பிரதேச மொழி வழக்கில் பேசி நடித்து அசத்திய மரைக்கார் ராமதாஸ் மறைந்தார்! இலங்கை கலையுலகின் மைந்தனுக்கு நினைவஞ்சலிப்பகிர்வு!

மரிக்கார் ராமதாஸ்பட்டி  தொட்டி  எங்கும்  ஒலித்த ”  அடி   என்னடி  ராக்கம்மா  பல்லாக்கு நெளிப்பு ”  பாடல்  இடம்பெற்ற  பட்டிக்காடா  பட்டணமா  படமும்  அவ்வாறே  அன்றைய  ரசிகர்களிடம்  நல்ல  வரவேற்பு  பெற்றது. 1972  இல்  வெளிவந்த   இந்தப்படத்தில்  இன்றைய  முதல்வர் ஜெயலலிதாவுடன்  சிவாஜி   நடித்தார்.   அடங்காத  மனைவிக்கும் செல்வச்செருக்கு  மிக்க  மாமியாருக்கும்  சவால்விடும்  நாயகன்,  தனது   முறைப்பெண்ணை  அழைத்து  பாடும்  இந்தப்பாடல் அந்நாளைய    குத்துப்பாட்டு  ரசிகர்களுக்கு  விருந்து  படைத்தது. விமர்சன    ரீதியாகப்பார்த்தால்  அந்தப்படமும்  பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே   சித்திரித்தது. மக்களிடம்   பிரபல்யம்  பெற்றதால்,   இலங்கையில்  சிங்கள சினிமாவுக்கும்  வந்தது.   இன்னிசை   இரவுகளில்  இடம்பெற்றது.    அதே இசையில்  ஒரு  பாடலை   எழுதிப்பாடிய   இலங்கைக்கலைஞர் ராமதாஸ்   தமிழ்நாட்டில்  மறைந்தார்.

” அடி  என்னடி  சித்தி  பீபீ ”  என்று  தொடங்கும்  அந்தப்பாடலின் சொந்தக்காரர்   ராமதாஸ்,  இலங்கையில்  புகழ்பூத்த  கலைஞராவார். மரைக்கார்   ராமதாஸ்  என  அழைக்கப்பட்ட  இவர்  பிறப்பால் பிராமணர். ஆனால்,  அவர்  புகழடைந்தது  மரைக்கார்  என்ற இஸ்லாமியப்பெயரினால்.   சென்னையில்  மறைந்துவிட்டார்  என்ற  தகவலை  சிட்னி தாயகம்   வானொலி  ஊடகவியலாளர்  நண்பர்  எழில்வேந்தன் சொல்லித்தான்   தெரிந்துகொண்டேன்.   கடந்த  சில  வருடங்களாக உடல்நலக்குறைவுடன்   இருந்ததாகவும்  அறிந்தேன்.

1970    காலப்பகுதியில்  இலங்கை  வானொலி  நாடகங்களிலும்  மேடை  நாடகங்களிலும்  தோன்றி  அசத்தியிருக்கும்  ராமதாஸ்,   குத்துவிளக்கு உட்பட   தமிழ்,   சிங்களப் படங்களிலும்  நடித்தவர்.   பாலச்சந்தரின்  தொலைக்காட்சி   நாடகத்திலும்  இடம்பெற்றவர். கோமாளிகள்   கும்மாளம்   நகைச்சுவைத்  தொடர்  நாடகத்தைக் கேட்பதற்காகவே    தமிழ்  நேயர்கள்  நேரம்  ஒதுக்கிவைத்த  காலம் இருந்தது.   அதற்குக்  கிடைத்த  அமோக  வரவேற்பினால்  அதனைத் திரைப்படமாக்குவதற்கும்    ராமதாஸ்  தீர்மானித்தார். வானொலி  நாடகத்தில்  பங்கேற்ற  அப்புக்குட்டி  ராஜகோபால்,   உபாலி   செல்வசேகரன்,   அய்யர்  அப்துல்ஹமீட்  ஆகியோருடன் மரைக்கார்   ராமதாஸ்  வயிறு  குலுங்க  சிரிக்கவைத்த  தொடர்நாடகம்    கோமாளிகள் கும்மாளம். நான்குவிதமான   மொழி  உச்சரிப்பில்  இந்தப்பாத்திரங்கள் பேசியதனாலும்    இந்நாடகத்திற்கு  தனி  வரவேற்பு  நீடித்தது. திரைப்படத்தை    தயாரிக்க  முன்வந்தவர்  முஹம்மட்  என்ற  வர்த்தகர். திரைப்படத்திற்காக   ஒரு  காதல்  கதையையும்   இணைத்து , காதலர்களை   ஒன்றுசேர்ப்பதற்கு  உதவும்  குடும்ப  நண்பர்களாக மரைக்காரும்   அப்புக்குட்டியும்  அய்யரும்  உபாலியும்  வருவார்கள். இந்தப் பாத்திரங்களுக்குரிய   வசனங்களை  ராமதாஸே  எழுதினார். காதலர்களாக    சில்லையூர்  செல்வராசன் –  கமலினி  நடித்தார்கள். நீர்கொழும்பு – கொழும்பு   வீதியில்  வத்தளையில்  அமைந்த ஆடம்பரமான   மாளிகையின்   சொந்தக்காரராக  ஜவாஹர்  நடித்தார். அதற்கு    கோமாளிகை  என்றும்  பெயர்சூட்டினார்  ராமதாஸ்.

