் ஆகியோருக்கு உரியதாய் மரபு சார்ந்தும் புதுமை மிக்கதுமாய் மாறி மாறி வரும் தன்மையுடையது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தனக்குரிய வாழ்வியல் முறைக்கு கட்டுப்பட்டு நடக்கவும், மக்களிடம் உள்ள உறவு முறைகளைப் பலப்படுத்தவும், முன்னேற்றங்களை மதிக்கவும் பழக்க வழக்கங்கள் தோன்றின என்றே கூறலாம். இக்கருத்தை, “ மனித சமூக வாழ்க்கையில் பழக்கவழக்கமே முதல் கட்டுப்பாடாகும். மக்கள் எல்லோரும் ஒன்றுபடவும் சாதிப் பஞ்சாயத்து நடவடிக்கைகளை ஒத்த தன்மை பெறச் செய்யவும் சுய எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், ஆட்படாதவர்களை ஒதுக்கித் தள்ளவும், இப்பழக்கவழக்கங்கள் தோன்றின….. ”  என்று பழக்கவழக்கம் தோற்றம் பெற்றதற்குரிய காரணத்தை வரையறுக்கிறார் டாக்டர்  அ. தட்ஷிணாமூர்த்தி அவர்கள். பழக்கவழக்கம் தொடர்பாக தமிழர்கள் கொண்டிருந்த ஒழுக்க நெறிகள் பல கலித்தொகையில் பண்பாட்டின் சுவடுகளாய் விரவிக் கிடக்கின்றன. அவை பின்வருமாறு வரிசைபடுத்தப்பட்டு வெளிக் கொணரப்படுகிறது.

Continue Reading →

இர.மணிமேகலை கவிதைகள்!

மனச்சித்திரம்

இர.மணிமேகலை கவிதைகள்!

தட்டான்கள் சிறகடிக்கும்
மழைக்காலத்து மலையென
அந்த நிகழ்வு நடந்துவிடும்
எதிர்பாராத வருகையில்
குல்மோஹர் மலர்கள் தூவப்பட்டிருக்கும் சாலையெங்கும்
என்றோ பூத்திருந்த மலரின் மணம் அப்பொழுது கசிந்துவிடும்
விடைபெறும் தருணங்களில்
யாரும் அறியாமல்
வெளிப்படத்தான் செய்கிறது
அது.
 

Continue Reading →

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்.

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

இவர்க்கிலையோ ..?

பரந்த கடலன்னை மேனியிலே,
நீந்தும் படகினில் தானமர்ந்தே,
ஞாலம் புகழ்ந்திடும் நீருழவன்,
நாடியே  மீனினைத் தான் பிடிப்பான் !

கந்தலுடையவன்தான ணிந்தே,
கஞ்சிக் கலயத்தைத் தான் சுமந்தே ,
நொந்து வருந்தியே !தன்னுடலை,
நூறு வகைக் கடல் மீன் பிடிப்பான் !

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 71: எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு! / குப்பிழான் ஐ.சண்முகத்தின் ‘தலை மன்னார் ரெயில்’

வாசிப்பும், யோசிப்பும் - 71:  எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு! / குப்பிழான் ஐ.சண்முகத்தின் 'தலை மன்னார் ரெயில்'[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதி. – பதிவுகள். ]

எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு!

எனக்குப் பொதுவாக எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் ஆகியவற்றை வாசிப்பது பிடிக்கும். அவற்றில் அவர்களின் பல்வேறுபட்ட ஆளுமை இயல்புகள், வாழ்க்கைப் போராட்டங்கள், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதங்கள் எனப் பல்வேறு பட்ட விடயங்களை அறிந்து கொள்ள முடியுமென்பது முக்கிய காரணம். அண்மையில் இவ்விதமான பல்வேறு ஆளுமைகள் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இவர்கள் இருந்தார்கள்’ என்னும் , நற்றிணை பதிப்பாக வெளிவந்த நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.  அதில் எழுத்தாளர் சு. சமுத்திரம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்த தகவலொன்று நெஞ்சினை ஓங்கி அறைந்தது. அது:

“..சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம் பெருகக்கிடந்திருக்கின்றார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டெ சென்று சேர்த்திருக்கின்றார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என எண்ணி அவசியமான அறுவைச் சிகிச்சை செய்யாமல் இரண்டரை மணி நேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருக்கின்றார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர் இறந்திருந்தார்.”

Continue Reading →

அரசியல்: ஸ்ரீலங்காவில் இடம்பெற்றது இனவழிப்பே! – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

அரசியல்: ஸ்ரீலங்காவில் இடம்பெற்றது இனவழிப்பே! - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுபிரித்தானிய தமிழர் பேரவையினால்  தமிழ்  மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 29) இடம்பெற்றது. இச் சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire . பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.John Mann  Labour MP .  இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இடம்பெற்றுவரும் இனப்படுகொலையானது கடந்த காலங்களில் அதிகரித்திருந்தது என குறிப்பிட்ட அவர்,  இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  குறிப்பிட்டார். அத்துடன் சர்வதேச நாடுகள் இந்த விசாரணையை அக்கறையுடன் நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Continue Reading →

சிறுகதை: கலைமகள் கைப் பொருளே..!

