பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்
சூழலைக் கெடுக்கும் 3 இலட்சம் டன் பட்டாசுப்புகை! 7 இலட்சம் பேரைக் காவு வாங்கும் காற்று மாசுபாடு! இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாட்களில் பட்டாசுகளால் 3 இலட்சம் டன் பட்டாசுப் புகை, அதாவது 300 கோடி கிலோ பட்டாசுப் புகை காற்றில் கலக்கிறது. இதனால் புகையாகப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? ஏறத்தாழ 8000 கோடி ரூபாய். இந்தப் பணத்தைக் கொண்டு 60 கல்லூரிகள் கட்டலாம். 1200 பள்ளிக்கூடங்களைக் கட்டலாம். பட்டாசு விபத்துக்களால் ஒவ்வோர் ஆண்டு சராசரியாக 400 பேர் மரணமடை கின்றனர். 1,15,000 பேர் படுகாயமடைகின்றனர்.
தீபாவளிப் பட்டாசுகளில் வண்ணங்களை உருவாக்கவும், சத்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத் தன்மை கொண்ட நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன:
சுவாசப் பாதையில் எரிச்சல், ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், உலோகப் புகை காய்ச்சல், உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு, ஈரப்பதம் காற்றுடன் வினைபுரிந்து தோல் பாதிப்புகள், குமட்டல், வாந்தி, மூளை வளர்ச்சி பாதிப்பு, கோமா நிலை.
குழந்தைகளுக்கு நுரையீரல்நோய்கள், மூச்சிளைப்பு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் கோளாறுகள், சுவாசக்கோளாறுகள். நோய் எதிர்ப்புத்திறன் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும். தீபாவளிக் காலங்களில் இவ்வித நோய்கள் 40% அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கடந்த ஒருசில ஆண்டுகளில் இவ்வகைக் காற்று மாசுபாட்டால் உண்டான நோய்களால் இந்தியாவில் 7 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
மனிதனின் காதுகள் தாங்கக்கூடிய ஒலி அளவு 30 டெசிபல் மட்டுமே. ஆனால் தீபாவளி பட்டாசுகளில் மிக எளியதான குழந்தைகள் கையில் துப்பாக்கி மூலம் வெடிக்கும் கேப், பொட்டு வெடியே 70 டெசிபல் ஒலியை எழுப்பும் தன்மை கொண்டது.
நாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும்… பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் நான் முதலில் வாசிப்பது அதன் உள்ளடக்கம் அல்ல. அணிந்துரை, முன்னுரை, முன்னீடு இவைகளைத்தான் படிப்பேன். இவைகள்தான் புத்தகத்தை தூக்கி நிறுத்துபவை. இவற்றை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு புத்தகத்தை எடை போடலாம். ஒவ்வொருத்தருக்கும் அவருடைய புத்தகம் பெரிது. நான் எனது ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு முதுபெரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனை முன்னுரை எழுதுவதற்காக அணுகினேன். அவரை நான் ஏன் தெரிவு செய்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘வல்லமை’ என்ற மின்னிதழ் 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றைஒரு வருட காலமாக நடத்தியது. மாதாமாதம் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தெரிவு செய்து கருத்துக் கூறினார் வெ.சா. முதல்மாதம் (ஆகஸ்ட்) வந்த கதைகளில் என்னுடைய சிறுகதையைத் (காட்சிப்பிழை) தெரிவு செய்து கருத்துக் கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் :
ஐக்கியா & வல்லமை சிறுகதைப் போட்டி ஆகஸ்ட் (2012) சிறுகதைகள் – வெங்கட் சாமிநாதன் : ” வணக்கம். வல்லமைக்கு இந்த மாதம் வந்த மொத்த சிறுகதைகள் 18. அவற்றில், நான் சிறந்ததாகக் கருதும் கதையைத் தேர்வு செய்யச் சொன்னீர்கள். தேர்வு, சிறந்தது, நன்றாக எழுதப்பட்டது என்ற முடிவுகள் எல்லாம் அவரவரது சுயம். இந்த அடிப்படைப் பார்வையை ஒத்துக்கொண்டால், எனக்குப் பட்டதைச் சொல்வது சிறந்தது என்று ஏதும் ISI முத்திரை குத்தும் விவகாரம் இல்லை. என்பது புரிந்தால், தேர்வு செய்யப்பட்ட கதையை எழுதியவர் புளகாங்கிதம் அடைய வேண்டியதில்லை. மற்றவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. இதெல்லாம் பால பாடங்கள். ஆனாலும் தமிழர்கள், தமிழ்ச்சூழல் எல்லாம் தொட்டாச் சுருங்கிகள். அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, டால்ஸ்டாய் என்னும் ஒரு சிகரம் ஷேக்ஸ்பியர் என்னும் இன்னொரு சிகரத்தைக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சியிருக்கிறார்.
