நூல்கள்: ‘இன்னும் வராத சேதி – ஊர்வசி | ‘ஒற்றைப்பகடையில் எஞ்சும் நம்பிக்கை’ – கீதா சுகுமாரன் | எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை – ஒளவை |…
தகவல்: குணா கவியழகன்
இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் தலைசிறந்த பழம்பெருங் காப்பியங்களாய்த் திகழ்கின்றன. வால்மீகி என்னும் முனிவர் இராமாயணத்தை வடமொழியில் எழுதியுள்ளார். இதைத் தழுவிக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தியான கம்பர் ‘கம்பராமாயணம்’ என்ற நூலைத் தமிழில் யாத்துள்ளார். ‘கல்விச் சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாரதியார் சிறப்பித்துக் கூறியுள்ளார். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள், 112 படலங்கள், 10,569 பாடல்கள் உள்ளன. ஆறு காண்டங்களோடு தெய்வப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்த்துக் காண்டங்கள் ஒருமித்து ஏழாகின்றன. இனி, கம்பராமாயணம் பேசும் மகளிர் பெருமை பற்றிக் காண்போம்.
பட்டத்தரசிகள்
கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவரும் கோசல நாட்டின் தசரத மன்னனின் பட்டத்தரசிகளாவர். இவர்களுக்கு மகப்பேறு இல்லாதலால் தசரத மன்னன் கவலையுற்றான். இதையறிந்த கலைக்கோட்டு முனிவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஒரு கிண்ணத்தில் அமிர்தத்தை மன்னரிடம் கொடுத்துத் தேவியர்களக்குக் கொடுக்கும்படி பணித்தார். தசரத மன்னன் தன் மனைவியர் மூவருக்கும் அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்து, கிண்ணத்தில் ஒட்டியிருந்த அமிர்தத்தைச் சுமந்திரைக்கு மீண்டும் கொடுத்தான். மூவரும் கர்ப்பமுற்று, கோசலை- இராமன் என்ற குழந்தையையும், கைகேயி- பரதன் என்ற குழந்தையையும், சுமத்திரை- இலக்குவன், சத்துருக்கன் என்ற இரு குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.