தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது. தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு தெரிந்த தெலுங்கு மொழியைக் கற்க விரும்பும் சமற்கிருதவானர் எடுத்துக்கொண்டால் பெயர் வினைகளைப் பற்றித் தவறாமல் பேசியிருக்கிறது. தெலுங்கு வினைக்கென ஓர் இயலை அமைத்துச் (கிரியா பரிச்சேதம்) சமற்கிருத வேர்ச்சொற்களைத் தற்சம வினைகளாக மாறும் படிநிலைகளையும் வினையியலின் போக்குகளையும் இனம்காணும் வகையில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.
முதல் தெலுங்கு இலக்கண நூலான ஆந்திர சப்த சிந்தாமணி கி;.பி 11-ஆம் நூற்றாண்டில் நன்னையா அவர்களால் இயற்றப்பட்டது. ஆந்திர சப்த சிந்தாமணிக்கு நன்னய பட்டீயம்;இ வாகம சாஸநீயம்;இ; சப்தானு சாஸனம்;;இ பிரகிரியா கௌமதி;;இ ஆந்திர கௌமதி;;இ ஆந்திர வியாகரணம்; என்ற பெயர்களும் உண்டு. இது நன்னையாவால் இயற்றப்பட்டதென்பது பழங்கால இலக்கணிகளின் நம்பிக்கை. தெலுங்கு இலக்கியத்தில் ஆதிகவி யார் என்ற விவாதத்தைப் போலவே முதல் இலக்கணி யார் என்பதும் இன்றுவரை உறுதிபடுத்தாத நிலை உள்ளது. ஆதிகவியான நன்னையா முதல் இலக்கணி என்பது பல புலவர்களின் கருத்தாகும.