இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின் பிரமிக்கவைக்கும் சாதனைகளுடன் த்ருபத் உள்ளே நுழைந்து பிரபந்தங்களை வெளியேற்றியது. கர்நாடக இசையில் கீர்த்தனங்கள்/ கிருதிகள் பிரபந்தத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. வடக்கின் பிரபந்தங்களின் எச்ச சொச்சங்களைத் தேடிப்போனால் கிழக்கை நோக்கி ஜெயதேவர், வித்யாபதி, ஞானதாசர், சைதன்யர், துக்காராம், ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத் மற்றும் நர்ஸிமேத்தா, சங்கர தேவர் அல்லது மாதவ தேவர் போன்றவர்களிடையே போகவேண்டும், இஸ்லாமியப் படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டிருந்த கங்கைச் சமவெளியில் அப்படி யாரும் நமக்குக் கிடைக்க இல்லை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தெற்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்புசெய்ததை கங்கைச் சமவெளியில் திரும்பச் செய்வதற்கு தெற்கிலிருந்து மதுராவுக்கு இடம்பெயர்ந்த வல்லபாச்சாரியாரின் வருகை வரை காத்திருக்க வேண்டியிருந்தது. வல்லபாச்சாரியாருக்குப் பிறகே பக்தி இயக்கம் வடக்கில் சூடுபிடிக்க ஆரம்பித்தது – ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மதுரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மக்களின் மொழியில் இசை பிரவாஹிக்க ஆரம்பித்தது. பரதரிலிருந்து சாரங்கதேவர் வரையில் எவரும் இந்திய இசையில் இன்று காணப்படும் இந்துஸ்தானி ,கர்நாடக இசை எனும் பிரிவுகளைப் பற்றிப் பேசவில்லை. ஏனெனில் இப்பிரிவுகள் அப்போது இருக்கவில்லை, பின்பு தான் வந்தன. .துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே இசைமரபுதான் இருந்தது. இசை அளவைகளை (scale) ஏழுஸ்வரங்களாகவும், 12 ஸ்வர ஸ்தானங்களாகவும், அவற்றை மீண்டும் கால்தொனிகளாகவும் பிரிப்பது என சாரங்கதேவர் நிறுவியது அனைத்தும் இளங்கோவுக்குத் தெரிந்திருந்தது, இவை ஒரு சாதாரண தரத்திலுள்ள கர்நாடக இசைப்பாடகரின் நிகழ்ச்சியில் கூடப் பார்க்கலாம். ஆனால் ஸ்வரங்களுக்கு இடையே உள்ள துல்லிய ஒலி அலைகளை (microtones) கணக்கில் எடுத்துக்கொள்ளாத இந்துஸ்தானி கலைஞரின் பாட்டில் இவற்றைப் பார்க்க முடியாது. மீண்டும் ராமானுஜ ஐயங்காரின் வார்த்தைகளில்,
‘போட்டோஷாப்’ மென்பொருளை உருவாக்கியவர்களிலொருவரான தஞ்சாவூர்த்தமிழரான சீதாராமன் நாராயணன் என்னும் தமிழருடனான நேர்காணலை விகடன் பிரசுரித்திருந்தது. அதன் வாசிப்பின்போது தோன்றிய சிந்தனைத்துளிகளே எனது இக்குறிப்புகள்.
‘சுந்தர் பிச்சை மற்றும் சீதா ராமன் நாராயணனைப்போன்றவர்களெல்லாரும் எதற்காகச் சொந்த மண்ணுக்குப் பயன்படாமல் பிறதேசத்தவர்களுக்குப் பயன்படும் வகையிலான வாழ்வினைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்? எப்பொழுது தமிழர்கள் உருவாக்கும் மென்பொருள்கள் அவர்கள் வாழும் மண்ணிலிருந்து உலகெங்கும் பரவிச்சாதிக்கப்போகின்றது? என்றெல்லாம் எண்ணுவதுண்டு. சபீர் பாட்டியா போன்று என்று நம்மவர்கள் சொந்தமாகத் தங்கள் மென்பொருள்களை உருவாக்கிச் சாதனைகள் புரியப்போகின்றார்களென்று எண்ணுவதுண்டு.
இந்தப்பேட்டியில் இவர் கூறிய கருத்தொன்று என்னைக் கவர்ந்தது. அது: “ஆர்வமும், திறமையும்,தேடலும் இருந்தால்போதும் எந்த காரணியும் முன்னேற்றத்தை பாதிக்காது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் பத்தாவது வரை தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். அதனால மொழி பற்றியெல்லாம் சாக்கு சொல்லி தப்பிச்சுகாதீங்க மாணவர்களே”
நிகழ்ச்சி நிரல்: “வரலாற்றில் ஜெயகாந்தன்” பிரதம பேச்சாளர் உரை: “ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும் இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்” – கலாநிதி நா. சுப்பிரமணியன் சிறப்பு…
தகவல்: பொ.கருணாகரமூர்த்தி karunah08@yahoo.com
15.08.2015., சனிக்கிழமை., 5:00 மணிக்கு @ R.K.V ஸ்டுடியோ.,வடபழனி (வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)
2015ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறுபவர் திரு.பி.கே.நாயர்
சிறப்பு அழைப்பாளர்கள்:
இயக்குனர், ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹ்லானி, | இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
இயக்குனர், நடிகர் யூகி சேது, | கார்ட்டூனிஸ்ட் மதன்.,
தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், | இயக்குனர், நடிகை ரோகினி,
திரைப்பட விழா இயக்குனர் சந்தானம் சீனிவாசன், | இவர்களுடன்.,
இயக்குனர்., படத்தொகுப்பாளர் பீ.லெனின் & பி.கே.நாயர்
பெரும் மதிப்பிற்குரிய உலகத் தொல்காப்பிய மன்றத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். நலம் நாடுகின்றேன். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் வரும் செப்டம்பர் மாதம்…
எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலனை மீண்டும் முகநூலில் சந்தித்தபொழுது எழுந்த நினைவலைகளின் பதிவிது. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று பலராலும் அறியப்படுபவர்; அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசின் விருதுபெற்ற நடிகராகவும் ‘ஆடுகளம்’ ஜெயபாலன் என்றும் அறியப்படுகின்றார். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று அறியப்பட்டாலும் , இலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் ஆளுமையைப்பதித்தவர், பதித்து வருபவர் இவர் என்பதால் எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று இவரை அழைப்பதே பொருத்தமானதென்று படுகிறது.
இன்று சிறிது முரட்டுத்தனம் மிக்கவராகவும், சிறந்த கவிஞர்களிலொருவராகவும் அறியப்படும் ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் வித்தியாசமான ஆளுமை மிக்கவராகவிருந்தார். மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் ‘ராசா’ என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கியவராக இவ்விதமாகவே என் நினைவினிலிருக்கின்றார். ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான ‘யாழ்ப்பாண வைபவமாலை’யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன.
காலம் தரித்து நிற்பதில்லை. அதனால் வயதும் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். இறுதியில் முதுமை வரும்பொழுது உடன் வரும் நண்பர்கள் தனிமை, இயலாமை, நனவிடை தோயும் இயல்பு. எல்லாம் போதும் என்ற மனப்பான்மை. ஆயினும் – முதுமையிலும் ஒருவர் அயராமல் இயங்குவதென்பது கொடுப்பினை. அவ்வாறு மருத்துவனையில் தங்கியிருக்கும் வேளையிலும் தமிழ் அகராதியொன்றை தயாரிப்பதற்காக குறிப்புகளை பதிவு செய்துகொண்டிருக்கும் எம்மத்தியில் வாழும் ஒரு மூத்தவர் பற்றியதே இந்தப்பதிவு. அவர்தான் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் பல்துறை ஆற்றல் மிக்க கலைவளன் சிசு. நாகேந்திரன். அவருக்கு 09-08-2015 ஆம் திகதி 95 வயது பிறந்தது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை தொடருகின்றேன்.
இந்த 95 வயதிலும் அயராமல் இயங்கி கலை, இலக்கிய மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு வருகைதரும் எழுத்தாளர் சிசு. நாகேந்திரன் அவர்கள், அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காப்பாளர். சில வருடங்களுக்கு முன்னர் இந்த அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியவர்.
தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவர், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். எழுத்தாளர் விழா மெல்பனில் – சிட்னியில் – கன்பராவில் நடந்தாலும் சாக்குப்போக்குச் சொல்லாமல், தமது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்று கருத்தரங்குகளில் கட்டுரையும் சமர்ப்பிப்பார்.
இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால் ,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் அது ஒரு பரந்த பெரிதான அகில இந்திய (Pan-Indian)மரபின் ஒரு பகுதியாகவும் இருப்பதைப் பார்ப்போம் அப்படிப் பார்க்கையில் அதில் முழுதுமாய் தமிழ் மரபு சார்ந்தது மட்டுமே எனச் சொல்லக் கூடியதாய் தனித்வம் கொண்டது என எதுவும் இருக்காது. விரைவாய் சரித்திரத்தின் பிரவாஹத்தில் பயணித்து இன்று வரையில் வருவோமானால், பல கால கட்டங்களில், அம்மரபு திராவிடத் தென்னகம் முழுவதுமே பரவியிருந்த போதிலும் அதில் தமிழர்களின் பங்களிப்பே அதிகம் பரவலாக இருப்பதைப் பார்க்கலாம். அப்படியிருக்கையில், எங்கிருந்து தொடங்குவது? புரந்தரதாசரிடமிருந்தா?
1484 – ம் –வருடம் அவர் பூனா மாவட்டத்தின் புரந்தர்கர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் , அவரது கீதங்கள் கன்னடத்தில் இருந்தன. இசையில் இன்று வழக்கத்தில் இருக்கும் கர்நாடக மரபின் தொடக்கங்களை ஆராய்ந்து பார்த்தால், அதன் நீட்சியில், வரலாற்றின் ஆரம்ப இழைகள் புரந்தரதாசரிடமிருந்து தொடங்குவதைக் காணலாம். ஆம், அது இந்துஸ்தானி பத்ததியிலிருந்து தனிப்பட்டுக் காணும் ஒவ்வொரு அம்சத்திலும், கர்நாடக பத்ததியின் தந்தை அவர் என்றே சொல்லவேண்டும். கர்நாடக சங்கீதக் கல்வியின் பாடத்திட்டம், சொல்லிக் கொடுக்கும் முறை, முதல் நிலையில் அதன் தொடக்கமான சரளி வரிசை, ஜண்டை வரிசை, ஸ்வரப் பயிற்சி என்பதுபோல் இவை அனைத்துமே புரந்தரதாசரின் ஆக்கங்கள் தான் .இந்துஸ்தானி சங்கீதம் போலல்லாது கர்நாடக சங்கீதம் கீர்த்தனைகளை சார்ந்ததாக இருப்பதால், கிருதி அல்லது கீர்த்தனை ஒரு ராகத்தின் சொல் வடிவமாகி, ராகத்தின் பாவமும் லட்சணமும் கிருதிகள் மூலமே பாதுகாக்கப்பட்டு சிஷ்யர்களுக்கு கொடுக்கப்படுகிறது (துல்லியமான விஞ்ஞான ரீதியான இசைக்குறியீடுகள் இல்லாத காரணத்தால், இசையை கற்பித்தல் காலம் காலமாக வாய் வழியாகவே குருகுல முறையில் நடந்து வந்துள்ளது) – இவை அனைத்துக்கும் கர்நாடக சங்கீதம் புரந்தரதாசருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஒரு கன்னடக் காரரான அவருக்கு, தமிழ்மரபின் சூழலில் என்ன பங்கு உள்ளது? இதை அறிய சரித்திர பிரவாஹத்தில் முன்னும் பின்னும் போகவேண்டும். பின்னோக்கிப் போகையில், புரந்தரதாசர் தமிழ் இலக்கிய சரித்திரத்தின் (கி.பி.100 – 200) சங்ககால “பாணர்” ‘பொருணர்” மரபில் வருகிறார் என்பதைக் காணமுடியும். அம்மரபு தமிழ்ப் பண்பாட்டின் தனித்த விளைபொருள் .வீடுகளில் பொங்கி வழிந்து, ஒவ்வொரு சாலையிலும், நாட்டின் பரந்த விஸ்தாரத்தில் வழிந்தோடி இறுதியில் அரசரின் மாளிகையில் உச்சத்தை அடைந்த தமிழ்க் கவிதை மற்றும் இசையின் ஒப்பற்ற இணைவு (இவ்வரிசை முறையைத் தலைகீழாகச் சொல்வோமானால் அதுவும் சரியாகத்தான் இருக்கும்).
இடம்: ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறை காலம: சனிக்கிழமை 22-ஆகஸ்ட் 2015 (22-08-2015)நேரம்: காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடத்துபவர்கள்:எழுத்தாளர் திரு. குரு…