இந்தப் பதினெட்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர் அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. யார் யார் எந்தக் கதை என்று நான் சொல்லவில்லை.
இவற்றில் எல்லாம் சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம். மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இலலாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தபடுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது மாறுவதே இல்லை. சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். இங்கு தான் சுதாகர் எழுத்தை நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இனி அவர் எழுத்தை எதிர் நோக்கியிருப்பேன்.”
யதார்த்தமான விடயங்களை அச்சுப் பிசகாமல் வாசகர்களிடம் முன்வைப்பது எழுத்தாளர்களால் மாத்திரமே சாத்தியமாகின்றது. அதையும் சுவாரஷ்யமான முறையில் தெளிந்த மொழிநடையுடன் சமர்ப்பிக்கும் ஆற்றல் எல்லோரிடத்திலும் வாய்த்து விடுவதில்லை. சிங்களமொழி மூலம் கல்வி கற்று தமிழ் மீது கொண்ட அபிமானத்தால் இலக்கியவாதியாக உருவெடுத்து இன்று தன் பெயரை நிலைக்கச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா அவர்கள். நாவல் துறையில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருபவர். ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய 04 நாவல்களையும், ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை), பொக்கிஷம் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களையும் அத்துடன் யதார்த்தங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை அடுத்து மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை இவர் வெளியிட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதி நூலாசிரியரின் 08 ஆவது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள 13 சிறுகதைகளில் சில சிறுகதைகளை இங்கு பார்ப்போம்.
சிதறிய நம்பிக்கைகள் (பக்கம் 13) என்ற சிறுகதை திருமணம் என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து சீதனம் வாங்கும் ஆண்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. சீதனம் வேண்டாம் என்று மணமுடித்துவிட்டு அதன்பிறகு பணம் வேண்டும் வீடு வேண்டும் என்று மனைவியைத் துன்புறுத்தும் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அஸ்மான் என்பவன் ஸாஹினாவைப் பின்தொடர்ந்து சென்று தன்னுடன் மீண்டும் இணைந்து வாழும்படி கெஞ்சுகின்றான். அவனது கெஞ்சுதல் ஸாஹினாவின் உள்ளத்தை உருக்கிவிடவில்லை. அவன் ஏற்கனவே அவளை அவமானப்படுத்தி இல்லாத விடயங்களை எல்லாம் இட்டுக்கட்டிய ஒரு சூத்திரதாரி. தந்தையை இழந்த அவளது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமந்துகொண்டவர் அவளது சாச்சா (தந்தையின் இளைய சகோதரர்). அவரிடமிருந்து இவர்களுக்குச் சொந்தமான சொத்தைப் பிரித்துக் கேட்குமாறு அடிக்கடி மனைவி ஸாஹினாவை அஸ்மான் வற்புறுத்துகின்றான். ஆரம்பத்தில் சீதனம் எதுவும் வேண்டாம் என்று உத்தமனாக வந்தவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவன் சொத்தாசை பிடித்த ஒரு பேய் என்பதை போகப் போக அனைவரும் உணர்ந்து கொள்கின்றனர். பின்வரும் உரையாடல் இதை நிதர்சனமாக்குகின்றது.
திக்கு ஒன்றில் செல்லும் தீபாவளியினைத் தேடி அலைந்து வந்தேன்.
திக்கெட்டும் அதன் சவாரி இன்று, என்று, சிலர் சொல்லக் கேட்டேன்.
திக்கு முக்காடி அடிமுடி எல்லாம், அண்டம் முழுதிலும் தேடினேன், யான்.
திக்கு எட்டல்ல, எட்டெட்டு இன்று, அதற்கு, என்று அறிந்து திகைக்கிறேன்.
நரகாசுரன் எனும் நரகத்து அசுரன் மடிந்த திதியே தானா எம் தீபாவளி?
பரதனின் அண்ணன் ராமன் ஈரேழு ஆண்டின் பின்அயோத்தி திரும்பிய அதா?
இரக்கமிலாக் கௌரவரைப் பாரதத்தில் வென்று பாண்டவர் சென்ற அன்றா?
அரசன் விக்கிரமாதித்தன் அரியணை ஏறியது எனச் சொல்லும் அத்-தினமா?
எத்தனையோ பழங் கதைகள் ஊருக்கூர் உண்டெனக் கண்டு கொண்டேன்.
எத்தனையோ திக்குகள் திசைகளிலே தீபாவளி செல்கிறது என்று அறிந்தேன்.
பக்தியுடன் கொண்டாடும் பண்டிகை அல்ல எம் தீபாவளி எனவும் கண்டேன்.
தீபாவளியின் வேர் இந்தியாவில்ளூ இந்து மதத்தின் வைஷ்ணவ அலகில். ஆனால்
இன்று அதைச் சைவர், ஜெயின் மதத்தோர், சீக்கியர் மட்டுமல்ல, உலகில் அவர்
சென்ற இடமெல்லாம்: மலேசியா, சிங்கப்பூர், மேற்கிந்திய மற்றும் பிஜித் தீவுகள்,
அவுஸ்திரேலியா, நியூசீலந்து, ஏன் ஐரோப்பா, அமெரிக்கா, என் பிரிய பிரித்தானியா
என்ற இடங்களை எல்லாம் பாதகன் நரகாசுரன், தன் சாவினால் பிடித்து விட்டான்.
–முன்னைநாள் யூனியன் கல்லூரி அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின் வன்னியில் இறுதிக்காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றை ஒட்டியதாகப் போர்க்கால நாவல் “வன்னி”.நோர்வே கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களால் தொகுத்துப்…
அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. படைப்பு இலக்கியம் – நடனம் – ஓவியம் – ஊடகம் – சமூகம் – பண்பாடு முதலான துறைகளில் தேடலையும் சிந்தனையையும் மேம்படுத்தும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள 15 ஆவது எழுத்தாளர் விழா அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் திரு. எம். ஜெயராம சர்மா அவர்களின் தலைமையில் மெல்பனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலின் பீக்கொக் மண்டபத்தில் எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது. நூல்களின் கண்காட்சி அரங்கு – இலக்கிய கருத்தரங்கு – நூல் விமர்சன அரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – மகளிர் அரங்கு முதலான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து எழுத்தாளர் டொக்டர் ச. முருகானந்தன் திறனாய்வாளர் திரு. எஸ். வன்னியகுலம் இங்கிலாந்திலிருந்து எழுத்தாளரும் நாழிகை ஆசிரியருமான திரு. மாலி . மகாலிங்கசிவம் சிட்னியிலிருந்து நடன நர்த்தகி நாட்டியக்கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர் ஆகியோர் வருகை தருகின்றனர்.
அத்துடன் சிட்னி மெல்பன் எழுத்தாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் இவ்விழா நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவர். இலக்கியக்கருத்தரங்கு திரு. வன்னியகுலம் தலைமையிலும் நூல் விமர்சன அரங்கு அவுஸ்திரேலியா வள்ளுவர் அறக்கட்டளை இயக்குநர் திரு. நாகை. சுகுமாறன் தலைமையிலும் கவியரங்கு திரு. கேதார சர்மாவின் தலைமையிலும் விவாத அரங்கு திரு. ஜெயகாந்தன் தலைமையிலும் மகளிர் அரங்கு திருமதி சாந்தினி புவநேந்திர ராஜாவின் தலைமையிலும் நடைபெறும்.
நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது ‘குடிவரவாளன்’ நாவல் டிசம்பர் முதல் வாரத்தில், தமிழகத்தில் ‘ஓவியா’ பதிப்பகம் மூலமாக வெளிவரவுள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான…