வாசிப்பும், யோசிப்பும் 91: கதைக்குள் ஒரு கவிதை!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் தமிழினி ஜெயக்குமாரன் ‘மழைக்கால இரவு’ என்றொரு சிறுகதையினைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதியிருந்தார். இதுவே தமிழினியின் முதலாவது சிறுகதை என்று கருதுகின்றேன். இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருந்தன. ‘பசியடங்காத பூதம்’ போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.

பசியடங்காத பூதம்!

கரு மேகங்கள் சூழ்ந்த வானம்

இருள்மூடிக் கிடந்தது.

நசநச வென்று வெறுக்கும்படியாக

மழை பெய்து கொண்டேயிருந்தது,

இடை வெளியில்லாமல் காது கிழியும்படி

பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.

நிணமும் குருதியும் கடைவாயில்

வழிய வழிய

பசியடங்காத பூதம்போல மீண்டும்

பயங்கரமாக வாயைப்

பிளந்து கொண்டது

யுத்தம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 90: அண்மையில் வாசித்தவை மற்றும் யோசித்தவை பற்றிய குறிப்புகள் சில….

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாவலுக்கு சிறந்ததொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் தேவிபாரதி. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றினை நன்கு புரிந்துகொண்ட ஒருவராக அவரை இனங்காட்டுகிறது அந்த முன்னுரை. நாவலைப்பற்றிய அவரது திறனாய்வில் நாவலின் நாயகியான ராஜியை மணிமேகலையுடன் ஒப்பிட்டு, மணிபல்லவத்தில் (நயினாதீவில்) நடைபெறும் நாவலைச் சுட்டிக்காட்டியிருப்பது அவரது இலக்கியப்புலமையினைக் காட்டுகிறது. ஈழத்துத்தமிழ் இலக்கியக்களத்திலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ‘கனவுச்சிறை’ நாவல். அதனை எழுதிய எழுத்தாளர் தேவகாந்தன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தொன்றினையும், , நாவலின் இயற்கை வர்ணனையொன்றினையும் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

” ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தைத் தன் படைப்புக்கான பின்புலமாகக்கொள்ளும்போது அந்தக்காலகட்டத்தின் மிகமுக்கியமான சமூக அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய பதிவுகள் இடம் பெறுவது ஒரு ஒத்துக்கொள்ளப்பட்ட, வெற்றிகரமான இலக்கியக்கோட்பாடு. வரலாற்றின் வசீகரங்களிலிருந்து வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையை உருவாக்கியவர்கள் டால்ஸ்டாயும், மீகயில் ஷோலக்காவும் ஹெமிங்வேயும். ‘புயலிலே ஒரு தோணி’யை முன்னிட்டு ப.சிங்காரம் இந்தப்பட்டியலில் சேரக்கூடியவர். கல்கி போன்றவர்கள் வரலாற்றின் வசிகரங்களை வணிக உத்தியாகப்பயன்படுத்திக்கொண்டார்கள். போர் அதன் இயல்பிலேயே மனித மனங்களைக்கிளர்ச்சியுறச்செய்வது. அந்தக் கிளர்ச்சியிலிருந்து தப்பிச்செல்வது எழுத்தாளன் முன்னுள்ள சவால். அந்தச் சவாலை எதிர்கொள்வதில் தேவகாந்தன் பெற்றுள்ள வெற்றியே இந்த நாவலை முக்கியமானதாகக்கருதச் செய்வதில் முதன்மையான பங்கு வகிக்கின்றது.” (தேவிபாரதியின் முன்னுரையிலிருந்து)

Continue Reading →

கலாசூரி விருதுபெறுகின்றார் கவிஞர் ராசாத்தி சல்மா மாலிக்

சல்மாதடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு  மாதமும் பிரபல   பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான  சல்மா மாலிக்   அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று  தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.

நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணிப் பெண் படைப்பாளி. நான்குசுவர்களுக்குள் அடைப்பட்டவாழ்க்கையும்,அதனுள்ளிருந்து கசிந்துருகும் தனிமையும்தான் இவரது கவிதைகள். தற்போது சமூக நலத்துறை வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றிவருகிறார். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (கவிதைகள் – 2000), இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல் – 2004) வெளிவந்துள்ளன. விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் இடம்பெற்றிருந்தது.

Continue Reading →

எழுத்துப்போராளி ஷோபாசக்தி நடித்த தீபன் ஆவணப்படத்திற்கு சர்வதேச விருது

ஷோபாசக்திமுருகபூபதி“ஒப்பீட்டளவில்  இந்திய  நாடு,  இலங்கையைவிட  ஊடகச் சுதந்திரம்   lமிகுந்த  நாடு.   இவ்விரு  நாடுகளின்  திரைப்பட அடிப்படைத்  தணிக்கை விதிகள்   காலனியக்  காலத்தில்  உருவாக்கப்பட்டவை. தணிக்கையே   இல்லாத  சுதந்திர ஊடகவெளிதான்  நமது விருப்பமென்றாலும்   இப்போதுள்ள  தணிக்கை விதிகளைக் கண்டு  நாம்  பேரச்சம் அடையத் தேவையில்லை.   ஆனந்த் பட்வர்த்தனின்   அநேக   படங்கள் தணிக்கை    விதிகளுடன்  நீண்ட  போராட்டத்தை    நடத்தித்தான் வெளியாகியுள்ளன.    தமிழில்  சமீபத்திய  உதாரணமாக  நான் பணியாற்றிய  ‘செங்கடல்’ திரைப்படமும்    நீண்ட  சட்டப் போராட்டத்தை    நடத்தித்  தணிக்கையை   வென்றிருக்கிறது” இவ்வாறு  சில வருடங்களுக்கு முன்னர்  எழுதியிருக்கும்  ஷோப சக்தி நடித்திருக்கும்  தீபன்  என்ற   ஆவணப்படம்  சமீபத்தில்  நடந்த கேர்ன்ஸ்    சர்வதேச திரைப்படவிழாவில்  சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. முதலில்   அவரை   மனந்திறந்து  பாராட்டி  வாழ்த்திக்கொண்டே    அவர்    பற்றிய குறிப்புகளை   இங்கு  பதிவுசெய்கின்றேன்.

எனது    விருப்பத்துக்குரிய  படைப்பாளி  ஷோபா சக்தி. இதுவரையில் நாம்   நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை.   எழுத்துக்களினால் பரிச்சயமானவர். 1994   ஆம் ஆண்டளவில்  எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்து புகலிடச்சிறுகதைகளை தொகுக்கும்  பணியில்  ஈடுபட்டபொழுது ஷோபா சக்தியினதும்    சிறுகதையொன்றை   புகலிட  இதழிலிருந்து தெரிவுசெய்தோம். எனினும்    அந்தப்பெயரைப்பார்த்ததும்  அவர்  ஆணா… பெண்ணா… என்ற    மயக்கமும் வந்தது.    காலப்போக்கில்  அவரது  கொரில்லா நாவலைப்படித்ததன்    பின்னரும்  தமிழக இதழ்களில்  அவர் பற்றிய குறிப்புகளை   படித்த பின்னரும்தான்  உண்மை   தெளிவானது.

Continue Reading →