ஆய்வு: இலக்கிய நோக்கில் தமிழ் இணையத் திரட்டிகள்!

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை!இணையத்தின் வாயிலாக தமிழ் மொழியின் வளர்ச்சியினை அதிகரிக்க முடியும் என்பதனை இன்றைய இணையத் தமிழ் ஆசிரியர்கள் வலைத்தளம், வலைப்பதிவு, மின் இதழ், விக்கிபீடியா போன்ற பல தளங்களில் தங்களின் இலக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். இணையத்தில் தமிழைக் கொண்டு சென்று அதன் வளர்ச்சியை விரிவுபடுத்த கீழ்க்கண்ட நான்கு நிலைகள் கையாளப்படுகின்றன..
1. வலைத்தளங்களின் மூலம் பரவலை அதிகரித்தல். 2. வலைப்பூக்களின் மூலம் பரவலை அதிகரித்தல். 3. திரட்டிகள் மூலம் பரவலை அதிகரித்தல் 4. சமூகக் குழுக்கள் மூலம் பரவலை அதிகரித்தல் என்ற நான்கு நிலைகளில் தமிழினை இணையத்தில் வளர்ச்சியடையச் செய்ய முடியும்.

வலைப்பூக்களில் பதிவுகளைச் செய்யும் ஆசிரியர்களின் இலக்கிய ஆர்வத்தினைக் கொண்டு அவர்கள் தங்களின் பங்களிப்பினைப் ஆற்றியிருக்கும் தன்மையினைப் பொருத்தும் வலைப்பூக்களின் தொகுப்பான வலைப்பூத் திரட்டிகளைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Continue Reading →

மே 1: உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும்!

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்

மே நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்

மே தின வரலாறு[தொகு]தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

Continue Reading →

பதினோராவது சர்வதேச திரைப்பட விழா!

மே மாதம் இரண்டாம் திகதி பதினோராவது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இவ் விழாவில் சுமார் பன்னிரண்டு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. போருக்குப் பின்னரான இலங்கை வாழ்வியலையும், புலம் பெயர்…

Continue Reading →

-ஓவியர் கோபுலு மறைவு!

-ஓவியர் கோபுலு மறைவு! கோபுலுவின் தில்லான மோகனாம்பாள் ஓவியங்களிலொன்று.அவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியா பதிவினைப் பகிர்ந்துகொள்கின்றேன். கோபுலு என்றதும் என் நினைவில் வருபவை என் பதின்மவயதினில் தமிழகத்து வெகுசன சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள்தாம். ஜெயகாந்தனின் நாவல்களான ‘ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்.’ (விகடன்), ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (தினமணிக்கதிர்), கதிரில் வெளியான ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் ‘ரிஷி மூலம்’ குறுநாவல், ஆனந்த விகடனில் வெளியான உமாசந்திரனின் ‘முழுநிலா’ நாவல், ஶ்ர…ீ வேணுகோபாலனின் ‘நீ. நான். நிலா’ (கதிரில் வெளியான நாவல்), சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ (விகடன் பிரசுரம்), அகிலனின் ‘சித்திரப்பாவை’ (விகடன்), நா.பார்த்தசாரதியின் ‘நித்திலவல்லி’ (விகடன்), கொத்தமங்கலம் சுப்புவின் ‘பந்த நல்லூர் பாமா’ (கதிர்), தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ போன்ற படைப்புகளுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், விகடனின் தீபாவளி மலர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும்தாம்.

Continue Reading →

கலாசூரி விருது: பன்முக ஆற்றல் கொண்ட ,பிரபல பெண் எழுத்தாளர் பவளசங்கரி த. திருநாவுக்கரசுக்கு தடாகத்தின் கலாசூரி விருது!

கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார்.கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார். தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது ) கொடுத்து கௌரவிக்க தீர்மானித்து உள்ளார்கள். அதன் முதல் கட்டமாகாக கலாசூரி விருதினை இவர் பெறுகின்றார்

உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள் உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு. அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்.

பெண்கள்
உலகின் கண்கள் .

உலக முகத்திற்குக்
கோடி கோடியாக் கண்கள்!
இன்றேல் –
உலகம் விழித்திருக்க
முடியாது !
ஒளி பிறந்திருக்கவும் முடியாது !

பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல்
பூமி கூட
ஒரு –
அக்கினிப் பிழம்பாயிருக்கும்!

Continue Reading →