திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி

ஓம் பூரிஇலக்கியச்சிந்தனை அமைப்பின்  விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன்  உரையாடியபொழுது,  ” இலங்கை  திரும்பு முன்னர் சென்னையில்  ஓடிக்கொண்டிருக்கும்  அர்த் சத்யா படத்தையும் பார்த்துவிட்டுச்செல்லுங்கள். ” என்றார்.

1981 இல் இரண்டு முக்கிய அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் பொலிஸார் நடத்திய வேட்டையில்  யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டதை  சித்திரிக்கும் ஒரு  இலட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையும் சுஜாதா எழுதியிருந்தார். சென்னையிலிருந்துகொண்டு அந்தக்கதையை எவ்வாறு எழுதினீர்கள் எனக்கேட்டபோது, அதற்கான  முன்கதைச்சுருக்கத்தை சொல்லிவிட்டே  அர்த்சத்யா  படத்தை அவசியம் பாருங்கள்  என்றார். அதற்கிடையில் வேறும் சில சுஜாதா ரசிகர்கள் அவரைச்சூழ்ந்துகொண்டதால்  மேற்கொண்டு அவருடன் உரையாட முடியவில்லை. எனினும் மேலும் உரையாடுவதற்கு தமது பெங்களுர் வீட்டுக்கு வாருங்கள்  என்று தமது முகவரியை எழுதித்தந்தார். ஆனால், என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவர் சொன்னதால் அர்த்சத்யா படத்தை பார்க்க விரும்பினேன். நண்பர் கவிஞர் அக்கினிபுத்திரனும் அந்தப்படத்தை அவசியம் பாருங்கள் என்று சொல்லியிருந்தார். இரண்டு முக்கியமான படைப்பாளிகள் சொன்னதன் பின்னர் அதனைத்தவறவிட  விரும்பவில்லை.

Continue Reading →