இனிய கனடா நாள் வாழ்த்துகள் அனைவருக்கும்! * கனடா நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து…. கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada)…
இதுவரை அவன் நூறு வாழ்ந்து முடிந்த உடல்களை புதைத்து எரித்திருப்பான். இந்த கணக்கில் கூட பிழையிருக்கலாம். அடிக்கடி சில அநாதைப் பிணங்கள் உடல் குத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பணங்களுடன் அவன் வேலையிழக்காமல் வாழ்க்கையில்லாமல் இருக்க வந்திருக்கும். அவன் தந்தையை கூட கண்ணீர் ததும்ப புதைத்திருக்கிறான் . அவன் தாய் அவன் பிறந்த போதே மயானத்திற்கு சென்றுவிட்டாள். தன் தாயை தந்தை புதைக்கும்போது சுடுகாட்டு மண்ணில் ஒரு நாளிதழின் மீது முழு கடவுளாக தவழ்ந்திருக்கிறான்.
அப்படி ஆரம்பித்தது மயானத்திற்கும் அவனுக்கும் ஆன உறவு. இப்போது அவன் தன்னுடைய தந்தை வயதில் தன் குலத்தொழிலை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அவனால் ஏதோ மற்றவர்களை போல வாழ முடியவில்லை. அவனிடம் பணம் அடிக்கடி புரளும் ஆனாலும் இன்று தான் உண்டு தன் நிழல் உண்டு என இருக்கும் அவனால் இன்றுவரை ஆண்-பெண் உறவின் ரகசியங்களை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அவனுக்கு அவ்வளவு வயதாகியும் அந்த வாய்ப்பு வாய்க்கவில்லை. அவன் தனியாக இருக்கும் போது அவனுக்கு இருக்கும் ஒரே பேச்சுத்துணை ராசி என பெயர் வைக்கப்பட்ட அந்த முரட்டு கறுப்பு நிற நாயும், என்னை யார் அடக்க என இருநூறு கைகளுடன் பரந்துவிரிந்து ஆகாயத்தில் எதையோ தேடும் மனித பிணச்சாம்பல்கள் ஊறிய சத்து மணலில் முளைத்து தன் வயதுடைய பெரிய வேப்பமரமும் தான்.
வேலையுள்ள நேரங்களில் ராசி அவனுடன் வந்துவிடும் . அவன் வந்திருக்கும் வாழ்ந்து முடித்தவரின் உறவினர்களிடம் எதுவுமே பேசுவதில்லை . அந்த சமயங்களில் அவன் பேசுவதெல்லாம் நான்கு கால் ராசியுடன் தான்.வேலை முடிந்தபின் நான்கு கால் ராசி மயானத்தை விட்டு ஓடிவிடும் .அது எங்கு போகும் என்று யாருக்கும் தெரியாது .இரவு நேரங்களில் அந்த வேப்பமரத்திற்கு கீழே ஒரு மரக்கட்டில் போட்டு படுத்துக்கொள்வான். இப்படி அவனுடைய வாழ்க்கை ரயில் போல போய்கொண்டிருந்தது. அன்றைய நாளும் வழக்கம் போலத்தான் விடிந்தது. ஆனால் ஒரு இனம்புரியாத சிந்தனைகள் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. தன்னை அறியாமல் கண் கலங்கியது அடிக்கடி. வழக்கம் போல அவனால் நடந்து கொள்ள முடியவில்லை. என்றுமில்லாமல் அன்று இரண்டு வேலைகள் வந்தும் அவனது நெருங்கிய நான்கு கால் ராசி வரவில்லை. ஏதோ இது அவனை மேலும் குழப்பமடைய செய்தது.
ஆய்வுக் கட்டுரைகளை ஒருங்குறி எழுத்துருவில் ‘வேர்டு’ கோப்பாக அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: utsemagazine@gmail.com தகவல்: உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை – மின்னிதழ் செய்தி!
nandavanam10@gmail.com
பட்டினத்திற்குத் தொழிலுக்காய்
போன உன் வருகைக்காக
காத்துக்கிடக்கிறது பண்டிகை
பண்டிகைக்காய் வருகின்ற
உனக்கென்று என்னை முடிக்க
நிச்சயம் செய்த நாளிலிருந்து
உன் அம்மா மிகவும்
ஆதரவோடுதான் இருக்கிறாள்
என்னோடு