நாடகம் – அறிமுகம்
முத்தமி;ழ் வடிவங்களில் நாடகம் குறிப்பிடத்தக்கதாகும். நாடகம் என்ற தனி சொல்லைக் காலத்தால் முந்தைய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் முதன் முறையாகப் பயன்படுத்தியுள்ளது. “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” என்பர்.
நாடக ஆர்வம்
அவ்வை சண்முகம் இளமையில் நாடகத்தில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்ததை தன் வரலாற்றில் குறித்துள்ளார். சண்முகம் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய போது கூட அவருடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்ததையும் தன் நாடக வாழ்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடக கம்பெனி தொடங்குதல்
அவ்வை சண்முகம் 1952ல் மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின் 1950ல் டி.கே.எஸ் நாடகக்குழு தொடங்கப்பட்டது.
நாடகத் தொழில் சிறப்புப் பெற்ற இடம்;
நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரை மாநகரமாகும். நாடக கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள் கூட மதுரை என்று போட்டுக் கொண்டதை அவ்வை சண்முகம் நாடக வாழ்க்கையின் மூலம் அறிய முடிகிறது.