Continue Reading →

எம் .ஜெயராமசர்மா..கவிதைகள்!

1. வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -செம்பவள வாய்திறந்து
சிரித்துநிற்கும் உன்முகத்தை
தினமுமே பார்த்திருந்தால்
சிந்தனையே தெளிந்துவிடும்
வந்தநோவும் ஓடிவிடும்
வலியனைத்தும் மறைந்துவிடும்
எந்திருவே உனையணைத்து
என்னாளும் இன்புறுவேன் !

முழுநிலவு வடிவான
அழகுநிறை உன்முகத்தை
முத்தமிட்டு முத்தமிட்டு
மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
கொழுகொழுத்த கையாலே
குறும்புநீ செய்கைகையிலே
ஒழுகிவரும் இன்பமதை
உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 183: மணி வேலுப்பிள்ளையின் ‘மொழியினால் அமைந்த வீடு’

மணி வேலுப்பிள்ளைஎழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.


மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.


ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு ‘மொழியினால் அமைந்த வீடு’ கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:


“உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்.”

Continue Reading →

தமிழ் இனி வெல்லும் – 2016

தமிழ் இனி வெல்லும் - 2016புலம் பெயர்ந்த மண்ணான கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற தெலை நோக்கோடு ரிஈரி (வுநவு) தொலைக்காட்சியின் ‘தமிழ் இனி வெல்லும்’ – தொடர் -2 இன் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் 2016 ஆம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை , வுநவு தொலைக்காட்சியின் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அமரர் வை. சொக்கலிங்கம் ஞாபகார்த்தமாக, கனேடிய சிறார்களிடையே தமிழ் மொழியை ஊக்குவிக்கும் நோக்குடன் , ஆநனஉநவெசந ஊழnநெஉவ  நிறுவனர் வைத்திய கலாநிதி செந்தில் மோகன் அவர்களின் ஆதரவுடன்  திருமதி ராஜி அரசரட்ணம் அவர்கள் இந்தத் தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார்.

கீழ்ப்பிரிவுப் போட்டியின் போது, முதலிடத்தை ஜஸ்மிதா சிவரூபன் , இரண்டாமிடத்தை அபிவர்ஷி பாலசுப்ரமணியம் , மூன்றாம் இடத்தை துவாரகா ஜீவனேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேல் பிரிவுப் போட்டியில் முதலிடத்தை குபேரகா குமரேஸ்வரன், இரண்டாமிடத்தை ஆரணி சுகந்தன் , மூன்றாம் இடத்தை அகிலவன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். இறுதிப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன . நடிப்புடன் கூடிய இந்தப் போட்டி நிகழ்வில் மாணவர்களை விட அதிகமான மாணவிகளே கலந்து கொண்டதும் கவனிக்கத்தக்கது. இப்போட்டி நிகழ்வின்போது பிரதம நடுவராக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் கடமையாற்றினார். ஏனைய நடுவர்களாக வாசுகி நகுலராஜா, கலைவாணி பாலசுந்தரம், விமலா பாலசுந்தரம் ஆகியோர் கடமையாற்றினார்கள்.

Continue Reading →