ஆய்வு: பாத்திமுத்து சித்தீக்கின் மல்லிகை மொட்டுகள் சிறுகதை வழி அறியலாகும் சமூக நிலைகள்

ஆய்வு: பாத்திமுத்து சித்தீக்கின் மல்லிகை மொட்டுகள் சிறுகதை வழி அறியலாகும் சமூக நிலைகள்சமுதாயம்,, சமூகம் – விளக்கம்
சமுதாயம்,, சமூகம் என்ற இரு சொற்களின் பொருள்கள் ஒன்றுபட்டதாக கருதப்பட்டாலும்,, கலைக்களஞ்சியத்தின் மூலம் இவை இரண்டிற்குமுள்ள நுட்பமான வேறுபாட்டைக் காணமுடிகிறது.

“ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொதுவாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் (ஊழஅஅரnவைல) எனப்படும். இது மக்கள் ஒன்று கூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓரிடத்தில் வாழும் அமைப்பைக் குறிக்கும்.”1 “சமூகம் என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அமைப்பாகும்.”2 தம்மைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றாக இணைந்துள்ள ஒரு மானிடக்குழு சமூகம் எனப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சமுதாயம் என்பதற்கு ‘மக்கள் திரள்’ என்றும் சமூகம் என்பதற்கு ‘திரள்’ என்றும் பொருள் விளக்கம் தந்துள்ளது. இதே பொருளில் சங்க காலத்தில் ‘பைஞ்ஞிலம்’இ ‘மன்பதை’ என்னும் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி,, அமைப்பு,, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

காதல் திருமணத்தை எதிர்க்கும் சமுதாயம்
இசுலாமியச் சமுதாயம் வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை விரும்புவதில்லை என்பதை ‘மல்லிகை மொட்டுகள்’ சிறுகதை வாயிலாக சமுதாயத்தின் நிலைப்பாட்டை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கின்றார்.

“பழிகாரி… மானத்தை வாங்கிட்டாளே…! தலையில் துண்டைப் போட்டுகிட்டு எங்கேயாச்சும் கண்காணாத பிரதேசம் போக வேண்டியதுதான்” நடுஹாலில் பிதற்றிக் கொண்டிருந்தார் அத்தா!”3 என்ற கூற்றும்

“இப்படி வேற்று மதத்துக் காரனோட ஓடிப்போனதோட தன்னைத்தேட வேணாம்னு வேறு எழுதி வச்சிருக்காளே,, மானங்கெட்டவ. குடும்ப கௌரவத்தையே சின்னாபின்னப் படுத்திட்டாளே இந்தக் கோடாலிக் காம்பு… அவ மட்டும் இப்ப எங்கையிலே அகப்பட்டாள்னா கூழாக்கிடுவேன். இந்த ரீதியில் எரிமலையாய் கத்திக் கொண்டிருந்தார் வயதான மாமா.”4 என்ற இக்கூற்றுகளின்; வாயிலாக வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை இச்சமுதாயம் விரும்புவதில்லை என்பது புலப்படுத்தப்படுகிறது.

குழந்தைகள் இல்லாத வாழ்க்கையும் இறை நம்பிக்கையும்
திருமணமாகி ஓராண்டு ஈராண்டுகளில் குழந்தை பிறந்துவிட வேண்டும். அப்படி பிறக்கவில்லையென்றால் பலரின் பலவாறான பேச்சுக்கு இடமாகிவிடும். வாழ்க்கையே வெறுமை போல் தோன்றும். வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இருக்காது. சில நேரங்களில் அது மிகுந்த மனநோயை உண்டாக்கி உடல் ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிக்கும் என்பதை பின்வரும் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது.

Continue Reading →

ஆய்வு: வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

முனைவர் ம. பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சிராப்பள்ளி – மனித வாழ்வியல் நெறிகளுள் முதன்மையானது அறம். அறமே நிலையற்ற வாழ்க்கையை நிலைபேறுடையதாக மாற்றும் கருவி. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 11 அறநூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையாக விளங்கும் சிறப்புடையது திருக்குறள். திருக்குறளைப் பாகுபடுத்திய வள்ளுவப் பெருமான் அறத்துப்பாலை முதலில் வைத்து பொருட்பாலையும் காமத்துப்பாலையும் அதற்கு அடுத்து கூறியிருப்பதிலிருந்து அறத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அறத்தின் பல்வேறு வடிவாக்க நிலைகளை ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

செல்வம்
‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது நிதர்சனமான உண்மை. மனித சமூகம் உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு செல்வம் இன்றியமையாதது. இதனைத் ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ (தொல்காப்பியம்) என்ற முன்னோரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. செல்வம் உடைய மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் கிட்டும். இவ்விரண்டினையும் அறத்தினால் மட்டுமே அடைய முடியும் என்பதை

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.1

என்னும் குறள் தெளிவுப்படுத்துகின்றது.

‘அறம் செய விரும்பு’ என்னும் ஒளவையாரின் ஆத்திச்சூடி இதனை வழிமொழிகின்றது. மேலும்,
அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்றுப் பேணாரைத் தெறுதலும்2

Continue Reading →