ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்

ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்பண்டைய மனிதன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களைப் பாகுபடுத்தி இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்தான். அக்காலத்தில் பாலைவனம் என்பது குறிஞ்சி, முல்லை நிலங்களில் ஏற்படும் வறட்சியின் காரணமாக உருவாகும் நில அமைப்பின் மாற்றமாகும். இது அரிதாகவே காணப்பட்டது. இன்று பாலையைத் தவிர மற்ற நிலங்களைக் காண்பது அரிதாக உள்ளது. தொழிற்புரட்சியின் விளைவு இயற்கை, செயற்கையாக மாறியது. எனவே ஓசோனில் ஓட்டை விழும் அளவிற்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இன்று பல ஆறுகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. சுப்ரபாரதிமணியன் ‘சாயத்திரை” புதினத்தில் திருப்பூர் நகரத்தின் தொழில் வளர்ச்சியையும், விளைவையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எடுத்துரைக்கின்றார்.

திருப்பூர்

இந்தியாவின் ‘டாலர்சிட்டி”, ‘பனியன் நகரம்”, ‘குட்டி ஜப்பான்”, என்று பலவாறு அழைக்கப்படும் நகரம் திருப்பூர் ஆகும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கானக் காரணம் ஆயத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிப்பதே ஆகும். அன்றைய நாட்களில் 100-க்கும் குறைவான தொழிற்சாலைகளே இருந்தன காலமாற்றத்தின் காரணமாக ‘1914-ல் 22 பின்னலாடைத் தொழிற்சாலைகள் இருந்தன. 1991-ல் கணக்கெடுப்பின்படி 2800 ஆக உயர்ந்துள்ளது”. (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன்இ ப.5) தற்போது இதன் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளது. ‘1940-களில் திருப்பூரில் சாயப்பட்டறை இல்லை. தற்போது 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் உள்ளன”. (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன,; ப.5) இந்நகரம் தொழில் வளர்ச்சியின் காரணமாகப் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்தாலும் சுகாதாரத்தில் அளவுக்கு அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. ‘திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் பின்னலாடைத் தொழிற்சாலைகளின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1985-ல் ரூ.19 கோடியாக இருந்தது. 1996-ல் இது ரூ.2,000 கோடியைத் தாண்டியது (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன் , ப.5) இதனால் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பூரை நோக்கி வருகின்றனர். மக்கள் நெருக்கடி உள்ள நகரமாகவும் மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நகரமாக திருப்பூர் உள்ளது.

Continue Reading →

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஜனவரி 2017

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!இது ஊக்கமென்னும் உரம் போட்டு அவரவர் திறமைகளை வளர்க்கும் போட்டி. இந்த ஜனவரி  மாதப் போட்டியின் தலைப்பு -(‘உனக்கு என்ன லாபம்?’)

போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது. போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.
கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்

போட்டி விதிகள்…
எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது

ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

கவிதைகள் அனுப்பும் போது தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே இருந்து போட்டிக்கவிதைகள் அனுப்ப வேண்டும் முடியாவிடின் தடாகம் (இன் பொக்ஸ் பக்கத்திற்கு)அனுப்பி வைக்கவும்

இன்னுமொருவர் முகவரியில் இருந்து அனுப்புவதையும்.முக நூல் இன் பொக்ஸ்க்கு,அனுப்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்

கவிதைகளை நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே thadagamkalaiilakkiyavattam@gm ail.com

Continue Reading →

கவிதை: புதிய வருடத்தில் புதிய விதி செய்க!

மண்பயனுற மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள்! !

வருடம் தொடங்கிடும்
புதிய காலையில் வாழ்க்கையில்
நம்பிக்கை தோன்றும்..
அந்த நொடியில் துளிர்த்திடும்
கனவு உயிர்பெற
இறையிடம் நெஞ்சம் கேட்கும்..

விலக முனைந்திடும்
கரிய நினைவுகள் உடனடி
வீழ்ந்திங்கு மாயும்..
அருவி போலொரு இனிய ஓசையை
ஆவலாய் இதயம் கேட்கும்..

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -முன்னுரை:
“இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி சங்க இலக்கியத்தைக் காணும்பொழுது “சங்க காலம் பொற்காலம்” எனும் கருத்து ஏற்புடைய கருத்தாகத் தோன்றவில்லை.பண்டையத் தொன்மரபு சித்தாந்த கோட்பாட்டினை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிலர் புனைந்துரைத்த விளக்கமாகவே இதனைக் காண முடியும்.ஏனெனில் சங்க இலக்கியங்கள் அக்காலத்தையப் பதிவுகளைச் செறிவாகத் தன்னகத்தே பெற்றுள்ளன.அப்பதிவுகளின் வெளிப்பாட்டினைக் காணும் பொழுது சில உண்மைகள் உரக்கச் சொல்ல முடியும்.அவ்வகையில் புறநானூற்றுப் பாடல்களில் வெளிப்படும் கைம்மைநோன்பு நோற்கும் பழக்கவழக்கங்கள் எத்தன்மையில் வெளிப்படுகிறது என்பதை அறியும் முகமாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

பழக்கவழக்கம் _ வரையறை:
ஒரு தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பது பழக்கம் ஆகும்.அவ்வாறு வந்தமைந்த நடத்தையானது தலைமுறை தலைமுறையாக மரபு வழி பின்பற்றபட்டு வருமாயின் அப்பழக்கம் வழக்கம் ஆகிறது.இப்படி மரபு என்ற சொல்லோடு தொடர்புடைய தன்மையதாகப் பழக்கவழக்கம் அமைகின்றது.

கற்பு – விளக்கம்:
சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.

1. தலைக்கற்பு கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல்
2. இடைக்கற்பு கணவன் இறந்ததும் ‘சான்றோர்’ முன்னிலையில் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விடுதல். அதாவது உடன்கட்டையேறி உயிர் விடுதல்
3. கடைக்கற்பு கணவன் மறைவுக்குப் பின்னர் உலகியல் இன்பங்களைத் துறந்து கைம்மை நோன்பு நோற்றல்.

Continue Reading →

ஆய்வு: பழமொழிநானூறு உணர்த்தும் சமுதாய நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுகின்றன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு
பழமொழி நூல் நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு காணப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.இந்நூல் பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துள்ளனர்.இந்நூல் பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.இந்நூலகத்துப் பண்டைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை,

பிண்டியின் நிழல் பெருமான் அடிவணங்கி
பண்டைப் பழமொழி நானூறும் -கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்து அமைத்தான்
இன்றுறை வெண்பா இவை (பழ.பாயி.1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

கவிதை: கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…

--யோ.புரட்சி,  வள்ளுவர்புரம், இலங்கை -பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.

மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.

அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.

இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.

உப்பு கறிக்குக் கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்கத் தவறாதே.

Continue Reading →