நந்தினி சேவியர் படைப்புகள் – நூல் அறிமுகமும் உரையாடலும்: கதைகள் • கட்டுரைகள் • பத்தி எழுத்துக்கள். விடியல் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘நந்தின் சேவியர் படைப்புகள்’ நூல்…
தமிழினியின் கவிதையொன்று அவரது முகநூலில் வெளியாகியுள்ளது. குறுங்கவிதை. கவிதை இதுதான்:
துளி -01
காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை.
இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி.
“சாகத்தானே போனதுகள்.
சாகாமல் ஏன் வந்ததுகள்.”
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக்கனக்கிறது
போராடப்போன மனம்.
இதுதான் அந்தக்குறுங்கவிதை. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. ஆழமனத்தில் குடிகொண்டிருக்கும் வேதனை வார்த்தைகளில் வெளிப்படுகிறது. கவிதையில் உண்மை இருப்பதால் சுடுகிறது. வலி தெரிகிறது. கூடவே மானுடரின் சுயநலமும் தெரிகிறது. போராடப்புறப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் தம் கடந்த கால அனுபவங்களைப்பல்வேறு வழிகளில் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழினி இங்கு தன் நிகழ்கால அனுபவத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் தமிழ் சினிமா தொடர்பான ஊடகவியலாளராக பணியாற்றியவரும் சினிமா தொடர்பான செய்திகளை தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ச. சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத…