வாசிப்பும், யோசிப்பும் 88 : நூல் அறிமுகம் – வேலணையூர் தாஸின் ‘மழைக்காலக்குறிப்புகள்’ பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

வேலணையூர் தாஸின் ‘மழைக்காலக் குறிப்புக்கள்’ நூலினை அண்மையில் பெற்றுக்கொண்டேன். வேலணையூர் தாஸ் ‘யாழ் இலக்கியக் குவியம்’ அமைப்பின் ஸ்தாபகர். இணைய இதழ்கள், அச்சிதழ்கள் பலவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ‘யாழ் இலக்கியக் குவியம்’ அமைப்பின் அழகிய வெளியீடாக மேற்படி நூல் வெளியாகியிருப்பது திருப்தியைத்தருவது. நூலின் ஆரம்பத்தில் ‘பதிவுகள்’ இணைய இதழுட்பட தனது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களுக்கு நன்றியினை நூலாசிரியர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பல,விடயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் தந்தையை இழந்த, மகனை இழந்த, கணவனைஇழந்த எனப் பல்வேறு இழப்புகளைப் பற்றிக் கவிதைகள் விபரிகின்றன. காதல், மழைக்காலத்து அனுபவங்கள், இழந்த நிலம், அன்னை மீதான அன்பு, மழை அனுபவங்கள் எனக் கவிதைகள் பன்முகத்தன்மை மிக்கவை. கவிதைகளும் சொற் சிக்கனம் மிகுந்தவை, சொற்சிக்கனம் சிறிது தளர்ந்தவை எனப்பன்முகமானவை.

Continue Reading →