சிறுகதை: வீடுதேடல் ஆண்டு விழாக் கூட்டத்தில்,எதிர்பாராமல் அவனோடு படித்த சந்திரனை பல வருசங்களுக்குப் பிறகுச் சந்தித்தான். மனம் உவகை கொள்கிறது.”எப்படியப்பா இருக்கிறாய்?”இந்த இடைவெளியில், இலக்கியவாதியாய் மாறியிருக்கிறான்.பத்திரிகைகளில் அவன் கட்டுரைகளை …வாசிக்கிறவன் தான்.வானொலிகளில் கூட சில்லையூர் செல்வராசன் போன்ற குரலுடன் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறான். கோபாலுடைய அம்மா அவனுடைய ரசிகை.இதைப் போல குலத்திட அம்மாவும் தன்னுடைய ‘ரசிகை”என்று சொன்னதாகச் சொன்னான். ‘கண்ணுக்குத் தெரியாத ஒரு பாலம் கட்டப்படுறதில் ஒரு பெருமிதம் தெரிந்தது. புலம்பெயர் நாடுகளில் எல்லாரையும் எல்லாரும் சந்தித்துக் கொண்டா… இருக்கிறார்கள். அதற்கும் என்று ஒரு நேரம் வர வேண்டியிருக்கிறது.

“உனக்குத் தெரியுமா?எங்கட வகுப்புத் தோழர்கள்  …வருசா வருசம் ஒரு நாள் சந்திக்கிறவர்கள்.இந்த முறை குணா தீடீரென கார்ட்டடாக் வந்து செத்துப் போனதால் தள்ளி வைத்திருக்கிறார்கள் “என்றான். ‘

Continue Reading →

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.தொல்காப்பிய மரபியல், பெயர் மரபுகளையும், உயிர்ப் பாகுபாடுகளையும், நால்வகை வருண மரபுகளையும். இலக்கியப் படைப்பாக்க மரபுகளையும் எடுத்துரைக்கின்றது.

 மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
 மரபுவழிப் பட்ட சொல்லினான” (தொல்காப்பியம், மரபியல் 92)

என்பது மரபு பற்றிய வரையறையாகும். மரபு நிலை திரிதல் செய்யுள்களுக்கு அழகில்லை, மரபு வழிப்பட்ட சொற்களை மாறாமல் பின்பற்றுவது செவ்விலக்கியப்போக்கு என்று தொல்காப்பியர் மரபினை விளக்குகின்றார். மரபுகள் திரிந்தால் ஏற்படும் இழப்பினையும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” ( தொல்காப்பியம், மரபியல். 93) என்ற இந்த நூற்பா மரபுநிலை திரிந்தால் ஏற்படும் பாதிப்பினை எடுத்துரைக்கின்றது. சொல்மரபுகள் மாறினாலும், பொருள் மரபுகள் மாறினாலும் அதனால் வேறுவேறான புலப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிடும் என்பதைத் தொல்காப்பியர் இந்நூற்பா வழி எடுத்துரைத்துள்ளார். எனவே மண் சார்ந்த மரபுகள் அம்மண் சார்ந்த இலக்கியங்களில் மாறாமல் பின்பற்றப்படவேண்டும் எனத் தொல்காப்பியர் விரும்புவதாகக் கொள்ளலாம்.

Continue Reading →

சிறுகதை: பாம்பு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு. இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மனைவி ஓடிவந்து கூறினாள்.

‘ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு.. உங்கள வரட்டாம்!”

எட்டு பத்து வயதுமான எனது பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஜசீலா அன்ரியின் வீடு நோக்கித்தான். அவர்களுக்கு இது விளையாட்டாயிருந்தது. (அதிலும் சின்னவன், ஒரு நாள் வீதி ஓரத்தில் போன குட்டிப் பாம்பு ஒன்றை வாலிற் பிடித்துத் தூக்கிவந்தான். ‘அப்பா நல்ல வடிவான குட்டிப் பாம்பு. பார்த்தீங்களா?” என்று! அந்தக் குட்டியும் என்ன நினைத்ததோ அவனைக் கடித்துப் பதம் பார்க்கவும் இல்லை.)

Continue Reading →

நிகழ்வுகள்: “ பனியன் “ நாவல் வெளியீடு:

[இத்தகவலினைத் தவறுதலாகத் தவற விட்டு விட்டோம். ஒரு பதிவுக்காக பிரசுரமாகிறது.  – பதிவுகள் -] 10/01/15 சனி மாலை 6 மணிஸ்ரீ இராம மடாலயம்( நாச்சியார் கோவில்…

Continue Reading →