வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பீல் தமிழ் முதியோர் சங்கத்துக்கு வருகை

மாண்புமிகு வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பீல் தமிழ் முதியோர் சங்கத்துக்கு வருகைவெள்ளி 13 மேற்கத்திய மூட நம்பிக்கையின்படி ஒரு துரதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், ஜனவரி 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை. ஆனால் அத்தினம் மிசிசாகா ஒன்றாரியோவில் உள்ள பீல் தமிழ் முதியோர்; சங்கத்திற்கு; ஒரு முக்கியமான  நல்ல நாளாகும்.. இலங்கையில் வடக்கு மாகாணத்தின் கௌரவ முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், பீல் முது தமிழ்ர் சங்கத்திற்கு  இரு மணி நேரத்துக்கு வருகைதந்து, உறுப்பினர்களோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். இச் சங்கம் 1999 இல் நிறுவப்பட்டு 900 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தகுதியும், திறமையான முதியவர்களை  உள்ளடக்கியது. கௌரவ முதலமைச்சர் தமிழ் தேசிய உடையான வேட்டியோடும் நெற்றியில் குங்குமப்; பொட்டோடும் சமூகம் தந்து, தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டினார்.. அவரது முகத்தில் ஆன்மீகத் தன்மை பிரதிபலித்தது. குத்துவிளக்கேற்றி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி,  ; தேசிய க னேடிய கீதம் மற்றும் தமிழ் கீதம் பாடியபின் நிகழ்வு ஆரம்பித்தது, சில அறிமுக உரைகளின் பின்,  சங்கத்தின் தலைவர் வடமாகாணத்தில் உள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும்; பிரச்சனைகளை வரவேற்பு உரையில் குறிப்பிட்டுப் பேசினார்

தமிழில் உரையாற்றிய கௌரவ முதலமைச்சர் வட மாகாண  வளர்ச்சி தொடர்பான  எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் .கனடாவில் வதியும் ஈழத் தமிழர்கள்.; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் மிகவும் ஆர்வமாக உள்ளவர்களாக இருப்பதைத் தான் உணர்ந்தாக சொன்னார். தங்கள் சொந்த நிதி பங்களிப்பு மூலம் மாகாண  வளர்ச்க்கு பல உறுப்பினர்கள் முன் வந்தார்கள். ” உறவுப் பாலம் ” என்ற திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள முக்கிய நபர்களின் விருத்திக்கான திட்டத்துக்கு, புலம் பெயர்ந்த மக்களின் ஆதரவை  மாகாண மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டார். இதில் மார்க்கம்-முல்லைத்தீவு, பிராம்ப்டன்-வவுனியா இரட்டை நகரத்; திட்டங்கள் மூலம் நிரூபணம் ஆகிறது. காலப்போக்கில் இந்த இரட்டை நகரத்; திட்டங்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு நீடிக்க வேண்டும். இதே முயற்சியை கிழக்கு மாகாணசபையும் தொடரலாம் என்றார்.

Continue Reading →